Published:Updated:

தீப்பிடித்து எரிந்ததா வாக்குப்பதிவு எந்திரங்கள்? - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!

விஷ்ணுராஜ் சௌ
தீப்பிடித்து எரிந்ததா வாக்குப்பதிவு எந்திரங்கள்? - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!
தீப்பிடித்து எரிந்ததா வாக்குப்பதிவு எந்திரங்கள்? - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!

தேர்தல் வாக்குப்பதிவுகளுக்குப் பிறகு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்ட அறையில் பலத்த பாதுகாப்புகளோடு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், இமாசலப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறை தீப்பிடித்து எரிந்தது போன்ற சிசிடிவி கோமராவில் பதிவாகிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீப்பிடித்து எரிந்ததா வாக்குப்பதிவு எந்திரங்கள்? - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!

இமாசலப் பிரதேசத்தில் உள்ள நான்கு மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நேற்று நடந்து முடிந்தது. இதில் 126 வாக்குச்சாவடிகளைச் சேர்ந்த 252 வாக்குப் பதிவு எந்திரங்கள் ரெக்காங் பியோ நகரில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இன்று காலை சீல் செய்யப்பட்ட அறையில் தீப்பிடித்து எரிவது போன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் ஓடியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தேர்தல் அதிகாரிகள் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளுடன் தீயணைப்பு அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துவிட்டு சீல் செய்யப்பட்ட  அறையைத் திறந்தனர். கேமராவானது நைட் விஷன் மூடில் இருந்ததாலும் அந்த அறையின் சுவர்கள் அழுக்கு படிந்திருந்ததும் தீப்பிடித்து எரிந்திருப்பதைப் போன்று காட்சியளித்துள்ளது. பின்னர் அவற்றைச் சரி செய்து மீண்டும் அறையை மூடி சீல் வைத்தனர்.

தீப்பிடித்து எரிந்ததா வாக்குப்பதிவு எந்திரங்கள்? - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்!

ஏற்கெனவே வாக்குப்பதிவு எந்திரங்களின் மீதான சர்ச்சைகள் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குப் பெண் அதிகாரி சென்றது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan