Published:Updated:

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார் மரணம்

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார் மரணம்
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார் மரணம்
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார் மரணம்

சென்னை: மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார் நேற்று நள்ளிரவு அவரது வீட்டில் வைத்து மரணம் அடைந்தார்.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார் லட்சுமி பழனியப்பன். இவர் கடந்த ஒரு

##~~##
மாத காலமாக மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு சென்னை, பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

தனது தாயாரின்  மறைவையடுத்து இன்று அமைச்சர் ப.சிதம்பரம் சென்னை வருகிறார். லட்சுமி பழனியப்பனின் இறுதி சடங்கு மயிலாப்பூரில் உள்ள சுடுகாட்டில் இன்று தகனம் செய்யப்படும் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

லட்சுமி அம்மாளின் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவி சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, லட்சுமி பழனியப்பனின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. அகர்வால் கண் மருத்துவமனைக்கு அவரது கண் தானமாக வழங்கப்பட்டுள்ளது.