Published:Updated:

”அதிகாலை 3 மணிக்குத்தான் முடிவுகள் தெரியும்!”- புதுச்சேரி தேர்தல் அதிகாரி சொல்லும் புதுக்கணக்கு

”அதிகாலை 3 மணிக்குத்தான் முடிவுகள் தெரியும்!”- புதுச்சேரி தேர்தல் அதிகாரி சொல்லும் புதுக்கணக்கு
”அதிகாலை 3 மணிக்குத்தான் முடிவுகள் தெரியும்!”- புதுச்சேரி தேர்தல் அதிகாரி சொல்லும் புதுக்கணக்கு

”அதிகாலை 3 மணிக்குத்தான் முடிவுகள் தெரியும்” என்று புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அருண் தெரிவித்திருக்கிறார்.

”அதிகாலை 3 மணிக்குத்தான் முடிவுகள் தெரியும்!”- புதுச்சேரி தேர்தல் அதிகாரி சொல்லும் புதுக்கணக்கு

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் 23-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்காக, லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் மற்றும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் தொகுதியான தட்டாஞ்சாவடி உள்ளிட்ட புதுச்சேரி மாவட்டத்தின் 23 தொகுதிகளின் வாக்குகளும் இங்கு எண்ணப்பட இருக்கிறது. புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் வெற்றியாளர் யார் என்பதை 24-ம் தேதிதான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்தத் தேர்தலில் முதல் முறையாக 1 தொகுதிக்கு 5 விவிபாட் இயந்திரங்கள் வைக்கப்பட்டன.

”அதிகாலை 3 மணிக்குத்தான் முடிவுகள் தெரியும்!”- புதுச்சேரி தேர்தல் அதிகாரி சொல்லும் புதுக்கணக்கு

அதில் பதிவான ஒப்புகை ரசீது சீட்டுகளும் எண்ணப்படுவதால், தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்வதில் காலதாமதமாகும் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் புதுச்சேரி, சிக்கிம் தொகுதிகளின் முடிவுகளைத் தெரிந்துகொள்ள நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு 2 நாள்கள் இருக்கும் நிலையில்,  வாக்கு எண்ணிக்கை மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அருண், நேற்று ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதுச்சேரியின் 23 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, வரும் 23-ம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும். முதலில் தபால் ஓட்டுகளும்,  அதன்பிறகு 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் சுற்றுவாரியாக எண்ணப்படும். இதற்காக, 2 மையங்களில் 8 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையில் வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

”அதிகாலை 3 மணிக்குத்தான் முடிவுகள் தெரியும்!”- புதுச்சேரி தேர்தல் அதிகாரி சொல்லும் புதுக்கணக்கு

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள், காலை 11 மணிக்கு வெளியாகும். ஒரு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி, 3 தொகுதிகளைக் கவனிப்பார் என்ற அடிப்படையில், மொத்தம் 15 விவிபாட் இயந்திரங்கள் எண்ணப்பட வேண்டும். ஒரு விவிபாட் எண்ணிக்கை முடிக்க ஒன்றரை மணி நேரமாகும். அதன்படி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்தாலும், விவிபாட் இயந்திரங்கள் எண்ணி முடித்தவுடன்தான் அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும். காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்தாலும், அடுத்த முடிவு வெளியாக இரவு 7 மணியாகிவிடும். தொடர்ந்து, இதேபோன்று மொத்தமாக 155 விவிபாட் இயந்திரங்களில் பதிவான ஒப்புகை ரசீதுகளை எண்ண வேண்டும் என்பதால், அதிகாலை 3 மணிக்குத்தான் ஒட்டுமொத்தமான முடிவுகளையும் தெரிந்துகொள்ள முடியும்.

”அதிகாலை 3 மணிக்குத்தான் முடிவுகள் தெரியும்!”- புதுச்சேரி தேர்தல் அதிகாரி சொல்லும் புதுக்கணக்கு

அதே நேரத்தில், தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றிபெற்றது என்பது காலை 11 மணிக்கெல்லாம் தெரிந்துவிடும். தமிழகத்தில், ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இதனால், அங்கு 30 விவிபாட் இயந்திரங்களின் ரசீதுகளை எண்ணினால் போதும். ஆனால், புதுச்சேரியில் 30 தொகுதிகள் இருப்பதால், 150 விவிபாட் இயந்திரங்களை எண்ண வேண்டியுள்ளது. அதேபோன்று, ஒரே நேரத்தில் அனைத்து விவிபாட் இயந்திரங்களைக் கொண்டுவந்து எண்ண முடியாது. ஒன்றன் பின் ஒன்றாக அறையில் இருந்து எடுத்து வர காலதாமதம் ஏற்படும். இரவு முழுவதும் இடைவெளி இல்லாமல் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உணவு, குடிநீர், தங்கும் வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை பணிக்கு வரும் அதிகாரிகள், கார் எடுத்துவரக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள், ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தைப் பார்வையிட அனுமதியில்லை. அதேபோல, செல்போனில் படம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

Vikatan