Published:Updated:

``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்!

``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்!
``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்!

இருட்டில் நடப்பது வெளிச்சத்துக்கா வரப்போகிறது என்று கணக்குப்போட்டு காய் நகர்த்திய வி.ஐ.பி-க்கள் பலரும், இப்போது வீடியோ வில்லங்கத்தில் சிக்கியுள்ளார்கள். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, தமிழகத்தில் உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இதில் சிக்கியுள்ளார்கள்.

ட்சி... அதிகாரம்...  அந்தஸ்து.. பணபலம் என்ற இலக்கைவைத்தே இன்றைய அரசியல் கட்டமைக்கபட்டுவருகிறது. இந்த இலக்கை அடையவேண்டும் என்ற வேட்கையே கிளைச் செயலாளர்முதல் மாவட்டச் செயலாளர்வரை அனைத்துக் கட்சிகளிலும் உள்ள அரசியல்வாதிகளுக்கு அடிநாத ஆசையாகவும் உள்ளது. ஆனால், இந்த இலக்கை அவர்கள் அடைந்தபிறகு அதைத் தக்கவைத்துக்கொள்வதில் பலரும் தடுமாற்றம் கண்டுவிடுவார்கள். அப்படி அரசியலில் உச்சத்தை அடைந்த பல அரசியல்வாதிகள் இப்போது வில்லங்க வீடியோக்களில் சிக்கித் தவித்துவருவது தமிழகத்தில் அதிகரித்துவருகிறது. 

``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்!

(Model Picture)

ஆட்டோவில் பிரசாரம், வீடுவீடாகச் சென்று ஓட்டுக்கேட்ட காலம் மாறி, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று பிரசார முறைகளிலும், தங்களைப் பற்றிய பிரசாரங்களை வெளியிடுவதிலும் இந்தத் தொழில்நுட்பத்தையும் நவீன நுட்பத்தையும் கையாண்டுவருகிறார்கள். அந்தத் தொழில்நுட்பமே இப்போது அந்த அரசியல் வி.ஐ.பி-க்களுக்குச் சிக்கலையும் ஏற்படுத்திவருகிறது. சமீபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த  மூத்த அமைச்சர் ஒருவர், பெண் ஒருவரின் தாயுடன் பேசிய உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆறுமாதங்களுக்கு முன்பே அந்த ஆடியோவைப் பதிவுசெய்த பெண்ணின் தரப்பு, அந்த அமைச்சரிடம் நடத்திய பேச்சுவார்த்தை ஒத்துவராமல் போனதால் உடனடியாக மாற்றுக் கட்சியினர் மூலம் அந்த ஆடியோ வெளியிடச் செய்து அதிர்ச்சிகொடுத்தனர். கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது முன்னாள் அமைச்சர் ஒருவர், பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த வீடியோவைப் பல லட்ச ரூபாய்க்கு எதிர்த்தரப்பிடம் விற்றுவிட்டு அந்தப் பெண் அயல்நாடு பறந்துவிட்டார். 

இந்நிலையில், சமீபத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஒரு பிரபல கட்சியின் வேட்பாளர் ஒருவர், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சி அந்தப் பெண்ணின் வீட்டில் வைக்கப்பட்ட ரகசிய கேமரா மூலம் பதிவுசெய்யபட்டது. அந்த வீடியோவையும் தேர்தல் நேரத்தில் வெளியிட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இப்போது அரசியல்வாதிகளுக்கு இந்தப் பெண்கள் சல்லாபத்தினால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுவருகிறது. நம்மிடம்  ஆளும்கட்சியைச் சேர்ந்த தொழில்நுட்ப நபர் பகிர்ந்துகொண்ட தகவல் இதுதான். 

``பணம், பதவி என்று வந்தபிறகு பெரும்பாலான அரசியல்வாதிகள் அதை அனுபவிக்க அடுத்தகட்டமாக நாடுவது பெண்களைத்தான். ஒவ்வோர் அரசியல் புள்ளியும் எந்தப் பெண்ணுடன் எங்குச் சந்திக்கிறார், தனிமையில் இருக்கிறார் என்கிற விவரம் அந்தப் புள்ளியின் கார்டிரைவர் மற்றும் அவருக்கு நெருக்கமான ஒரு சிலருக்குக் கண்டிப்பாகத் தெரியும். அந்த நபர்களைவைத்தே இப்போது பலரும் செக் வைத்து வருகிறார்கள். ஏன்? இப்போது தமிழகத்தில் அமைதிக்குப் பெயர்போன ஆளும்கட்சி, அதிகாரத்தில் இருக்கும் ஒரு நபரின் தம்பி, சென்னையில் உள்ள பிரபல மதுபான விடுதியில் மது அருந்துகிறார். அவர் அருகில் அரைகுறை ஆடையுடன் மாடலாக ஒரு பெண் அமர்ந்து மதுபானம் அருந்துகிறார். அந்தப் பெண் கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழக இளைஞர்களைத் தன்வயப்படுத்திய நடிகை. அவருடன் மது அருந்தியவாறே, அந்த நபர் செல்லமாக அந்த நடிகையைக் கொஞ்சுவதும், கட்டிப்பிடிப்பதும் என்று சேட்டைகள் செய்வதும் போன்ற வீடியோ அந்தப் புள்ளியுடன் இருந்தவராலேயே எடுக்கப்பட்டது. கடைசியாக, அதைவைத்தே அந்தப் புள்ளியிடம் பல காரியங்களைச் சாதித்துக்கொண்டுள்ளார்கள்.

அதேபோல், தமிழக அமைச்சர் ஒருவருடன், பெண் ஒருவர் நெருக்கமாகப் பல வருடங்கள் இருந்துள்ளார். இந்த நெருக்கம் எப்போது வேண்டுமானாலும் கட் ஆகிவிடும் என்று உஷாரான அந்தப் பெண், அமைச்சருடன் தனிமையில் இருந்தபோது தனது செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துவைத்துள்ளார். அவர் எதிர்பார்த்துபோலவே, அந்த அமைச்சர் அந்தப் பெண்ணைவிட்டு விலக முற்பட, அந்த வீடியோவை வைத்து இப்போது அமைச்சருக்கு ஆட்டம்காட்டிவருகிறார்.

அமைச்சர் ஒருவர், தனது மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் அணிப் பிரமுகருடன் பல ஆண்டுகள் நெருக்கமாக இருந்தார். இந்த நெருக்கத்தைக் காசாக்க நினைத்த அந்தப் பெண்ணின் கணவர், மனைவி அமைச்சருடன் தனிமையில் இருந்தபோது அதை மறைவாக வீடியோ எடுத்துவைத்துள்ளார். இது அந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் தெரிந்துவிட்டதால், அந்த அமைச்சர் இப்போது யாரையும் அதிகாரம் செய்ய முடியாமல் திணறுகிறார்” என்று சிரித்துக்கொண்டே நம்மிடம் சொல்கிறார்.

இதுமட்டுமல்ல, டெல்லிக்குச் செல்லும் எம்.பி-க்களில் பலர், அங்குச் சத்தமில்லாமல் தனிக் குடித்தனம் நடத்திவருகிறார்கள். இவர்களில் பலரும் இப்போது வீடியோ விவகாரத்தில் சிக்கியுள்ளார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பெண் எம்.பி ஒருவரோடு, ஆண் எம்.பி ஒருவர் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாயின. அந்தப் புகைப்படங்கள் எல்லாம் சாம்பிள்தான். அதுபோன்று நிறைய வீடியோக்கள் சிலரிடம் உள்ளன என்கிறார்கள், விவரமறிந்தவர்கள். தி.மு.க-வின் தலைமைக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஒருவர், மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சல்லாபத்தில் ஈடுபடுவது வழக்கம். அந்தப் பெண் அதையே வீடியோவாக எடுத்துவைத்து, இப்போது அந்த முன்னாள் அமைச்சரை படாதபாடு படுத்திவருகிறார். 

``வில்லங்க வீடியோக்களால் விழிபிதுங்கும் வி.ஐ.பிக்கள் ”- உஷார் ரிப்போர்ட்!


பின்வாசல் வழியாக வந்தால் யாருக்கும் தெரியாது? இருட்டில் நடப்பது வெளிச்சத்துக்கா வரப்போகிறது என்று கணக்குப்போட்டு காய் நகர்த்திய வி.ஐ.பி-க்கள் பலரும், இப்போது வீடியோ வில்லங்கத்தில் சிக்கியுள்ளார்கள். அரசியல்வாதிகள் மட்டுமல்ல, தமிழகத்தில் உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் இதில் சிக்கியுள்ளார்கள். முதல்வருக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர், தனக்குக் கீழ் பணிபுரியும் பெண் ஒருவரோடு அடிக்கடி கிழக்கு கடற்கரைச் சாலை பக்கம்செல்வது வழக்கம். வழக்கமான சந்திப்பையே வசதிக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த அந்தப் பெண், தனிமையில் இருக்கும் காட்சியை கேசுவலாக செல்ஃபி எடுத்துள்ளார். உல்லாச மோகத்தில் அதை அப்போது கண்டுகொள்ளவில்லை, அந்த அதிகாரி. ஆனால், அடுத்த சில மாதங்களில் இருவருக்குமிடையே மனகசப்பு வந்து, அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, அந்தப் பெண்ணை உதாசீனப்படுத்த, வாட்ஸ் அப்பில் தாம் எடுத்த செல்ஃபி படத்தை அனுப்பி அதிரவைத்துள்ளார். அதேபோல் மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும், சென்னையில் உள்ள முக்கிய அரசு மருத்துமனையில் இருக்கும் பெண் மருத்துவருக்கும் இடையே இருந்த நெருக்கம் அவரது குடும்பத்திலேயே பூதாகாரத்தை ஏற்படுத்திவிட்டது. அதற்குக் காரணம் இருவரும் உல்லாசப் பயணம் மேற்கொண்டபோது எடுத்த புகைப்படத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது செல்போனில் அழிக்காமல் வைத்திருந்தார். அதை எதார்த்தமாகப் பார்த்துவிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவி, பெண் மருத்துவர்மீது மண்ணை வாரி தூற்றியுள்ளார். இப்படி அரசியல்வாதிகள்முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்வரை பலரும் இப்போது வீடியோ வில்லங்கத்தில் சிக்கிவருவதால், தனிமையை விரும்பிச் செல்லும்போது செல்போன் கொண்டுவரவேண்டாம் என்ற கண்டிஷனோடு சந்திப்பை நடத்திவருகிறார்கள். 

தமிழகத்தில் மட்டும்தான் இந்நிலை அல்ல...  தந்திர பூமியான டெல்லியில் தந்திரமாக இந்த யுக்தியைக் கடைப்பிடித்து, பல பெண்கள் மிகப்பெரிய நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான ஒப்பந்தங்களைக்கூட ஈஸியாக முடித்துக் கொடுக்கிறார்கள். வீடியோவில் சிக்கிய வி.ஐ.பி-க்கள் வழியில்லாமல் கேட்பதைச் செய்துகொடுத்துவிட்டுச் செல்லும் பரிதாபம் இப்போது நடந்துவருகிறது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு