Published:Updated:

பிரக்யாவுக்கு சாதகமான கருத்துக்கணிப்பு - பழைய வழக்கைக் கையில் எடுக்கும் காங்கிரஸ்!

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் அதிகம் சர்ச்சைக்குள்ளானவர் சாத்வி பிரக்யா. சமீபத்தில் கமலின் கோட்சேவைப் பற்றி பேசிய பேச்சு சர்ச்சைக்குள்ளான நிலையில் அதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக, ``கோட்சே ஒரு தேசப் பக்தர்” எனக் கருத்து தெரிவிக்க அது சர்ச்சையை ஏற்படுத்தியது. மாலோகன் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்தவர், ஜாமீனில் வெளிவந்த நிலையில் பி.ஜே.பி-யில் இணைந்தார். தற்போது, மத்தியப்பிரதேசத்தின் போபால் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக அவர் களத்தில் இருக்கிறார்.

பிரக்யாவுக்கு சாதகமான கருத்துக்கணிப்பு - பழைய வழக்கைக் கையில் எடுக்கும் காங்கிரஸ்!

தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பில் போபால் தொகுதியில் பிரக்யா வெற்றி பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது. போபால் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியுமான திக் விஜய் சிங் போட்டியிட்டுள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று கமல்நாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சாத்வி பிரக்யா மீதான வழக்குகளை மீண்டும் விசாரிக்க உள்ளதாக அம்மாநில சட்டத்துறை அமைச்சர் பி.சி.சர்மா குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள பி.ஜே.பி-யினர், ``திக் விஜய்சிங்கை எதிர்த்து சாத்வி எதிர்த்துப் போட்டியிட்டதால் அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது'' எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த சுனில் ஜோஷி என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு கொல்லப்பட்டார். குருஜி என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் அவர், பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக்கில் சாத்வி பிரக்யா உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்தியப்பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

Vikatan