Published:Updated:

ஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா! - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி! 

ஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா! - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி! 
ஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா! - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி! 

`13 தொகுதிகளில் உறுதியாக வெற்றி கிடைக்கும்' என நம்புகிறார் எடப்பாடி. பன்னீரின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், அவருடைய டெல்லி தொடர்புகளை முறியடிக்கும் வேலைகளையும் கொங்கு மண்டலப் புள்ளிகள் தொடங்கிவிட்டனர்

க்ஸிட் போல் முடிவுகளையே தேர்தல் முடிவுகளாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் பா.ஜ.க தொண்டர்கள். `தமிழக சூழல்களைக் கவனித்து வரும் அமித் ஷா டீம், தி.மு.க.வின் முக்கியப் பிரமுகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு ஸ்டாலின் தரப்பில் பிடிகொடுக்கவில்லை' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 

ஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா! - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி! 

நாடாளுமன்றத்துக்கான 17-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து மே 19 அன்று நிறைவடைந்தது. அன்று மாலை வெளியான எக்ஸிட் போல் முடிவுகளில் பா.ஜ.க-வுக்கு அதிக இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதாக சில ஊடகங்கள் அறிவித்தன. இந்தத் தகவல் பங்குச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மே 20 அன்று காலை முதலே பங்குச் சந்தை நிலவரங்கள் புதிய உச்சத்தைத் தொட்டன. அதானி குழுமத்தின் பங்குகள் உயரத்தைத் தொட்டன. `மீண்டும் மோடி' என்ற முழக்கமே, இதற்குக் காரணம் என்ற தகவலும் பரவியது. இந்தத் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பது அரசியல் வல்லுநர்களின் கருத்தாக இருப்பதால், வாக்கு முடிவுகளுக்குப் பிறகு மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதிலும் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. நேற்று டெல்லி அசோகா ஓட்டலில் பா.ஜ.க கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு விருந்து கொடுத்தார் அமித் ஷா. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அன்புமணி, கிருஷ்ணசாமி, சரத்குமார் உள்ளிட்டவர்களும் இடம்பெற்றனர். 

ஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா! - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி! 

``எடப்பாடி பழனிசாமியைவிட பா.ஜ.க உயர்மட்ட நிர்வாகிகளிடம் அதிக நெருக்கம் காட்டி வருகிறார் பன்னீர்செல்வம். வாரணாசியில் பிரதமர் மோடியின் வேட்புமனு நிகழ்வில் பங்கெடுத்தது, பியூஷ் கோயல் உள்ளிட்டவர்களுடன் குடும்பத்துடன் விவாதித்தது போன்ற சம்பவங்கள் கொங்கு கேபினட்டுகளுக்குக் கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. `தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவிடுவார் பன்னீர்' எனத் தங்க.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டவர்கள் கொளுத்திப் போட்டதை பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. நேற்று நடந்த டெல்லி சந்திப்பிலும் தனக்கான செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் வேலைகளில் ஆர்வம் காட்டினார் பன்னீர்செல்வம்" என விவரித்த அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகள், 

ஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா! - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி! 

``டெல்லிக்கு முதல்வரும் துணை முதல்வரும் தனித்தனியாகத்தான் சென்றனர். அமித் ஷா விருந்து கொடுத்த ஓட்டலிலேயே தங்கிவிட்டார் ஓ.பி.எஸ். ஆனால், எடப்பாடியோ தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தனக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கு விரும்புகிறார் ஓ.பி.எஸ். அதற்கான லாபிகளை டெல்லி வட்டாரத்தில் தொடங்கிவிட்டார். ஆட்சியைக் காப்பாற்றுவதற்குத் தேவையான 10 எம்.எல்.ஏக்களைப் பிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் எடப்பாடி. எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்தும் தனக்கு எதிராக இருப்பதைப் பற்றி முதல்வர் கண்டுகொள்ளவில்லை. நாடாளுமன்றத் தேர்தலைவிடவும் 22 தொகுதி இடைத்தேர்தலில்தான் அவர் அதிக ஈடுபாட்டைக் காட்டினார். தொடர் பிரசாரத்தால் உடல் நலிவுற்றாலும் தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் இருந்தார். இதன் காரணமாக, `13 தொகுதிகளில் உறுதியாக வெற்றி கிடைக்கும்' என நம்புகிறார். பன்னீரின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், அவருடைய டெல்லி தொடர்புகளை முறியடிக்கும் வேலைகளையும் கொங்கு மண்டலப் புள்ளிகள் தொடங்கிவிட்டனர்" என்கின்றனர். 

ஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா! - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி! 

அதேநேரம், எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்தும் தி.மு.க-வுக்குச் சாதகமாக இருப்பதாக வெளியாகும் தகவல்களையும் பா.ஜ.க தரப்பினர் கவனித்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்னரே, தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்களிடம் பேசிய டெல்லி பா.ஜ.க நிர்வாகிகள் சிலர், `தேர்தலுக்குப் பிறகு நீங்கள் எங்களை ஆதரிக்க வேண்டும். உங்களுக்குத் தேவையானதைச் செய்து தருகிறோம்' எனக் கூறியிருந்தனர். இதற்கு ஸ்டாலின் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக, ஸ்டாலினுக்கு நெருக்கமான புள்ளி ஒருவரின் ஸ்பெயின் பயணத்திலும் சில விஷயங்கள் பேசப்பட்டன. `தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உட்பட நீங்கள் விரும்பியது நடக்கும். மோடிக்கு ஆதரவு கொடுத்தால் போதும். உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் கேளுங்கள்' எனப் பா.ஜ.க முக்கியப் புள்ளி ஒருவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதற்குப் பதில் கொடுத்த ஸ்டாலின் தரப்பினர், `மக்களவைத் தேர்தல் பிரசாரம் தொடங்குவதற்கு முன்பே, `ராகுல்காந்தியே வருக...நல்லாட்சி தருக' என அழைப்புவிடுத்துவிட்டார் ஸ்டாலின். மாநிலக் கட்சிகளிலேயே முதன்முதலாக ராகுலை ஆதரித்துப் பேசியது நாங்கள்தான். அப்படியிருக்கும்போது, உங்களை ஆதரிப்பது எங்கள் மீதுதான் விமர்சனத்தைக் கொண்டு வரும். தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும். அதன்பிறகு பேசலாம்' எனக் கூறிவிட்டனர். 

ஸ்டாலினைக் கரைக்கப் போராடும் அமித் ஷா! - பன்னீரைக் கண்காணிக்கும் எடப்பாடி! 

`அ.தி.மு.க-வை நம்புவதைவிட தி.மு.க தரப்பைக் கரைய வைக்க வேண்டும்' என்பதில்தான் டெல்லி பா.ஜ.க மும்முரம் காட்டுகிறது. தேர்தல் விதிமுறை மீறல், வாக்கு எந்திரக் குளறுபடி என 22 எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டம் போடும் சூழலும் நேற்று உருவானது. பங்குச் சந்தை ஏற்றத்தை முன்வைத்தே, கூட்டணிக் கட்சிகளை எந்த வகையிலாவது வளைத்து மீண்டும் ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் விழிப்பைப் படரவிட்டுள்ளன மாநிலக் கட்சிகள். `ராகுலா...மோடியா?' என்ற முழக்கத்துக்கான விடையை அறிந்து கொள்ள ஆவலாகக் காத்திருக்கின்றனர் வாக்காளர்கள். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு