Published:Updated:

கோவாவில் பிஜேபி கூட்டம்: அத்வானி 'புறக்கணிப்பால்' சலசலப்பு!

கோவாவில் பிஜேபி கூட்டம்: அத்வானி 'புறக்கணிப்பால்' சலசலப்பு!
கோவாவில் பிஜேபி கூட்டம்: அத்வானி 'புறக்கணிப்பால்' சலசலப்பு!
கோவாவில் பிஜேபி கூட்டம்: அத்வானி 'புறக்கணிப்பால்' சலசலப்பு!

புதுடெல்லி: கோவாவில் இன்று நடைபெறும் பிஜேபி நாடாளுமன்ற வாரிய கூட்டத்தில், மூத்த தலைவர் அத்வானி பங்கேற்காததால், அக்கட்சி வட்டராத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

உடல் நிலைக் காரணமா தனது இன்றைய பயணத்தை அத்வானி ரத்து செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்படுவதால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முறைப்படி அறிவிக்கும் நடவடிக்கையை ஒட்டியே இன்றைய கூட்டம் இருக்கும் என்று கருதப்படும் நிலையில், அத்வானியின் புறக்கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அதேவேளையில், அத்வானி நாளை தொடங்கும் பிஜேபி செயற்குழு கூட்டத்தில் பங்கேற்பார் என்று பிஜேபி அறிவித்துள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்தா கோவா கூட்டங்களில், நாடாளுமன்றத் தேர்தல், பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முதலியவற்றில் வியூகங்கள் வகுப்பது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பிஜேபியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.