Published:Updated:

நாளை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்...! - செய்ய வேண்டியது என்ன?

நாளை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்...! - செய்ய வேண்டியது என்ன?
நாளை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்...! - செய்ய வேண்டியது என்ன?

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பான பரபரப்புக்கு மத்தியில், காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறவிருக்கிறது.

நாளை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்...! - செய்ய வேண்டியது என்ன?

காவிரி நீரைச் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக்குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் இந்த இரு அமைப்புகளிலும் இடம்பெற்றுள்ளனர். காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த டிசம்பர் 3-ம் தேதி கூடியது. ஒழுங்காற்றுக்குழு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி கூடியது. 2019-ம் ஆண்டில் இந்த இரு அமைப்புகளின் கூட்டமும் நடைபெறாமல் இருந்த சூழலில், காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் கூட்டம் நாளை நடக்கவிருக்கிறது. 

நாளை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம்...! - செய்ய வேண்டியது என்ன?

இதுகுறித்து காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசனிடம் பேசினோம். ``காவிரி மேலாண்மை ஆணையம்போல நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகளுக்கு ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த ஆணையங்கள் முழு நேரமாகச் செயல்படுகின்றன. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் முழுமையான அமைப்பாக இல்லை. ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் வேறு துறைகளில் முழுநேரப் பணியைச் செய்துவருகிறார்கள். இவர்களுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் என்பது கூடுதலான ஒரு பணி. இந்த நிலையை மாற்றி, இந்த ஆணையத்துக்கு முழுநேரத் தலைவரையும், உறுப்பினர்களையும் நியமிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ஆணையத்தின் கூட்டம் நடைபெற வேண்டும். ஆனால், தொடர்ச்சியாக இது கூடுவது கிடையாது. ஒவ்வொரு மாதமும் இவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியிருக்கிறது. அதன்படி இந்த ஆண்டில் ஜனவரியில் 3 டி.எம்.சி., பிப்ரவரியில் 2.3 டி.எம்.சி., மார்ச் மாதம் 2.3 டி.எம்.சி., ஏப்ரலில் 2.3 டி.எம்.சி., மே மாதம் 2.3 டி.எம்.சி என 19.5 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்குத் தந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு சொட்டு தண்ணீர்கூட திறந்துவிடவில்லை. 30 அடி, 40 அடி வெறும் சாக்கடை நீர்தான் வந்துகொண்டிருக்கிறது. தண்ணீரைத் திறந்துவிடுமாறு ஆணையம் சொல்லவில்லை.

இந்த ஒழுங்காற்றுக்குழுவுக்கு பெங்களூரில் தலைமையகம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அதை அமைக்கவில்லை. கிருஷ்ணராஜ சாகர், ஹாரங்கி உள்ளிட்ட நான்கு அணைகளில் அல்லாமல், வேறு இடங்களில் தண்ணீரை கர்நாடகம் பதுக்கிவைக்கிறது. அதை ஆணையம் ஆய்வுசெய்து கண்டறிய வேண்டும். மாதம் தோறும் தமிழகத்துக்கான தண்ணீரை கர்நாடகம் திறந்துவிடுவதை நாளை நடைபெறும் ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் உறுதிசெய்ய வேண்டும்” என்றார்.

Vikatan