Published:Updated:

சோனியா உதவியாளர் மீதான சொத்து குவிப்பு வழக்கை கைவிட்டது சி.பி.ஐ

விகடன் விமர்சனக்குழு
சோனியா உதவியாளர் மீதான சொத்து குவிப்பு வழக்கை கைவிட்டது சி.பி.ஐ
சோனியா உதவியாளர் மீதான சொத்து குவிப்பு வழக்கை கைவிட்டது சி.பி.ஐ
சோனியா உதவியாளர் மீதான சொத்து குவிப்பு வழக்கை கைவிட்டது சி.பி.ஐ

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி  உதவியாளர் மீதான சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ. கைவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நேர்முக செயலாளராக பணியாற்றியவர் வின்சென்ட் ஜார்ஜ். காங்கிரஸ் மேலிடத்தின் அதிக செல்வாக்குள்ள நபராக கருதப்படும் இவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நேர்முக செயலாளராகவும் முக்கிய அரசியல் ஆலோசகராகவும் உள்ளார்.

இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக வின்சென்ட் சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. கர்நாடகா, டெல்லி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் இவருக்கு சொத்துகள் இருப்பதாகவும், டெல்லி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பண்ணை வீடு உள்ளதாகவும் அமலாக்கத்துறை துணை இயக்குனர் அசோக் அகர்வால் என்பவர் ஜார்ஜ் மீது குற்றம் சாட்டினார்.

##~~##
இதையடுத்து, 2001ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியின் போது ஜார்ஜ் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது, அவரது சொத்துகள் குறித்து விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள் வங்கி கணக்குகளில் இருந்த ஒன்றரை கோடியையும் முடக்கினர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜார்ஜ் மீது 2001ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 12 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக ஜார்ஜ் சொத்து சேர்த்தார் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீதான வழக்கை சி.பி.ஐ. கைவிட்டதாகவும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.