Published:Updated:

கூடங்குளம் அணுஉலை மோசடியை விசாரிக்க உதவுங்கள்: பா.ஜ.க.வுக்கு போராட்டக்குழு கடிதம்

விகடன் விமர்சனக்குழு
கூடங்குளம் அணுஉலை மோசடியை விசாரிக்க உதவுங்கள்: பா.ஜ.க.வுக்கு போராட்டக்குழு கடிதம்
கூடங்குளம் அணுஉலை மோசடியை விசாரிக்க உதவுங்கள்: பா.ஜ.க.வுக்கு போராட்டக்குழு கடிதம்
கூடங்குளம் அணுஉலை மோசடியை விசாரிக்க உதவுங்கள்: பா.ஜ.க.வுக்கு போராட்டக்குழு கடிதம்

நெல்லை: கூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டத்தில் நடந்த மோசடி தொடர்பான விவகாரத்தை வெளிக்கொண்டு வர உதவுமாறு போராட்டக்குழுவின் சார்பில் பா.ஜ தலைமைக்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர் இடிந்தகரையில் கடந்த 650 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. அணு உலைக்கு எதிராக போராடி வரும் சுப.உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், அணு சக்திக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும் பா.ஜ கட்சித் தலைமைக்கு போராட்டக் குழுவின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

அதில், ‘‘மக்களுக்கு பேராபத்தை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும் கூடங்குளம் அணு உலை தொடர்பாகவும் இந்த விவகாரத்தில் இந்திய அணு சக்தி கழகத்தின் முறைகேடுகளையும் அதனால் மக்களுக்கு ஏற்பட இருக்கும் ஆபத்தையும் வெளிக்கொண்டு வர உதவுவது தொடர்பாக இந்த கடிதத்தை எழுதுகிறோம்’’ என குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும், ’’கூடங்குளம் அணு உலைக்கு ரஷ்யாவை சேர்ந்த ஜியோ-போல்ஸ்டாக் என்ற நிறுவனத்திடம் இருந்து தொழில்நுட்ப கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த நிறுவனம் தரமற்ற பொருட்களை இந்தியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு ரஷ்யாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவரான செர்ஜி ஷுடோவ் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த அளவுக்கு தரமற்ற கருவிகளை கொண்டு கூடங்குளம் அணு உலை அமைக்கப்பட்டு இருப்பதால் பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. இது தவிர சர்ச்சைக்குரிய ரஷ்ய நிறுவனத்துக்கு இந்திய அணுசக்தி துறையை சேர்ந்த சிறப்பு செயலாளர் ஏ.பி.ஜோஷி, துணை செயலாளர் நினியன் குமார், அணு சக்தி கமிஷனின் மேனேஜர் டிழகோஷ் பாடி ஆகியோர் பலமுறை சென்று, இந்திய அரசு சார்பாக பல ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள்.

கூடங்குளம் அணுஉலை மோசடியை விசாரிக்க உதவுங்கள்: பா.ஜ.க.வுக்கு போராட்டக்குழு கடிதம்

ஜியோ-போல்ஸ்டாக் நிறுவனத்திடம் இருந்து தரமற்ற தொழில் நுட்ப கருவிகளும் உதிரிப்பாகங்களும் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதால் கூடங்குளம் அணு உலை முழுமையாக பாதுகாப்பு இல்லாதது. ஆபத்தை விளைவிக்க கூடியது. குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

இந்த அணு உலை விவகாரத்தில் மத்திய அரசு, அணு சக்தி துறை, அணு சக்தி கழகம் ஆகியவை முன்னுக்கு பின் முரணான பல தகவல்களை கொடுத்து மக்களை குழப்பி வருகிறார்களே தவிர மக்களின் அச்சத்தை போக்கும் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

##~~##
ஆகவே, பா.ஜ சார்பில் இந்த விவகாரத்தில் தலையிட்டு கூடங்குளம் அணு உலையில் நடந்து இருக்கும் மோசடிகள் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் கூடங்குளம் அணு உலையை சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் மாற்று எரிசக்தி பூங்காவாக மாற்ற வலியுறுத்த கோருகிறோம். இதன் மூலம் நாட்டின் தற்போதைய மற்றும் வருங்கால சந்ததிக்கு உதவ வலியுறுத்துகிறோம்’’ என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளனர். 
ஆண்டனிராஜ்

படம்: எல்.ராஜேந்திரன்