Published:Updated:

அகிலேஷும், மாயாவதியும் வீழ்ந்தது எதனால்....?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அகிலேஷும், மாயாவதியும் வீழ்ந்தது எதனால்....?
அகிலேஷும், மாயாவதியும் வீழ்ந்தது எதனால்....?

இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் முன்னிலை எடுத்திருக்கிறது, பி.ஜே.பி. ஒழுங்காக ஒற்றுமையாக இருந்திருந்தால் மாநிலக் கட்சிகளும் காங்கிரஸும் ஓரளவுக்கு மரியாதையான வெற்றியைப் பெற்றிருக்கலாம். ஊர் வாயையும் அடைத்திருக்கலாம்.

தேர்தல் என்பது எண்களின் ஆட்டம். ஒரு ஓட்டில் தோற்பவனும் இங்கிருக்கிறான், ஒரு லட்சம் ஓட்டில் வெல்பவனும் இங்கிருக்கிறான். ஆனால் இது, அத்தைக்கும் மருமகனுக்கும் கடைசிவரை புரியவில்லை. `எழுபத்தாறும் எங்களுக்கே’ என்று ஆர்ப்பரித்தவர்கள், இப்போது, 30 இடங்களுக்கே முக்கிக்கொண்டிருக்கிறார்கள். வேறு யார், உத்தரப்பிரதேசத்தில் தப்புக் கணக்கு போட்ட பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும், சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் அகிலேஷூம்தான்!

அகிலேஷும், மாயாவதியும் வீழ்ந்தது எதனால்....?

முதலில் முடிவுகளைப் பார்த்துவிடலாம். வாக்கு எண்ணிக்கை நாளின் பிற்பகல் நிலவரப்படி, உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் இருக்கும் 80 தொகுதிகளில், 60 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது பி.ஜே.பி. இது, கிட்டத்தட்ட 75 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்களாகும். வாக்கு சதவிகிதத்திலும் பெரிதாக சரிவைச் சந்திக்கவில்லை, அவர்கள். மாயாவதி - அகிலேஷின் மெகா கூட்டணியோ, பிரியங்காவின் புயல் பிரசாரமோ, அவர்களை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ’பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் எனக்கு வரும்’ என்று கணித்தார் அகிலேஷ். ‘தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் எனக்குத்தான்’ என்று கனவு கண்டார் மாயாவதி. `எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உயர்சாதி வாக்குகள் எங்களுக்குத்தான்’ என்று, கணக்குச் சொன்னது காங்கிரஸ். ஆனால், அத்தனையும் பொய்யாய் போயிருக்கிறது. நேற்று வந்த யோகியின் வியூகத்தில் வீழ்ந்திருக்கின்றன, முப்பெரும் கட்சிகள்.

வாரணாசியில், 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. லக்னோவில் ராஜ்நாத் சிங்கும் வெற்றியை நெருங்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், அமேதியில் ஸ்மிருதி இரானியிடம் தோற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதைவிடப் பெரிய களங்கம், காங்கிரஸ் தலைவருக்கு வாழ்நாளில் ஏற்படப்போவதில்லை. இவரின் இந்த நிலைக்கு ஒரேயொரு காரணம்தான்... அது ஒற்றுமையின்மை!

அகிலேஷும், மாயாவதியும் வீழ்ந்தது எதனால்....?

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானைப் போல, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் வலுவான கட்சி இல்லைதான். ஆனாலும், ஐந்திலிருந்து ஏழு சதவிகிதம் வரைக்கும், வாக்குகளைக் கொண்டிருக்கும் கட்சியாக இருக்கிறது. இதை மதிக்க மறந்தார்கள் அகிலேஷூம் மாயாவதியும். `காங்கிரஸ் எங்களுக்கு வேண்டாத சுமை’ என்று எகத்தாளம் பேசினார்கள். 

கணக்குச் சொல்வது கடினம். அத்தனைமுறை, மாயாவதியுடனும் அகிலேஷூடனும் பேச்சுவார்த்தை நடத்தினார் ராகுல் காந்தி. ஆனால், அத்தையும் மசியவில்லை, மருமகனும் மடங்கவில்லை. `எங்களால்தான் உங்களுக்கு லாபம். உங்களால் எங்களுக்கு லாபம் அல்ல’ என்று, கந்துவட்டிக் கடைக்காரன் மாதிரி கடுகடுத்தார்கள். அவர்களேனும் எதிராளியை வீழ்த்தும் அளவுக்கு வியூகம் அமைத்தார்களா என்றால், அதுவும் இல்லை. மோடியை விமர்சிப்பதைவிட, ராகுலை விமர்சிப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவழித்தார்கள் இருவரும். இதுபோக, `சந்தர்ப்பவாதக் கூட்டணி' என்று, பி.ஜே.பி முன்னெடுத்த பிரசாரத்தையும் முறியடிக்க முடியவில்லை இருவராலும்.

அகிலேஷும், மாயாவதியும் வீழ்ந்தது எதனால்....?

இருபதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் முன்னிலை எடுத்திருக்கிறது, பி.ஜே.பி. ஒழுங்காக ஒற்றுமையாக இருந்திருந்தால் ஓரளவுக்கு மரியாதையான வெற்றியைப் பெற்றிருக்கலாம். ஊர் வாயையும் அடைத்திருக்கலாம். ஆனால், அதற்கு மாயாவதி - அகிலேஷ் ஆகியோரின் ஆணவம் இறுதிவரை இடம் கொடுக்கவில்லை. இந்த லட்சணத்தில், ’பிரதமர் வேட்பாளர் மாயாவதியா, முலாயமா?’ என்று வேறு, அவர்களுக்குள் அடிதடிச் சண்டை.

பகுஜன் சமாஜ் கட்சியாவது எம்.பி-க்கள் எண்ணிக்கையில் இரட்டை இலக்கத்தை தொட்டிருக்கிறது. 12 இடங்களில் முன்னிலையில் இருக்கிறார்கள், அவர்கள். ஆனால், சமாஜ்வாடிக்கு 6 இடங்களில் மட்டுமே வெற்றிவாய்ப்பு தெரிகிறது. முலாயமே மெயின்பூரி தொகுதியில் போராடிக் கொண்டிருக்கிறார் (வாக்கு வித்தியாசம் - 20,000). எப்படியோ, அஸம்காரில் அகிலேஷ் வெற்றிக்கு அருகில் இருக்கிறார். இந்த இடத்தில், தேர்தலில் போட்டியிடாமல் விலகிய மாயாவதியின் விவரத்தை, வியக்காமல் இருக்க முடியவில்லை. இது மட்டுமே ஆறுதல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு