Published:Updated:

`மாம்பழத்துக்கு மவுசு இல்லை!' - தர்மபுரியில் பா.ம.க சரிந்த பின்னணி

`மாம்பழத்துக்கு மவுசு இல்லை!' - தர்மபுரியில் பா.ம.க சரிந்த பின்னணி
`மாம்பழத்துக்கு மவுசு இல்லை!' - தர்மபுரியில் பா.ம.க சரிந்த பின்னணி

தர்மபுரி தொகுதியில் தொடக்கத்தில் ஏறுமுகமாக நம்பிக்கையளித்த அன்புமணி, நேரம் ஆக ஆகப் பின்தங்கினார். 

`மாம்பழத்துக்கு மவுசு இல்லை!' - தர்மபுரியில் பா.ம.க சரிந்த பின்னணி

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் வேட்பாளர்களின் இதயத்துடிப்பை பதம் பார்த்துக்கொண்டிருகின்றன. தொடக்கத்தில் ஏறுமுகத்தில் இருந்த வேட்பாளர்கள் சிலர் நேரம் போகப் போக பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர். அப்படித்தான் அவருக்கும் நடந்துள்ளது. `தர்மபுரி எங்கள் கோட்டை’ என்றிருந்தவருக்கு இப்போது அது கைவிட்டுபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.கவுடன் போராடிப்பெற்ற 7 சீட்டுகளில் ஒன்றில் கூட, பா.ம.கவுக்கு வெற்றிமுகமில்லை. `அன்புமணி’ மட்டும் தொடக்கத்தில் முன்னிலையில் இருந்துவந்தார். ஆனால், தற்போது அதுவும் கைவிட்டு போகும் நிலையில் உள்ளது. 21,621 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

`மாம்பழத்துக்கு மவுசு இல்லை!' - தர்மபுரியில் பா.ம.க சரிந்த பின்னணி

1998, 1999, 2004 மற்றும் 2014 ம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு யாருக்கும் வெற்றியைப் பங்கிட்டு கொடுக்காமல் வாகை சூடியது பா.ம.க. தர்மபுரியை கோட்டையாகவே கருதிய அந்தக் கட்சிக்கு இது கடும் பின்னடைவுதான். 2004-ம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்அன்புமணி. 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க, தே.மு.தி.க அணியில் பா.ம.க வேட்பாளராகப் போட்டியிட்டு 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வேட்பாளரைத் தோற்கடித்தார்.  

கடந்த மக்களவைத் தேர்தலில் பல வாக்குறுதிகளை அன்புமணி அளித்திருந்தாலும் மக்கள் மிகவும் எதிர்பார்த்தது தர்மபுரி - மொரப்பூர் ரயில் பாதைத் திட்டத்தைதான். அந்தத் திட்டத்துக்குத் தனது பதவிக்காலத்தின் இறுதியில் அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கிவைத்தார் அன்புமணி. `தர்மபுரி மாவட்டத்தைத் தமிழகத்தின் முன்னேறிய 5 மாவட்டங்களில் ஒன்றாக ஆக்குவேன்' என்று சொன்னார்‌. இதை நோக்கி அவர் சிறப்பாகச் செயல்பட்டார் என்பதற்கு எந்தவிதச் சான்றுகளும் இல்லை. `இதற்குக் காரணம், தமிழக அரசின் முழு ஒத்துழைப்பு இல்லாததுதான்' என்றார்.   

`மாம்பழத்துக்கு மவுசு இல்லை!' - தர்மபுரியில் பா.ம.க சரிந்த பின்னணி

தர்மபுரியில் வேலைவாய்ப்பு இல்லாததால் சுமார் மூன்று லட்சம் பேர் திருப்பூர், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு வேலைக்காகச் செல்கிறார்கள். இதைத் தடுக்க, `தர்மபுரிக்கு புதிய தொழிற்சாலைகளைக் கொண்டுவருவேன்’ என்றார் அன்புமணி. அப்படி எந்தத் தொழிற்சாலையும் வரவில்லை. தர்மபுரி முழுவதுமே சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. மலைவாழ் மக்கள் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான எந்த முயற்சியையும் எம்.பி செய்யவில்லை” என்கின்றனர் அப்பகுதிவாசிகள். பாலக்கோடு மருத்துவமனையை மத்திய அரசின் நிதி உதவியோடு தரம் உயர்த்துவேன்’ என்றார். அதையும் செய்யவில்லை.

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி பஞ்சாயத்து நிர்வாகத்தின்கீழ் இருக்கிறது. அதைச் சுற்றுலாத் துறையின் கீழ் கொண்டுவந்து மேம்படுத்தக் கவனம் செலுத்தவில்லை. `கோவை - பெங்களூரூ இ்ன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை பாலகோட்டில் நிறுத்திச்செல்ல ஏற்பாடு செய்வேன்’ என்றார் இப்படியாக நீள்கிறது அவரது வாக்குறுதிகள். நாடாளுமன்ற அவைக்கூட்டங்கள் நடந்த 304 நாள்களில் அவர் வெறும் 141 நாள்களே பங்கேற்றுள்ளார்.  

கடந்த சட்டமன்றத் தேர்தலில்,பா.ம.க தனித்து நின்றது. `முதல்வர் வேட்பாளர்’ என்று அறிவித்துக்கொண்ட அன்புமணி தர்மபுரியின் பென்னாகரம் தொகுதியில் களம்கண்டு, தோல்வியைத் தழுவினார். இதன் எதிரொலியாகத்தான் மீண்டும் ஒரு பின்னடைவு தற்போது ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றால் மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எண்ணியிருந்த அன்புமணியின் கனவு தகர்ந்துள்ளது. மேலும், `திராவிடக்கட்சிகளுடன் கூட்டணியில்லை’ என்று கூறி, அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததும், பா.ம.கவின் தோல்விக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. 

அடுத்த கட்டுரைக்கு