Published:Updated:

வஞ்சிக்கப்பட்ட காவிரி, வறண்டு போன தமிழகம்: மினி தொடர்: பாகம் 2

விகடன் விமர்சனக்குழு
வஞ்சிக்கப்பட்ட காவிரி, வறண்டு போன தமிழகம்: மினி தொடர்: பாகம் 2
வஞ்சிக்கப்பட்ட காவிரி, வறண்டு போன தமிழகம்: மினி தொடர்: பாகம் 2

வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம். விஜயகுமார், என்.ஜி.மணிகண்டன்

மேட்டூர் அணை (ஸ்டான்லி நீர்த்தேக்கம்)

தமிழன் ஆதி காலத்தில் இருந்தே உழவுத் தொழிலை செய்து வந்தவன். இதற்கு பல உதாரணம் இருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட திருக்குறளில் உழவு பற்றி ஒரு அதிகாரமே இருக்கிறது. அதில் ‘‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகு’’ என்றிருக்கிறார் வள்ளுவர். ஆனால், கர்நாடகத்தை சேர்ந்த கன்னடர்கள் உழவுத் தொழில் செய்யாதவர்கள்; உழவை பற்றி அறியாதவர்கள். ஆனாலும், காலப்போக்கில் காவிரியை சிறு சிறு மதகுகள் கட்டி மடக்கினார்கள். இந்தப் பிரச்னையில் தீர்வை எட்டுவதற்காக சென்னை மாகாண அரசும், மைசூர் மாகாண அரசும் இணைந்து 1892ல் பேச்சுவார்த்தை நடத்தின.
 

வஞ்சிக்கப்பட்ட காவிரி, வறண்டு போன தமிழகம்: மினி தொடர்: பாகம் 2

ஆண்டுக் கணக்கில் பல சுற்று பேச்சுக்கள் இழுழுழுழுபட்டு,  1924  ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்கள். அதன் படி மைசூர் அரசு கீழ் படிநிலையை கேட்காமல் மேல் படி நிலைகளை நிரப்பக் கூடாது. கீழ் படிநிலையை கேட்டு தான் மேல் படி நிலைகளை நிரப்ப வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டார்கள். அதாவது சென்னை மாகாண அரசை கேட்காமல் மைசூர் மாகாண அரசு காவிரியை தடுக்க கூடாது என்பதே  இதன் பொருள்.  அந்த காலக் கட்டத்தில் காவிரியால் மைசூரில் 1.10 லட்சம் ஏக்கரும் சென்னை மாகாணத்தில் 12 1/4 லட்சம் ஏக்கரும் பயன்படும் என்று கணக்கிடப்பட்டது.

ஆனாலும், தமிழகத்தில் காவிரி கரையோரமாக  நிறைய நிலங்களும், விவசாயம் செய்யக் கூடிய ஆட்களும் இருந்தும்  போதிய நீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை. இதை உணர்ந்த ஆங்கிலேயே அரசு காவிரியின் குறுக்கே அணைக் கட்ட முடிவு செய்து இடத்தை தேடியது. 15 ஆண்டுகள் கழித்து அன்றைய ஆங்கிலேய அரசின் சென்னை மாகாண கவர்னர் ஸ்டான்லி காவிரியின் குறுக்கே அணைக் கட்ட  உத்தர விட்டார். அதன் பேரில் மேட்டூரில் கர்னல் டபிள்யூ.எம். எல்லீஸ் ராயல் பொறியாளர் தலை மையிலான குழு கம்பீரமான மேட்டூர்  அணையை கட்டி முடித்தது.  இந்த அணையில் காவிரியே கடல் போல காட்சியளிக்கும் அளவுக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. அணையை கட்டிய பொறியாளர் டபிள்யூ.எம்.எல்லீஸ் ராயலை மேட்டூர் அணையின் சிற்பி என்றும் புகழப்பட்டார்.

வஞ்சிக்கப்பட்ட காவிரி, வறண்டு போன தமிழகம்: மினி தொடர்: பாகம் 2

தற்போது இந்த மேட்டூர் அணை தான் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கக் கூடிய நிலையில் இருக்கிறது. இந்த அணையில் இருந்து பல மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு செய்யப்படுகிறது. 

அணைப்பற்றிய விபரம்:

மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்: 21.8.1934
அணைக் கட்ட ஆன செலவு 4.80 கோடி
அணையின் நீளம் 5.300 அடி
அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.
அணையின் உயரம் 214 அடி
அணையின் அகலம் 171 அடி
அணையின் சேமிப்பு உயரம் 120 அடி
அணையின் நீர்பிடிப்பு பரப்பளவு 59.25 சதுர மைல்
2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது.
அணையின் மூலம் தினமும்  240 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

காவிரி நடுவர் மன்றம் உதயம்:

மேட்டூர் அணை கட்டிய அதே காலகட்டத்தில் கர்நாடகத்திலும் கிருஷ்ணராஜ சாகர் அணையும் கட்டப்பட்டது. இந்த இரு அணைகளும் கட்டிய பிறகு கர்நாடகத்தின் பாசன பரப்பளவு சுமார் 3 1/4 லட்சம் ஏக்கராகவும், தமிழகத்தில் சுமார் 15 1/2 லட்சம் ஏக்கராகவும் விரிவாக்கம் செய்யப்பட்டது. 1956 ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு அதற்கு முன்பு போட்ட எந்த ஒரு ஒப்பந்தத்தை யும் அதாவது, 1924 ஒப்பந்தப் படி தமிழகத்தையும், மத்திய அரசையும் கேட்காமல் அணைகள் அனைத்தும் நிரப்பி விட்ட பிறகு வெளியேற்றப்படும் வடிகால் பகுதியாக தமிழகத்தை மாற்றி விட்டார்கள்.

இதனால் கவலை அடைந்த தமிழக அரசு 1970 காவிரி நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தியது. ஆனால், மத்திய அரசு அதைக் காதில் வாங்கவில்லை. இந்நிலையில், 1972 ல் தமிழகம், கர்நாடகம், கேரள மூன்று மாநில முதல்வர்களும் மத்திய அரசின் முன்னிலையில் நடத்திய பேச்சு வார்த் தையின் படி காவிரி உண்மை அறியும் குழு நியமிக்கப்பட்டது. அது மாநிலங்கள் வாரியாக காவிரி நீர் பயன் பாட்டையும் ஆய்வு செய்தது.

அந்த ஆய்வின்படி தமிழகத்தின் பயன்பாட்டிற்கு 489 டி.எம்.சி நீரும், கர்நாடகத்திற்கு 177 டி.எம்.சி நீரும், கேரளத்திற்கு 5 டி.எம்.சி எனவும் இந்த உண்மை அறியும் குழு தெரிவித்தது. இறுதி முடிவு எடுக்கும் வரை தற்போது பயன்படுத்தி வரும் நீர் அளவை அப்படியே அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. அதன் பிறகு மாநில அரசுகளுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்னை குறித்து பல முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதனால், தமிழக விவசாய அமைப்புகள் காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சென்றார்கள். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 1990 ஆம் ஆண்டு மே 4ல் காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசு, காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. 1970ல் தமிழக அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டும் மதிக்காத மத்திய அரசு, 20 ஆண்டுகள் கழித்த பிறகு உச்ச நீதிமன்ற குட்டு வைத்த பிறகு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது.
 

வஞ்சிக்கப்பட்ட காவிரி, வறண்டு போன தமிழகம்: மினி தொடர்: பாகம் 2

வஞ்சிக்கப்பட்ட தமிழகம்:

அதன் பிறகு தமிழக அரசு காவிரி நடுவர் மன்றத்திடம் உண்மை அறியும் குழு சொன்னபடி எங்களுக்கு 489 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றது. ஆனால், உண்மை அறியும் குழுவின் அறிக்கை 16 ஆண்டுகள் கடந்து விட்டது என்பதால் அதை எடுத்துக் கொள்ள முடியாது. மாநில அரசுகள் தற்போது உள்ள பயன்பாட்டின் அடிப்படையில் தான் இடைக்கால உத்தரவு வழங்க முடியும் என்றது கோர்ட். அதன்படி மேட்டூர் அணைக்கு வருட சராசரி நீர் வரத்தாக தமிழக அரசு தந்த ஆவணங்களின் அடிப்படையில் 205 டி.எம்.சி. நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் கர்நாடக அரசு 1990 ல் பாசனம் செய்து வரும் பரப்பளவு 11.2 லட்சம் ஏக்கர். இதற்கு மேல் தனது பாசனப் பரப்பை எக்காரணத்தைக் கொண்டும் அதிகரிக்கக் கூடாது எனவும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.

##~~##
கர்நாடக அரசு 1980-90 வரையிலான 10 ஆண்டுகளில் பில்லிகுண்டு என்ற இடத்தில் தமிழகத்திற்கு வழங்கி வந்த வருட சராசரி நீரளவு 227 டி.எம்.சி. ஆகும். இந்த நீரளவு மத்திய நீர்வள வாரியத்தால் அளக்கப்பட்டு, கர்நாடக அரசால் நடுவர் மன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட நீரளவு ஆகும். பில்லிகுண்டு என்ற இடத்தில் இருந்து மேட்டூர் அணை வரையிலான வருட சராசரி நீர்வளம் என்பது 25 டி.எம்சி. ஆகும். எனவே கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கிய நீரளவு என்பது 227 +25 =252 டி.எம்சி. ஆகும்.
மேட்டூர் அணை வரையான வருட சராசரி நீர்வளம் 500 டி.எம்.சி. என்பதால் கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கிய 252 டி.எம்.சி போக மீதி உள்ள 248 டி.எம்.சி நீர் என்பது தான் கர்நாடகத்தின் பயன்பாடாகும். 1972 வாக்கில் 177 டி.எம்சி. நீரைப் பயன்படுத்தி வந்த கர்நாடகம் 1990 வாக்கில் 248 டி.எம்.சி நீரைப் பயன்படுத்தி கொண்டு, தமிழகத்திற்கு 252 டி.எம்.சி. நீரை வழங்கி வந்துள்ளது.
எனவே நடுவர் மன்றம், தமிழகத்திற்குக் கர்நாடகம் 252 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், நடுவர் மன்றம் அதனைச் செய்யாது, 205 டி.எம்.சி நீரை மட்டுமே கர்நாடகம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால், 248 டி.எம்.சி நீரை மட்டுமே பயன்படுத்தி வந்த கர்நாடகம், 295 டி.எம்.சி நீரை பயன்படுத்த வழிவகை செய்தது. ஆகமொத்தத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பே தமிழகத்திற்கு வஞ்சிக்கப்பட்ட வரலாறாகிப் போனது.
  இடைக்கால உத்தரவையாவது மதித்து நடந்ததா கர்நாடகா அரசு? ....  நாளை பார்க்கலாம்