Published:Updated:

தமிழக பி.ஜே.பி-க்குள் பூகம்பம்... கூண்டோடு மாற்ற மோடி முடிவு! யார் அந்த இருவர்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தமிழக பி.ஜே.பி-க்குள் பூகம்பம்... கூண்டோடு மாற்ற மோடி முடிவு! யார் அந்த இருவர்?
தமிழக பி.ஜே.பி-க்குள் பூகம்பம்... கூண்டோடு மாற்ற மோடி முடிவு! யார் அந்த இருவர்?

தமிழகத்தில் தேசியக் கட்சிகள் நுழைய முடியாமல் இருப்பதை உடைக்க அமித் ஷா சபதமே போட்டாராம். அதன்படி, இறுக்க அணைத்து காலை வாரும் அமித் ஷாவின் ஸ்டைலில் சிக்கி அ.தி.மு.க. கூடாரம் காலியாகிவிட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ன்று காலை.. டெல்லி பிரதமர் இல்லத்தில் முக்கியமான ஆலோசனை நடந்துவருகிறது. தேர்தல் முடிவு முழுவதும் வெளியான நிலையில், பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட நிர்வாகிகள் டெல்லியில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களுடன் நேரடியான தொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மத்திய அமைச்சரவையில் இடமளிக்க பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறாராம். முடிந்த அளவு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்தவர்களுக்கே முக்கிய இலாக்காக்களைத் தரவும் முடிவுசெய்திருக்கிறாராம்.

தமிழக பி.ஜே.பி-க்குள் பூகம்பம்... கூண்டோடு மாற்ற மோடி முடிவு! யார் அந்த இருவர்?

தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்குள் கட்சியில் புதிய மாற்றம் கொண்டுவர அமித் ஷா தயாராகிவிட்டாராம். முதல்கட்ட அமைச்சரவையில் தமிழக பி.ஜே.பி-யில் யாருக்கும் வாய்ப்பு இருக்காது. இரண்டாம்கட்ட மாற்றத்தின்போது அமைச்சர் பதவி தரப்படுமாம். இடைப்பட்ட காலத்தில், தமிழக அரசியலை நன்கு தெரிந்த அதிரடியாகச் செயல்படக்கூடிய இரண்டு பேரை (நாற்பது வயதுக்காரர்கள்) தேர்தெடுத்து அவர்களுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தந்து அமைச்சர் பதவியில் உட்காரவைத்து பி.ஜே.பி-யை வலுப்படுத்தும் அசைன்மென்ட்டை ஒப்படைக்கப்போகிறார்களாம். கடந்த ஐந்து வருடங்களில் கட்சிக்காக முழுவதுமாக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு தரப்படுமாம். யார் அந்த இருவர் என்பது அமித் ஷாவுக்கு மட்டுமே தெரியுமாம். இப்போதைக்கு ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்திற்கு அமைச்சரவையில் இடம்கொடுக்க அமித் ஷா ஓ.கே. சொல்லிவிட்டாராம். 

தமிழிசை ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? 

தேசிய ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தமிழக பி.ஜே.பி. செயல்பாட்டைத் தீவிரமாக விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்களாம். தி.மு.க. ஆதரவு பி.ஜே.பி., அ.தி.மு.க. ஆதரவு பி.ஜே.பி... என்று இரண்டு ரக உளவாளிகள் மாநிலக் கட்சியில் பரவிக்கிடக்கிறார்கள். அவர்களைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்ஸின் அஜென்டா. டெல்லியில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில்,  தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தித்தது ஏன் என்கிற கோணத்தில் விவாதம் நடந்திருக்கிறது. கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி... இருவரும் கடுங்கோபத்தில் இருக்கிறார்களாம். தமிழகத்தில் ஐந்து இடங்களில் பி.ஜே.பி. போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியடைந்தது. பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்த கட்சிகளில் அ.தி.மு.க. மட்டும் ஒரு இடத்தில் வென்றது. கூட்டணியில் இருந்த பா.ம.க, தே.மு.தி.க.. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் படுதோல்வியைச் சந்தித்தன. அதன்படி, தற்போதைய தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசையை ராஜினாமா செய்யும்படி வலியறுத்தியிருக்கிறார்கள. மீடியாக்களுக்குப் பேட்டி தருவதை மட்டுமே அவர் பார்த்துவந்தார். இதுமாதிரி முக்கிய பிரமுகர்களின் செயல்பாடு பற்றி சென்னையில் உள்ள மத்திய உளவுத்துறை உயர் அதிகாரி வர்மாவிடமும் அறிக்கை கேட்டிருக்கிறார்கள் 

தமிழக பி.ஜே.பி-க்குள் பூகம்பம்... கூண்டோடு மாற்ற மோடி முடிவு! யார் அந்த இருவர்?

தேர்தல் நிதி வசூலித்ததில் காட்டிய வேகத்தைத் தேர்தல் வேலையில் காட்டினார்களா? 

டெல்லியில் உள்ள பி.ஜே.பி. பிரமுகர் ஒருவர் கூறும்போது, ``அமித் ஷாவின் தேர்தல் யுக்தியைத் தமிழகத்தில் திரைமறைவில் செயல்படுத்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமே நடத்தவில்லை. பி.ஜே.பி. கண்டிப்பாக ஜெயிக்கவேண்டும் என்ற வெறியோடு இங்கு யாரும் தேர்தல் வேலை செய்யவில்லை. கட்சித் தொண்டர்களுடன் அன்றாடம் பழகும் ஃபீல்டு வொர்க்கர்ஸ் கட்சி நிர்வாகிகள் பதவியில் இல்லை. எனவே, கட்சி நிர்வாகிகளைக் கூண்டோடு மாற்றவேண்டும். தமிழக பி.ஜே.பி-யில் நின்ற வேட்பாளர்கள் ஐவரும் தனித்தனிக் கோஷ்டிகளாகத் தேர்தல் வேலை பார்த்திருக்கிறார்கள். கைக்காசை போட்டு இவர்கள் செலவு செய்யவில்லை. இன்னும் சொல்லப்போனால், தேர்தல் நிதி கேட்டு ஆங்காங்கே வசூல் நடந்திருக்கிறது. குறிப்பாக, மூன்று முக்கிய பிரமுகர்கள் ஒரே இடத்துக்கு நிதி கேட்டுப்பெற்று மூன்று பிரிவாக அந்த நிதியைப் பிரித்துக்கொண்ட சம்பவமும் நடந்திருக்கிறது. இந்த விஷயத்தில்தான் போட்டி இருந்ததேயொழிய, தேர்தல் வேலையில் காட்டவில்லை. மத்திய அரசின் திட்டங்களை அறவே கட்சி அமைப்பினர் தமிழக மக்களிடம் கொண்டுசெல்லவில்லை. மத்திய அரசின் `முத்ரா' கடன் வழங்கும் திட்டத்தின் ஒன்றரைக் கோடி பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். அதேபோல், இலவச கேஸ், மெடிக்கல் இன்ஷுரன்ஸ் திட்டம் மற்றும் வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள. இதுமாதிரி பல திட்டங்களில் லட்சக்கணக்கானவர் பலன் பெற்றிருந்தும், அந்தப் பயனாளிகளை பி.ஜே.பி-யின் மாநில நிர்வாகிகள் சந்திக்கவேயில்லை. கட்சி மேலிடம் கொடுத்த தேர்தல் நிதியைத் தவிர, மத்திய அமைச்சராக இருந்த பொன்னாரும் மற்ற வேட்பாளர்களுக்கு நிதி ஆலோசனை செய்யவில்லை" என்று பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார். 

தி.மு.க-வுக்குச் சவுக்கடி தர மோடி ரெடி!

தமிழகத்தில் தேசியக் கட்சிகள் நுழைய முடியாமல் இருப்பதை உடைக்க அமித் ஷா சபதமே போட்டாராம். அதன்படி, இறுக்க அணைத்து காலை வாரும் அமித் ஷாவின் ஸ்டைலில் சிக்கி அ.தி.மு.க. கூடாரம் காலியாகிவிட்டது. இது கடந்த ஐந்து வருட மோடி ஆட்சியில் அரங்கேறியது. இனி வரும் ஐந்து ஆண்டுகளில், அமித் ஷாவின் டார்க்கெட் தி.மு.க. இதையும் இறுக அணைத்து ஒழித்துக் கட்டும் வேலையை விரைவில் தொடங்க இருக்கிறாராம் அமித் ஷா. இதற்கு மோடியும் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். இந்தத் திட்டத்தை எடப்பாடியை வைத்தே நிறைவேற்ற நினைக்கிறார்கள். தி.மு.க. பிரமுர்கள் பற்றி மத்திய உளவுத்துறை வசம் உள்ள ஊழல் ஃபைல்கள் புரட்டப்படுகின்றன. அதேபோல், மாநில அளவில் யார் யார் மீது கேஸ் இருக்கிறது என்கிற விவரங்களை மாநில உளவுத்துறை தோண்டி எடுக்கிறது. இதை வைத்து இருமுனை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.  

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு