Published:Updated:

`இது குடும்பம் இல்ல... விக்ரமன் சார் படம்!' - தாத்தா தேவகவுடாவுக்காக வழிவிடும் பேரன்; இது கர்நாடக கலாட்டா

மலையரசு

மோடி மற்றும் அமித் ஷா புயலில் சிக்கி பல மாநிலத் தலைவர்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். தமிழகம், கேரளா, ஒடிசா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் பா.ஜ.க பெற்றுள்ள வெற்றியால் அந்த மாநிலத் தலைவர்கள் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள். இதில் முக்கியமானவர் முன்னாள் பிரதமர் தேவகவுடா. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. இரண்டில் மட்டுமே மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒன்றில் காங்கிரஸ் கட்சியும் வென்றுள்ளன. தேவகவுடா தேர்தலில் நிற்பதற்கு முன்னதாகவே பல நிகழ்வுகள் அரங்கேறியது. கடந்த சட்டசபை தேர்தலைப் போலவே நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜே.டி.எஸ்ஸும் காங்கிரஸும் கூட்டணி அமைத்தன. காங்கிரஸ் கூட்டணியில் ஜே.டி.எஸ்ஸுக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் மாண்டியா தொகுதியையும், ஹாசன் தொகுதியையும் ஜே.டி.எஸ் கேட்டு வாங்கியது.

`இது குடும்பம் இல்ல... விக்ரமன் சார் படம்!' - தாத்தா தேவகவுடாவுக்காக வழிவிடும் பேரன்; இது கர்நாடக கலாட்டா

இதற்குக் காரணம் ஹாசன் தொகுதி தேவகவுடாவின் ஆஸ்தான தொகுதி. இதனால் இந்த முறையும் இங்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த இரு தொகுதிகளிலும் தன் பேரன்கள் போட்டியிடுவார்கள் என அறிவித்தார் கவுடா. அதன்படி  மாண்டியாவில் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும், ஹாசன் தொகுதியில் ரேவண்ணாவின் மகன் ப்ரஜ்வால் ரேவண்னாவும் போட்டியிட்டனர். பிரசாரத்தின்போது பேசிய கவுடா, ``அரசியலிலிருந்து ஓய்வு பெறலாம் என்பதையும் ஆலோசித்து வருகிறேன். ஹாசன் தொகுதியில் என் பேரன் ப்ரஜ்வால் போட்டியிடவுள்ளார். இந்தத் தொகுதியில் இதுவரை நீங்கள் எனக்கு அளித்து வந்த ஆதரவை என் பேரனுக்கு அளிக்க வேண்டும்" எனப் பேரன்கள் மீதான பாசத்தில் கண்ணீர் வடித்தபடி பேசினார். 

`இது குடும்பம் இல்ல... விக்ரமன் சார் படம்!' - தாத்தா தேவகவுடாவுக்காக வழிவிடும் பேரன்; இது கர்நாடக கலாட்டா

இதனால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், தும்கூர் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கினார். ஆனால், இந்த முறை அவருக்கு வெற்றிக்கனி எட்டாததாக மாறிவிட்டது. இந்தியா முழுவதும் அடித்த மோடி மற்றும் அமித் ஷா புயலுக்கு கவுடாவும் தப்பவில்லை. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் பசவராஜிடம் 13,339 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதேநேரம் எந்தப் பேரனுக்காக தனது ஆஸ்தான தொகுதியை விட்டுக்கொடுத்தாரோ அந்தப் பேரன் ப்ரஜ்வால் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தனது அரசியல் வாழ்வில் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி என்பதை அறியாமல் இருந்து வந்த கவுடாவின் இந்த தோல்வி ஜே.டி.எஸ் கட்சியின் தொண்டர்கள் மட்டுமின்றி அவரது குடும்பத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தத் தப்பவில்லை. தனக்காக ஆஸ்தான தொகுதியை விட்டுக்கொடுத்த தாத்தா கவுடாவை மீண்டும் எம்பி ஆக்க வேண்டும் என்பதற்காக அவரது பேரன் ப்ரஜ்வால் தனது எம்பி பதவியை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளார். 

`இது குடும்பம் இல்ல... விக்ரமன் சார் படம்!' - தாத்தா தேவகவுடாவுக்காக வழிவிடும் பேரன்; இது கர்நாடக கலாட்டா

``ஜே.டி.எஸ் தொண்டர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, தாத்தாவின் தோல்வியால் ஏற்பட்ட இடைவெளியை நிரப்ப வேண்டும். அதனால்தான் ராஜினாமா முடிவெடுத்துள்ளேன். மீண்டும் ஒரு முறை தாத்தா ஹாசன் தொகுதியில் வெற்றிபெறுவதைப் பார்க்க வேண்டும். இது எனது தனிப்பட்ட முடிவு. தாத்தாவின் அனுபவம் இப்போதுள்ள சூழ்நிலையில் பாராளுமன்றத்துக்குத் தேவை. இதற்காகத் தாத்தாவைச் சந்தித்து எனது முடிவைத் தெரியப்படுத்துவேன்" என ப்ரஜ்வால் தனது தாத்தா மீதான பாசத்தைப் பொழிந்துள்ளார். ஆனால், இந்த முடிவுக்கு அக்கட்சியோ, தேவ கவுடாவோ எந்த முடிவும் சொல்லவில்லை. 

`இது குடும்பம் இல்ல... விக்ரமன் சார் படம்!' - தாத்தா தேவகவுடாவுக்காக வழிவிடும் பேரன்; இது கர்நாடக கலாட்டா

இது குடும்பம் இல்ல... விக்ரமன் சார் படம்.... 

Vikatan