Published:Updated:

எப்படி தோற்றார் ஜெயவர்தன்?! - கொந்தளித்த ஜெயக்குமார்

மகனை எப்படியாவது மத்திய அமைச்சர் ஆக்கிவிட வேண்டுமென துடித்த அமைச்சர் ஜெயக்குமாரின் கனவில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டதாக புலம்புகிறது அ.தி.மு.க தரப்பு.

எப்படி தோற்றார் ஜெயவர்தன்?! - கொந்தளித்த ஜெயக்குமார்
எப்படி தோற்றார் ஜெயவர்தன்?! - கொந்தளித்த ஜெயக்குமார்

தென்சென்னை தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிட்டார். மகனை எப்படியாவது மத்திய அமைச்சர் ஆக்கிவிட வேண்டுமெனத் துடித்த ஜெயக்குமாரின் கனவில், ஒரு லோடு மண்ணை அள்ளிப் போட்டுள்ளது மக்கள் நீதி மய்யம். 

எப்படி தோற்றார் ஜெயவர்தன்?! - கொந்தளித்த ஜெயக்குமார்

படித்த, நடுத்தர வர்க்க மக்கள் நிரம்பிய தொகுதி தென்சென்னை. இத்தொகுதிக்காக டெல்லி வரை படையெடுத்த பா.ஜ.க தலைவர் தமிழிசையையும் மீறி, மகனுக்காக மீண்டும் தென்சென்னையை பெற்றுக்கொடுத்தார் ஜெயக்குமார். பா.ஜ.க., பா.ம.க. கூட்டணியில் இருப்பதால் படித்த இளைஞர்கள், தொகுதியில் கணிசமாக உள்ள வன்னியர்களின் வாக்குகள் தங்களுக்கு விழும் என அ.தி.மு.க நம்பியது. ஆனால், நம்பியிருந்த வாக்குகள் மக்கள் நீதி மய்யத்துக்குப் பெருமளவு மடைமாறியிருப்பது அ.தி.மு.க முகாமை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

எப்படி தோற்றார் ஜெயவர்தன்?! - கொந்தளித்த ஜெயக்குமார்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தென்சென்னை அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகி ஒருவர், ``கடந்த 2014 தேர்தல்ல, அ.தி.மு.க.வுக்கு 4.38 லட்சம் வாக்குகள் கிடைச்சது. தி.மு.க. 3.01 லட்சம் வாக்குகளும்,  பா.ஜ.க. கூட்டணிக்கு 2.56 லட்சம் வாக்குகளும் கிடைத்தன. இப்ப, பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. கட்சிகளோட மெகா கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால, அ.தி.மு.க-வுக்கு குறைந்தது 5 லட்சம் வாக்குகளாவது வந்திருக்கனும். ஆனால், 3 லட்சம் வாக்குகள்தான் வந்துள்ளது. தி.மு.க-வின் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு 5.64 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளது. 

மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள படித்த இளைஞர்களின் வாக்குகளும், விருகம்பாக்கம், தி.நகர் தொகுதிகளில் உள்ள பா.ஜ.க. வாக்குகளும் எங்களுக்கு எதிர்பார்த்த அளவு வரவில்லை. ஜெயலலிதா தலைமைக்கு விழுந்த அ.தி.மு.க வாக்குகளும் வரவில்லை. கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் 31,000 வாக்குகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன. ஆனாலும், அ.தி.மு.க-வுக்கு தோல்வி முகம்தான்.

எப்படி தோற்றார் ஜெயவர்தன்?! - கொந்தளித்த ஜெயக்குமார்

தி.மு.க-வை விரும்பாத இளைஞர்களின் வாக்குகள் இம்முறை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு மடைமாறிவிட்டன. எந்த கட்டமைப்பும் இல்லாமல், முதல்முறையாகத் தேர்தலை சந்தித்த அக்கட்சி 1.35 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இவற்றில் பெரும்பாலான வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு வரவேண்டியது தான்" என்றவரிடம், ``நீங்கள் சொல்லும் கட்சிகள் பெற்ற வாக்குகளை எல்லாம் அ.தி.மு.க வாக்குகளுடன் கூட்டினால்கூட தி.மு.க. பெற்ற வாக்குகளை நெருங்க முடியாதே?" என்றோம்.

``நிச்சயமாக. ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் பாதிப்படைந்த நடுத்தர வர்க்க மக்கள், பா.ஜ.க மீது கோபத்தில் இருந்தனர். ஜெயலலிதா இல்லாததால், அவர் ஆளுமைக்கு விழுந்த வாக்குகளும் சிதறிவிட்டன. ம.நீ.ம. ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளைப் பிரிக்கவில்லை என்றால், ஜெயவர்தன் வெற்றி பெற ஒரு வாய்ப்பு இருந்திருக்கும்" என்றார்.

எப்படி தோற்றார் ஜெயவர்தன்?! - கொந்தளித்த ஜெயக்குமார்

ம.நீ.ம.வைத் தாண்டி, தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ-க்கள் மீதுதான் ஜெயக்குமார் செம கோபத்தில் இருக்கிறாராம். `சும்மா ஆட்டோவில் ஏறி ஊர் சுற்றியதோடு சரி, என் மகனை ஜெயிக்க வைக்க எந்த முயற்சியையும் அவர்கள் இருவரும் செய்யவில்லை. சோழிங்கநல்லூரிலேயே நமக்குப் பெரிய இழப்பாகிவிட்டது. கண்ணகி நகருக்கு ஒழுங்காக பணப்பட்டுவாடா ஆகவில்லை.' என்று புலம்பித் தீர்க்கிறாராம். அவர்கள் இருவர் மீதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் புகார் பறந்திருப்பதாக கூறப்படுகிறது.

Vikatan