Published:Updated:

பி.ஜே.பி-யைக் கைவிடாத மாநிலங்கள்; எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள்..?#VikatanInfoGraphics

பி.ஜே.பி-யைக் கைவிடாத மாநிலங்கள்; எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள்..?#VikatanInfoGraphics
பி.ஜே.பி-யைக் கைவிடாத மாநிலங்கள்; எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள்..?#VikatanInfoGraphics

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியைப் பெற்று, மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கிறது மோடி தலைமையிலான பி.ஜே.பி.

டந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றியைப் பெற்று, மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கிறது மோடி தலைமையிலான பி.ஜே.பி. 

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பி.ஜே.பி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், தமிழகத்திலும் கேரளாவிலும் ஒரு தொகுதியில்கூட அந்தக்கட்சி வெற்றிபெறவில்லை. அதுமட்டுமன்றி, தமிழக பி.ஜே.பி தலைவராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜனும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளனர். அதேபோல், பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்த அ.தி.மு.க, தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சிதம்பரம் தொகுதியில் தொடக்கத்தில் முன்னிலையிலிருந்து பின்னர் அடுத்தடுத்த சுற்றுகள் எண்ணிக்கை நடைபெற்றபோதிலும், இறுதியில் அ.தி.மு.க வேட்பாளர் சந்திரசேகரை 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 38 தொகுதிகளில் பி.ஜே.பி இடம்பெற்றிருந்த அ.தி.மு.க கூட்டணி தோல்வியடைந்துள்ளது. 

அதே சமயம், இந்தியா முழுவதும் 22 மாநிலங்களில் பி.ஜே.பி வேட்பாளர்கள் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்டுப் பெருவாரியான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். அதிலும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அனைத்துத் தொகுதிகளிலுமே பி.ஜே.பி வெற்றிக்கனியை ருசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  குஜராத், ஹரியானா, டெல்லி, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், அருணாசலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களிலும், டையூ & டாமன், சண்டிகர் தொகுதிகளிலும் பி.ஜே.பி 'க்ளீன் ஸ்வீப்' செய்துள்ளது.

பி.ஜே.பி-யைக் கைவிடாத மாநிலங்கள்; எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள்..?#VikatanInfoGraphics

அதேபோல், உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகளில் 62 தொகுதிகளிலும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளிலும் பி.ஜே.பி வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தானில் உள்ள 25 தொகுதிகளில் 24-ல் அமோக வெற்றிபெற்றது. கடந்த தேர்தலில் ஒடிசாவில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற பி.ஜே.பி இந்த முறை 8 தொகுதிகளிலும் மேற்கு வங்கத்தில் கடந்த முறை 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பி.ஜே.பி. தற்போது 18 தொகுதிகளிலும் தனியாகத் தேர்தலைச் சந்தித்து வெற்றிகண்டுள்ளது. கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யிடம் தொகுதிகளை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பி.ஜே.பி-யைக் கைவிடாத மாநிலங்கள்; எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள்..?#VikatanInfoGraphics

இந்தத் தேர்தலில் அதிக தொகுதிகளைப் பிடித்து முதலிடத்தில் உள்ளது பி.ஜே.பி. ஆட்சியமைக்க 272 தொகுதிகளே போதும் என்ற நிலையில், பி.ஜே.பி மட்டுமே தனியாக 303 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது.  52 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அதேபோல், திராவிட முன்னேற்றக் கழகம் 23 இடங்களில் வெற்றிபெற்று, இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க தற்போது ஒரேயொரு தொகுதியில் மட்டுமே வென்று கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் (22), ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் (22), சிவசேனா (18), ஐக்கிய ஜனதா தளம் (16), பகுஜன் சமாஜ் கட்சி (10), தேசியவாத காங்கிரஸ் கட்சி (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (3) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (2) ஆகிய கட்சிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்தியா முழுவதையும் வென்றாலும், தமிழகத்தில் காலூன்ற முடியாமல் இருக்கும் பி.ஜே.பி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், தற்போதைய மாநில நிர்வாகிகளை மாற்றிவிட்டு புதிய தலைவர்களை நியமிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றம் வருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு