Published:Updated:

`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்?’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை!

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தமிழகம் மற்றும் கேரளாவில் பா.ஜ.க வெற்றி பெற முடியவில்லை. கடந்த முறை கன்னியாகுமரியில் எம்.பி-யாக இருந்த மத்திய இணையமைச்சர் பொன்னார் இந்தத் தடவை தோற்றதால் தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு இருந்த ஒரு எம்.பி-யும் இந்த முறை இல்லை. தமிழகத்தில் கால்பதிக்க முடியவில்லை என்ற அதிருப்தியை டெல்லித் தலைமை, தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்த பியூஸ் கோயலிடம் வெளிப்படுத்தியுள்ளது. மற்ற மாநிலத் தேர்தல் பொறுப்பாளர்கள் மகிழச்சியுடன் இருக்க, தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயலுக்கு அந்த மகிழ்ச்சி இல்லை. இந்தத் தோல்வி குறித்து கோயலுக்கு நெருக்கமானவர்களிடம் விவரித்துள்ளார் ஓ.பி.எஸ்.

`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்?’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை!

இது தொடர்பாக விசாரித்தபோது, ``பியூஸ் கோயலிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், `நடந்து முடிந்த தேர்தலை உற்றுக் கவனித்துப்பாருங்கள், தப்பு எங்கே நடந்தது என்பது புரியும். எடப்பாடி பழனிசாமி தொடக்கத்திலிருந்தே மக்களவைத் தேர்தலை கவனத்தில் கொள்ளவில்லை. அவர் தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்வதில்தான் குறியாக இருந்தார். மக்களவைத்தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டவேயில்லை.

`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்?’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை!

இதன் விளைவாகத்தான் 1 தொகுதி மட்டும் கிடைத்துள்ளது. அவரது கவனம் முழுவதும் சட்டமன்ற இடைத்தேர்தலில்தான் இருந்தது. அப்படியில்லாவிட்டால் மக்களவையில் ஏற்பட்ட தோல்வி ஏன் இடைத்தேர்தல் முடிவுகளைப் பாதிக்காமல் போனது..? ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளார்’ என்று கூறியுள்ளார்” என்கின்றனர். இதன்மூலம் ஓ.பி.எஸ் அரசியலில் தனது அடுத்த மூவ்வை ஆரம்பித்துவிட்டார் என்கின்றனர். கடந்த 15-ம் தேதி அ.தி.மு.க லெட்டர் பேடில் அரசின் சாதனைகளை விளக்கி அறிக்கை ஒன்று வெளியானது. அதில் சாதனைகள் பட்டியிலிடப்பட்டு, `எங்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும்’ என்று கூறி எடப்பாடி பெயர் மட்டும் இடம்பெற்றிருந்தது. ஓ.பி.எஸ் பெயர் வேண்டுமென்றே தவிரக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

`எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கிறாரா ஓ.பி.எஸ்?’ - டெல்லியில் நடக்கும் பேச்சுவார்த்தை!

இதன்மூலம், `ஆட்சியும் கட்சியும் நான்தான்’ என்ற வியூகத்தை வகுத்து வருகிறார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதை அறிந்துக்கொண்டு அடுத்த அரசியல் நகர்வுக்குத் தயாராகிவிட்டார் ஓ.பி.எஸ். இதன் முதல்படிதான் பா.ஜ.க-விடம் எடப்பாடிபழனிசாமி குறித்த எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கி தான் நினைத்தை அடைய முயல்கிறார் என்கின்றனர். ``முதல்வர் எடப்பாடியைக்காட்டிலும் ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான் பா.ஜ.க-வில் நெருக்கம் அதிகம். இந்த நெருக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தப்பார்கிறார். அதன்படி கட்சியை முழுவதுமாகத் தன் வசப்படுத்த பா.ஜ.க-வுடன் பேசிவருகிறார். பொதுக்குழு கூட உள்ளநிலையில் கட்சியின் பொதுச் செயலாளராகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளபார்க்கிறார். கட்சி விதிகள் திருத்தப்பட்டு, பொதுச் செயலாளராக ஆக்குவதற்கான ஆதரவை தேர்தல் ஆணையம் மூலம் பா.ஜ.க வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்” என்கின்றனர்.  

Vikatan