Published:Updated:

`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்!' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்

`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்!' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்
`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்!' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்

தமிழ்நாட்டில் இருந்த பிரசார அணுகுமுறைகள் அனைத்தும் மோடிக்கு எதிராக இருந்தது. இதைத் தகர்த்திருக்க வேண்டிய பொறுப்பு, மாநிலத் தலைமைக்கு இருந்தது. ஆனால், இதைத் தலைமையால் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை.

கில இந்திய அளவில் வெற்றிக் களிப்பில் இருந்தாலும் தமிழகத்தில் கிடைத்த தேர்தல் முடிவுகளால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் தமிழிசை. `தமிழக பா.ஜ.க-வில் விரைவில் மாற்றம் வர இருக்கிறது. 2021 சட்டமன்றத் தேர்தலைக் கணக்கில் வைத்துக் கேபினட்டில் இடம் கொடுப்பார்கள் என நம்புகிறோம்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்!' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்

`புதிய அமைச்சரவையில் எந்தெந்தக் கட்சிகளுக்கு இடம்?' என்பது குறித்து இன்று மாலை விவாதிக்க இருக்கிறது பா.ஜ.க தலைமை. இதையொட்டி, எடப்பாடி பழனிசாமி உட்பட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். கேபினட் பரபரப்புகள் ஓய்ந்த பின்னர், தமிழக பா.ஜ.க-வை வளர்த்தெடுக்கும் வேலைகளில் தீவிரம் காட்ட இருக்கிறது பா.ஜ.க தலைமை. மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் கிடைத்த தோல்வியைவிட, கன்னியாகுமரி, கோவை தொகுதிகளில் கிடைத்த அதிர்ச்சியில் இருந்து பா.ஜ.க நிர்வாகிகளால் மீள முடியவில்லை. குறிப்பாக, `கோவை தொகுதியில் சி.பி.ஆர் உறுதியாக வெல்வார். கடந்தமுறை பல்லடம், சூலூர் தொகுதிகளில்தான் பின்தங்கினோம். இந்தமுறை அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் வெல்வார். மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவார்' என நம்பிக்கையோடு பிரசாரக் களத்தில் வலம் வந்தனர் தொண்டர்கள். அவர்களது நம்பிக்கையை பொய்த்துப் போக வைத்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் சி.பி.எம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன். 

`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்!' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்

அகில இந்திய அளவில் மோடி பெற்ற பெருவாரியான வெற்றியைக் கொண்டாட முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர் தமிழக பா.ஜ.க தொண்டர்கள். இந்நிலையில், தமிழக தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற கோஷத்தை மீண்டும் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர். தமிழக பா.ஜ.க-வில் என்னென்ன விதமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பது குறித்து டெல்லித் தலைமைக்கு சில குறிப்புகளை அனுப்பியுள்ளனர் பா.ஜ.க பிரமுகர்கள் சிலர். அதில், `20 ஆண்டுகாலமாகத் தமிழகத்தில் ஏழெட்டு முகங்கள் தலைவர் பதவியில் அமர்ந்துவிட்டன. அந்த முகங்களால் அவர்களுக்கு மட்டும்தான் லாபமே தவிர, மற்றவர்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை. கட்சியின் வளர்ச்சிக்கும் அவர்கள் எதுவும் செய்யவில்லை. யார் புதிதாகப் பதவிக்கு வந்தாலும் அவர்களைச் சுற்றியிருப்பவர்களை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்கின்றனர். இதுதான் நிலவரமாக இருக்கிறது. கட்சியை முன்னிறுத்தும் தலைவரை இதுவரை தமிழக பா.ஜ.க பார்க்கவில்லை. சாதி அல்லது பிரபலமானவர் என்பதை மட்டும் மையமாக வைத்துத் தேர்வு செய்து வருகிறீர்கள். இன்றைக்குத் தேவை, பிரபலமான முகமோ அல்லது சாதி தொடர்பான தலைவரோ அல்ல. கட்சியை அரவணைத்துச் செல்லக்கூடிய நபர்தான் தேவை. 2014 தேர்தலில் புதிய வாக்காளர்கள், எளிய வாக்காளர்களை மோடி கவர்ந்தார். அதனால்தான் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய 2 பெரிய கட்சிகளுக்கு இடையில் நாம் 2 இடங்களையாவது வெல்ல முடிந்தது. 20 சதவிகித வாக்குகளையும் பெற முடிந்தது. இந்தமுறை இவ்வளவு நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியும் வாக்காளர்களைக் கவர முடியவில்லை. 

`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்!' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்

காரணம், தமிழ்நாட்டில் இருந்த பிரசார அணுகுமுறைகள் அனைத்தும் மோடிக்கு எதிராக இருந்தது. இதைத் தகர்த்திருக்க வேண்டிய பொறுப்பு, மாநிலத் தலைமைக்கு இருந்தது. ஆனால், இதைத் தலைமையால் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு விவகாரமாக இருந்தாலும் கெயில், மீத்தேன் பிரச்னையாக இருந்தாலும் டெல்லிக்கே கெட்ட பெயர் ஏற்பட்டது. `நாங்கள் சரி செய்துவிடுகிறோம்' எனத் தமிழக ஆட்சியாளர்கள் வெற்று நம்பிக்கைகளைக் கொடுத்தனர். உண்மையில், இவையெல்லாம் நடைபெறுவதற்குக் காரணமானவர்கள் எதிர் முகாமில் கூட்டணி போட்டுள்ளனர் என்பதை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அனைத்தையும் பா.ஜ.க பக்கம் தள்ளிவிட்டனர். அதனால், நம்மால் கடந்த தேர்தலைப் போல இளைஞர்கள் வாக்குகளைக் கவர முடியவில்லை. தற்போதைய தேவை, புதிய வாக்காளர்களைக் கவரக்கூடிய, இளைஞர்களைக் கவரக்கூடிய, திராவிட சிந்தாந்தத்தை முறியடிக்கக்கூடிய தலைவர் வேண்டும். அந்தத் தலைவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் செயல்பட வேண்டும். அப்படிச் செய்தால்தான் தமிழகத்தில் பா.ஜ.க வளரும். பெங்களூருவில் தேஜஸ்வி சூரியா இருப்பதைப்போல, தமிழகத்துக்கும் அப்படிப்பட்ட தலைவர் வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர். 

`2021 பற்றிக் கவலைப்பட்டால் கேபினட் நிச்சயம்!' - தமிழக பா.ஜ.க-வின் 7 முகங்களைப் பற்றிப் பறந்த புகார்கள்

`தலைவர் பதவியில் மாற்றம் வருமா?' எனத் தமிழக பா.ஜ.க முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கேட்டோம். ``90 நாள்களுக்குள் நிச்சயமாக மாற்றம் வரும். தமிழகத்தில் இப்படித்தான் முடிவுகள் அமையும் என்பதைத் தலைமை ஏற்கெனவே கணித்து வைத்திருந்தது. `தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில்தான் வெற்றி கிடைக்கும்' என ஐ.பி-யும் அறிக்கை கொடுத்திருந்தது. கோவை தொகுதியிலேயே வெற்றி கிடைத்தால் கடும் நெருக்கடியில்தான் கிடைக்கும் என அவர்களிடம் இருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, தமிழக தலைவர்களிடம் பேசிய பா.ஜ.க மேலிடப் புள்ளி ஒருவர், `எத்தனை இடங்களில் வெல்லப்போகிறோம்?' எனக் கேட்க, `16 முதல் 19 இடங்களைப் பிடிப்போம்' என நம்பிக்கையோடு கூறியிருக்கிறார். எதிர்முனையில் சிரித்தபடியே பேசிய அந்தப் புள்ளி, `6 இடம் வந்தாலே பெரிய விஷயம்' எனக் கூறியிருக்கிறார். அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வுகள் முடிந்த பிறகு தமிழகத்தைக் கையில் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார் அமித் ஷா. 2021 சட்டமன்றத் தேர்தலைப் பற்றிக் கவலைப்பட்டால், நிச்சயமாக ஒரு கேபினட் பதவி தமிழகத்துக்குக் கிடைக்கும்" என நம்பிக்கையோடு விவரித்தார். 
 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு