Published:Updated:

யார் இந்த ரம்யா ஹரிதாஸ்? - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'

யார் இந்த ரம்யா ஹரிதாஸ்? - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'
யார் இந்த ரம்யா ஹரிதாஸ்? - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'

யார் இந்த ரம்யா ஹரிதாஸ்? - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் பிரதான நாடாளுமன்றத் தொகுதி ஆலத்தூர். 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டை. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பின்னும் இது தங்கள் கோட்டைதான் என்ற மனநிலையில் இருந்தார்கள் சி.பி.எம் ஆட்கள். ஆனால், 36 வருட இந்தக் கோட்டையைத் தர்க்க ஒருவர் அதுவும் பெண் ஒருவர் வருவார் என சி.பி.எம் நினைக்கவில்லை. அவர்கள் நினைப்புக்கு மாறாக கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையைத் தகர்த்தெறிந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 32 வயதாகும் இளம் பெண் ரம்யா ஹரிதாஸ். 

யார் இந்த ரம்யா ஹரிதாஸ்? - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'

யார் இந்த ரம்யா ஹரிதாஸ்?

சரியாக 2011-ம் ஆண்டு கேரள காங்கிரஸில் ஒரு தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி தீர்மானித்தார். அதற்குக் காரணம் பிஜே குரியன், வயலார் ரவி, உம்மன் சாண்டி என மூத்த தலைவர்கள் பலருக்கும் வயதாகிவிட்டது. இதனால் கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய கட்டாயம். இதற்காக ராகுல் நடத்தியது ``Talent Hunt programme.'' காங்கிரஸின் கொள்கைகள் மீது பற்று ஆர்வம் உள்ள இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களை டெல்லி வரவழைத்து வளர்த்தெடுப்பதுதான் இத்திட்டம். டெல்லியில் நடந்த இந்த மீட்டிங்கில் தனது பேச்சு திறனால் ராகுலைக் கவர்ந்தார். காங்கிரஸில் இணைகிறீர்களா என ராகுலே கேட்கும் அளவுக்கு ஸ்டாராக வலம் வந்தவர்தான் இந்த ரம்யா ஹரிதாஸ். கோழிக்கோட்டைச் சேர்ந்தவர். பரம்பரை காங்கிரஸ் குடும்பம். தந்தை ஹரிதாஸ் தினசரி கூலித் தொழிலாளி. தாய் ராதா டெய்லராக இருந்துகொண்டே காங்கிரஸில் இணைந்து பணியாற்றி வந்தார். இதனால்தான் என்னவோ ரம்யாவுக்கு ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸின் மீது பற்று இருந்தது. கூடவே சமூக சேவகியாக வலம் வரத் தொடங்கினார்.

யார் இந்த ரம்யா ஹரிதாஸ்? - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'

இதனால் கல்லூரிகளில் படிக்கும்போதே ராகுலின் சிறப்புத் திட்டத்தில் கலந்துகொண்டு காங்கிரஸின் அடுத்தகட்ட தலைவர்கள் பட்டியலில் உயர்ந்தார். கல்லூரி காலம் முடிந்தது. தான் இருக்கும் பகுதியில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரங்களுக்காகப் போராட ஆரம்பித்தார். தன்னால் முடிந்த உதவிகளை அம்மக்களுக்குச் செய்ய வேண்டும் எனச் செயல்பட்டு வந்தார். இதன்பயனாக குன்னமங்கலம் பஞ்சாயத்து பிரசிடென்ட் பதவி வந்து சேர்ந்தது. ஒருபுறம் இதிலும் மறுபுறம் கட்சியின் வளர்ச்சியிலும் இருதுருவமாகச் சிறப்பாகச் செயல்பட யாரும் எதிர்பாராத நேரத்தில் லோக் சபா தேர்தலில் ஆலத்தூர் தொகுதி வேட்பாளராக ரம்யாவை அறிவித்தது காங்கிரஸ் தலைமை. காங்கிரஸ் நம்பிக்கைக்கு ஏற்றவாறே இப்போது ஆலத்தூர் தொகுதியை அக்கட்சிக்குப் பெற்றுக்கொடுத்துள்ளார் ரம்யா. வயநாடு போட்டியால் கேரளாவில் கிடையாய்க் கிடந்த ராகுல் காந்தியின் பயணத்தால் அம்மாநிலத்தில் 20 சீட்டுகளில் 19 வென்றுள்ளது காங்கிரஸ். ஆனால், இது மட்டுமே இந்த ரம்யாவின் வெற்றிக்குக் கைகொடுக்கவில்லை. 

யார் இந்த ரம்யா ஹரிதாஸ்? - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'

வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலே பல்வேறு நெருக்கடிகளை, விமர்சனங்களை, அவமானங்களைச் சந்தித்து வந்தார். இதற்குக் காரணம் அவர் பட்டியலினத்தவர் என்பதாலோ பெண் என்பதாலோ தெரியவில்லை. ஆனால், இதையெல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை. ``நான் மக்களுக்காகச் சேவை செய்ய வந்துள்ளேன். அதுவே எனது குறிக்கோள்' எனக் கூறி பம்பரமாகச் சுழன்று பிரசாரத்தில் மக்களைச் சந்தித்தார் ரம்யா. தான் போட்டியிடுவது சி.பி.எம்மின் கோட்டை, 10 ஆண்டுகள் அங்கு எம்பியாக இருக்கும் பி.கே பிஜுவை எதிர்க்கிறோம் என்ற துளிபயமும் இல்லாமல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ரம்யா இசைக்கல்லூரியில் படித்தவர். இதனால்தான் செல்லும் இடங்களில் பாடல் பாடி, மக்களைக் கவர்ந்தார். இதையே எதிர்க்கட்சியான சி.பி.எம் ஏளனம் செய்தது. அந்தக்கட்சியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், `பாட்டுக்காரி ரம்யா; இது ஸ்டார் சிங்கர் அல்ல' என நேரடியாக விமர்சனம் செய்தார். இதேபோல் தன்னிடம் இருப்பது 22,000 ரூபாய் மட்டுமே வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்தார் ரம்யா. 

யார் இந்த ரம்யா ஹரிதாஸ்? - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'

இதையும் தேர்தல் ஸ்டன்டுக்காக இப்படிக் குறிப்பிட்டுள்ளார் என விமர்சித்தனர். இப்படி விமர்சனத்தை அள்ளி வீசிய கட்சி பிரமுகர்களை சி.பி.எம் தலைவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக அவர்களும் ரம்யா மீது விமர்சன கணைகளைக் தொடுத்தனர். ``ஆம், நான் பாட்டுக்காரியாக இருப்பதில் பெருமைதான். நான் பாடுவதால் மக்கள் சந்தோசப்படுகிறார்கள். அவர்கள் எனக்கு ஓட்டுப்போடாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்காகப் பாடுவேன்; அவர்களுக்காக என் வாழ்நாள் முழுவதும் உழைப்பேன். நான் சாதாரண குடும்பத்தில் இருந்து வருகிறேன். மக்களின் தேவை என்ன என்பது தெளிவாகத் தெரியும். ஒருவேளை எம்.பி-யானால் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்காகச் செயல்படுவேன்" எனச் சொல்லியதுடன் விமர்சனங்களையும் தாண்டி, மக்களை தெருத்தெருவாக சென்று சந்தித்தார். இவர்களின் விமர்சனமே ரம்யாவுக்கு வாக்காக மாறியது. ஆலத்தூர் தொகுதி வரலாற்றை எந்த ஒரு எம்.பி-யும் இதுவரை பெறாத வகையில் கம்யூனிஸ்ட் வேட்பாளரை 1.55 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 

யார் இந்த ரம்யா ஹரிதாஸ்? - 36 வருட கம்யூனிஸ்ட் கோட்டையைத் தகர்த்த பழங்குடி `பாட்டுக்காரி'

கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனத்தைக் கண்டுகொள்ளாத மக்கள், `அவர் எங்களுடைய `பெண்களுட்டி' (மலையாளத்தில் `சொந்தப் பெண்' என்று அர்த்தம்). கேரள தேசத்தின் பெருமை அவள். அவள் பின்னால் நாங்கள் எப்போதும் நிற்போம்' ரம்யாவுக்கு மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர். கேரள வரலாற்றில் நாடாளுமன்றத்துக்குச் செல்லும் இரண்டாவது பட்டியலினத்து பெண் ரம்யா. இதற்கு முன் 1976-ம் ஆண்டு பட்டியலினத்து பெண் ஒருவர் நாடாளுமன்றத்துக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு