Published:Updated:

`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்!' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா

நாடாளுமன்றத் தேர்தலோடு ஒடிசா, ஆந்திரா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றன. இதில் மாநிலக் கட்சிகளே கோலோச்சியுள்ளன. ஒடிசாவில் ஐந்தாவது முறையாக நவீன் வந்துள்ள அதேநேரத்தில் ஆந்திராவில் 10 ஆண்டுக்கால உழைப்பை அறுவடை செய்து முதல்முறையாக முதல்வர் நாற்காலியில் அமரவுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. ஜெகனின் வெற்றியை எந்தளவுக்கு அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்களோ அதே அளவு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ஒருவரின் வெற்றியையும் கொண்டாடி வருகிறார்கள். அவர் வேறு யாரும் அல்ல. பிரபல நடிகையும், தமிழகத்தின் மருமகளுமாகிய ரோஜாதான்.

`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்!' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் சித்துார் மாவட்டத்துக்கு உட்பட்ட நகரி தொகுதியில் நடிகை ரோஜா போட்டியிட்டார். ரோஜா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளர் பானு பிரகாஷை 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ரோஜாவுக்கு 79,499 வாக்குகளும், காளி பானு பிரகாஷுக்கு 76,818 வாக்குகளும் கிடைத்தன. நகரி தொகுதியில் ரோஜா ருசிக்கும் இரண்டாவது வெற்றி இதுவாகும். கடந்த முறை வெற்றிபெற்றபோது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆனால், இந்த முறை ஒய்.எஸ்.ஆர் கட்சி ஆட்சியைப் பிடித்திருப்பதால் அமைச்சர் பதவியை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார் ரோஜா. ஜெகனின் விசுவாசமிக்க, நம்பிக்கைக்குரியவராக வலம் வரும் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி உறுதி எனப் பேசிக்கொள்கிறார்கள் ஆந்திர மக்கள். இப்படி ஓர் இடத்தை ரோஜா அடைவதற்கு அவர் கொடுத்த விலை கொஞ்சம் நஞ்சம் அல்ல. அதைத் தெரிந்துகொள்ள அவரது அரசியல் பிரவேசத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்!' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா

1999-ம் ஆண்டு நடிகையாகத் தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் உச்சத்தில் இருந்தார் ரோஜா. அந்த வருடம் மட்டும் இரண்டு மொழிகளிலும் சேர்த்து அவரது நடிப்பில் 10 படங்கள் வெளிவந்தன. இப்படி உச்சத்தில் இருந்தபோதே அரசியல் ஆசை துளிர்விட, சந்திரபாபு நாயுடு முன்னிலையில் தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்த சந்திரபாபு கட்சியின் மகளிர் அணித் தலைவியாக அறிவித்தார். சினிமாவில் நடித்துக்கொண்டே கட்சியிலும் தீவிரமாக உழைத்தார். கட்சி மீட்டிங், போராட்டம் என பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று தீவிரமாக களப்பணியாற்றினார். 10 ஆண்டுகள் உழைப்புக்குப் பயனாக 2009-ம் ஆண்டு சந்திரகிரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட சீட் கிடைத்தது. நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் உழைத்தார். உட்கட்சி சண்டையால் சொந்தக் கட்சியினரே எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக உழைத்ததால் தோல்வியைத் தழுவினார். அந்த ஒரு தோல்வி தெலுங்கு தேசம் கட்சியில் அவருக்கு இருந்த மவுசை சரித்தது. கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார். அந்த நேரத்தில் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றுக்கு ரோஜாவை அழைக்க கட்சி நிர்வாகிகள் தயக்கம் காட்டியதாகவும் கூறப்பட்டது.

`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்!' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா

நிலைமையை உணர்ந்த ரோஜா இனியும் இங்கிருந்தால் தனக்கு மதிப்பில்லை என்பதை அறிந்து முகாம் மாறினார். வளர்ந்து வரும் தலைவராக செயல்பட்டு வந்த ஜெகனின் ஒய்.எஸ்.ஆர் கட்சியில் ஐக்கியமானார். ``ஜெய் ஜெகன் அண்ணா'' என்ற ஒற்றை கோஷத்துடன் ஜெகனை அண்ணன் என அழைத்து அவரின் சகோதரியாக, நம்பிக்கைக்கு உரியவராக, கட்சியின் பீரங்கிப் பேச்சாளராக வலம் வரத் தொடங்கினார். 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வந்தது... இந்த முறை தனது நம்பிக்கைக்கு உரியவராக இருந்த ரோஜாவுக்கு சீட் கொடுத்தார் ஜெகன். எந்தக் கட்சியால் ஓரம்கட்டப்பட்டாரோ, அதே கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் சொந்த மாவட்டமான சித்தூரில் உள்ள நகரி தொகுதியில் போட்டியிட்டார் ரோஜா. கடந்த முறை தோல்வியைச் சந்தித்தவர் இந்தமுறை வெற்றியை ருசித்தார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தெலுங்கு தேசம் வேட்பாளரைவிட 858 வாக்குகள் அதிகம் பெற்றார். இதன்பிறகுதான் ரோஜாவின் அரசியல் வாழ்வில் ஏறுமுகம் என்று சொல்லலாம்.

`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்!' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா

அரசியலில் என்ட்ரி கொடுத்துக் கிட்டத்தட்ட 15 வருடத்துக்குப் பிறகு முதல்முறையாகச் சட்டசபை செல்லும் வாய்ப்பு கிடைக்க அதனைச் சரியாக பயன்படுத்திக்கொண்டார். முதல்முறை எதிர்க்கட்சியாகச் சென்ற ஒய்.எஸ்.ஆர் கட்சிக்கும், மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற சந்திராபாபு நாயுடுவுக்கும் அவ்வப்போது சட்டசபையில் பனிப்போர் நடப்பது வழக்கமாகி இருந்தன. இதில் ஹைலைட்டாக தெரிந்தது ரோஜாதான். ஜெகன் மோகன் ரெட்டி சட்டசபையில் அடக்கி வாசிக்க, தெலுங்கு தேசம் ஆட்சியில் உள்ள குறைகளையும், தனது தொகுதிக்குச் செய்ய வேண்டியவற்றையும் தனது அனல் பறக்கும் பேச்சின் மூலம் சட்டசபையில் கேள்விக்கணைகளாக சந்திரபாபு நாயுடுவை நோக்கி வீசினார் ரோஜா. இதில் ஒருகட்டத்தில் அதிர்ந்துதான் போனார் சந்திரபாபு நாயுடு. இவற்றின் எதிரொலியாக ஒருவருடகாலம் சபையில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார் ரோஜா. சஸ்பெண்டுக்கு எதிராக நீதிமன்றம் சென்று வெற்றியும் கண்டார். ஆனால், ஆளும் அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை. இருந்தும் மனம் தளராத ரோஜா, தொகுதியில் கிடையாய் கிடந்தார்.

`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்!' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா

நமது ஊரில் உள்ள `அம்மா உணவகம்' போலத் தனது தொகுதியான நகரி தொகுதியில் உள்ள ஏழை மக்களின் பசியைப் போக்க, `ஒய்.எஸ்.ஆர் அண்ணா உணவக'த்தைத் தொடங்கினார். இதன்மூலம்  தினமும் ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் பசியை போக்கினார். இதுமட்டுமில்லாமல் மக்களுக்கு மலிவு விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். இவை அனைத்துக்கும் அரசாங்கத்திடம் பணம் எதிர்பார்க்காமல் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பணம் மூலம் நடத்தினார்.

`நகரி நாயகி; சந்திரபாபு நாயுடுவின் சிம்ம சொப்பனம்!' - ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பும் ரோஜா

மேலும், சில திட்டங்களைத் தொகுதி முழுக்க செயல்படுத்த ஆரம்பித்தார். இதற்கு மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதேநேரம் ஆளும் கட்சியால் தொகுதி புறக்கணிக்கப்பட்டு வருவதையும்  மக்களிடத்தில் கொண்டுசேர்த்தார். மேலும், தொகுதியின் முக்கிய பிரச்னைகளை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வைத்து அதை கட்சித் தலைவர் ஜெகன் மூலமாகவே அறிவிக்க வைத்தார். இப்படி தொகுதி மக்களிடம் தனக்கு இருந்து இமேஜை குறையாமல் பார்த்துக்கொண்ட ரோஜா தெலுங்கு தேசம் வேட்பாளர் பானு பிரகாஷை 2,681 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இரண்டாவது முறையாக நகரி மக்களின் அபிமானியாக மாறியதுடன், அமைச்சர் பதவியையும் நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார்.