Published:Updated:

இந்திய அணிக்கு கருணாநிதி வாழ்த்து தந்தி

சென்னை, ஏப்.4,2011

உலக கோப்பையை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தந்தி அனுப்பினார். ##~~##

இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

உலக கோப்பையை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவாருக்கு அவர் அனுப்பியுள்ள வாழ்த்து தந்தியில், 'இந்திய கிரிக்கெட் அணி மீண்டும் உலக கோப்பையை வென்ற செய்தியை கேள்விபட்டதும் எனது இதயம் மகிழ்ச்சியில் பொங்கி வழிகிறது.

உலக விளையாட்டு அரங்கில் இந்தியா மிக முக்கியமான சக்தி என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மும்பையில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க, மறக்க முடியாத மகிழ்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஒட்டுமொத்த தேசத்தின் பாராட்டையும் பெற முழு தகுதி பெற்றவர். உலக கோப்பையை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு தமிழக மக்கள் சார்பாகவும், எனது சார்பாகவும் இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.