Published:Updated:

`70 வருஷம் ஆகுது, சண்டை போட்டு என்ன பயன்?'- பரூக் அப்துல்லா வேதனை

`70 வருஷம் ஆகுது, சண்டை போட்டு என்ன பயன்?'- பரூக் அப்துல்லா வேதனை
`70 வருஷம் ஆகுது, சண்டை போட்டு என்ன பயன்?'- பரூக் அப்துல்லா வேதனை
`70 வருஷம் ஆகுது, சண்டை போட்டு என்ன பயன்?'- பரூக் அப்துல்லா வேதனை

மக்களவைத் தேர்தலின் பெரும்பான்மையான இடங்களில் பா.ஜ.க  வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரில்  பா.ஜ.க  மூன்று தொகுதிகளிலும், எதிர்த்துப் போட்டியிட்ட  ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி மூன்று தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் உதம்பூர், லடாக், ஜம்மு, ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த் நாக்  என 6 மக்களவைத் தொகுதிகளை உடைய ஜம்முவில் தேசிய மாநாட்டுக் கட்சி பாராமுல்லா, அனந்த் நாக், ஸ்ரீ நகர் ஆகிய  இடங்களில் வெற்றி அடைந்திருக்கிறது. இதில் ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிட்ட அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா 1,06,750 வாக்குகள் பெற்று வெற்றியடைந்திருக்கிறார்.

வெற்றி பெற்றதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ``பாகிஸ்தானுடன் நட்புடன் கூடிய நல்லுறவில் இருக்க வேண்டும்'' என்று  கூறியுள்ளார்.  மேலும், ``சுதந்திரம் அடைந்து 70 வருடங்கள் ஆன பின்பும் எங்களுக்குச் சுத்தமான குடிநீர் வசதி இல்லை, அவர்களுக்கும் போதுமான மின்வசதி மற்றும் தரமான மருத்துவ வசதி இல்லை. இவ்வாறு இருக்கும்போது ஆயுதங்களை எடுத்துச் சண்டை போடுவதை நிறுத்த வேண்டும். இதற்கு நாம் ஒரு தீர்வை பாகிஸ்தானுடன் சேர்ந்து எடுக்க வேண்டும். பாகிஸ்தான் அதன் ஏழ்மையிலிருந்து வெளிவந்து முன்னேற `சர்வதேச நாணய நிதியம்' (IMF) என்ற அமைப்பிடமிருந்து நிதி பெற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து சண்டையை மேற்கொண்டிருந்தால் பாகிஸ்தான் வளர்ச்சி அடையவே முடியாது. ஆகவே, இனிவரும் காலத்திலாவது பகைமையை நிறுத்தி நல்லுறவைத் தொடங்க வேண்டும்”  என்று கூறியுள்ளார்.

Vikatan