Published:Updated:

தேர்தல் முடிவுகள்... தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு எந்த இடம்? #VikatanInfographics

தேர்தல் முடிவுகள்... தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு எந்த இடம்? #VikatanInfographics
தேர்தல் முடிவுகள்... தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு எந்த இடம்? #VikatanInfographics

தமிழகத்தில் நடந்து முடிந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பதிவான ஓட்டுகளில், அதில் ஒவ்வொரு கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம், கூட்டணிக் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகித விவரங்கள் இந்தக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

டந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் பதிவான மொத்த வாக்குகள் 4.22 கோடி, மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5.91 கோடி. தமிழகத்தில் பதிவான வாக்குசதவிகிதம் 71.87. இது கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பதிவான வாக்குகளைவிடக் குறைவு. 2014-ல் மொத்த வாக்காளர்கள் 5.3 கோடி, பதிவான வாக்குகள் 4.3 கோடி. பதிவான வாக்கு சதவிகிதம் 73.82. 

எந்தெந்தக் கட்சிக்கு எவ்வளவு ஓட்டு? 

தேர்தல் முடிவுகள்... தமிழகத்தில் எந்தக் கட்சிக்கு எந்த இடம்? #VikatanInfographics

தி.மு.க கூட்டணி :

2014-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க 95 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இது பதிவான மொத்த வாக்குகளில் 23.6 விழுக்காடாகும். அந்தத் தேர்தலில் தி.மு.க ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை.

இந்தமுறை தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் 2.23 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளன. இது பதிவான மொத்த வாக்குகளில் 52.64 விழுக்காடாகும். இதில் தி.மு.க மட்டும் பெற்ற வாக்கு சதவிகிதம் 32.76 ஆகும். 

அ.தி.மு.க கூட்டணி: 

2014-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க 1.79 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இது பதிவான மொத்த வாக்குகளில் 44.3 விழுக்காடு. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 

ஆனால், நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி மொத்தம் 1.28 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இது பதிவான மொத்த வாக்குகளில் 30.28 விழுக்காடாகும். இதில் அ.தி.மு.க பெற்ற வாக்கு சதவிகிதம் 18.48 ஆகும்.

பி.ஜே.பி கூட்டணி: 

2014-ம் ஆண்டு தேர்தலில் பி.ஜே.பி கூட்டணியில், பி.ஜே.பி மட்டும் 22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. அதன் வாக்கு சதவிகிதம் 5.5. அந்தக் கூட்டணியில் அப்போது இடம்பெற்றிருந்த தே.மு.தி.க 20 லட்சத்து 79 ஆயிரத்து 392 வாக்குகளைப் பெற்றது. வாக்கு சதவிகிதம் 5.1. அதேகூட்டணியில் பா.ம.க 18 லட்சத்து 4 ஆயிரத்து 812 வாக்குகளைப் பெற்றது. வாக்கு சதவிகிதம் 4.4 ம.தி.மு.க 14 லட்சத்து 17 ஆயிரத்து 535 வாக்குகளைப் பெற்றது. வாக்கு சதவிகிதம் 3.5.

காங்கிரஸ்: 

தமிழகத்தில் 2014-ம் ஆண்டு 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டது. அப்போது 17 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை அந்தக் கட்சி பெற்றது. இது பதிவான மொத்த வாக்குகளில் 4.3 விழுக்காடு. ஆனால், இந்தத் தேர்தலில் தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்கு சதவிகிதம் 12.76 ஆகும். 

மற்ற கட்சிகள்: 

2014-ம் ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாகத் தேர்தலைச் சந்தித்த ஆம் ஆத்மி கட்சி 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இது பதிவான மொத்த வாக்குகளில் 0.5 விழுக்காடாகும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு, 6,06,110 வாக்குகளும், புதிய தமிழகம் கட்சிக்கு 2,62,812 வாக்குகளும் கிடைத்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2014-ல் 2,20,614 வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி 2,19,866 வாக்குகளையும் பெற்றன.

அ.ம.மு.க: 

டி.டி.வி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க சந்தித்துள்ள முதல் மக்களவைத் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் அ.ம.மு.க ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இது பதிவான மொத்த வாக்குகளில் 5.38 விழுக்காடு ஆகும்.

நாம் தமிழர் கட்சி : 

2010-ம் ஆண்டு கட்சி தொடங்கியபோதிலும் நாம் தமிழர் கட்சி 2019-ம் ஆண்டுதான் மக்களவைத் தேர்தலைச் சந்தித்துள்ளது. தனித்துப் போட்டியிட்ட அக்கட்சி 16 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இது பதிவான மொத்த வாக்குகளில் 3.99 விழுக்காடு ஆகும். 2016-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 4 லட்சத்து 58 ஆயிரத்து 104 இது பதிவான மொத்த வாக்குகளில் 1.1 விழுக்காடு. 

மக்கள் நீதி மய்யம்:

நடிகர் கமல் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் சந்தித்துள்ள முதல் மக்களவைத் தேர்தல் இதுதான். இந்தத் தேர்தலில் 15 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இது பதிவான மொத்த வாக்குகளில் 3.94 விழுக்காடு.   

நோட்டா - NOTA :

2014-ம் ஆண்டு நோட்டாவுக்கு 5 லட்சத்து 82 ஆயிரத்து 62 வாக்குகள் கிடைத்தன. இது பதிவான மொத்த வாக்குகளில் 1.4 விழுக்காடாகும். 
இந்த ஆண்டு நோட்டாவுக்கு 5 லட்சத்து 41 ஆயிரத்து 150 வாக்குகள் பதிவாகியுள்ளன. இது பதிவான மொத்த வாக்குகளில் 1.28 விழுக்காடாகும். கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் நோட்டாவின் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. இதற்குக் காரணம், பல புதிய கட்சிகளின் வருகை என்றுகூடச் சொல்லலாம்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு