Published:Updated:

உலக சாம்பியனுக்கு ஜனாதிபதி விருந்து!

மும்பை, ஏப்.4,2011

உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை விருந்து அளித்தார். ##~~##

10-வது உலகக் கோப்பையை கைப்பற்றிய இந்திய கிரிக்கெட் அணிக்கு முதன் முதலாக அதிகாரப்பூர்வமான விருந்து அளித்த பெருமையை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தட்டிச்சென்றார்.

மும்பையில் ஆளுனர் மாளிகையில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணிக்கு சிறப்பு தேனீர் விருந்து அளித்தார்.

இந்த விருந்தில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், அவரது அணியினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் மராட்டிய ஆளுனர் கே. சங்கரநாராயணன், முதல்வர் பிரிதிவிராஜ் சவான், அவரது அமைச்சரவை சகாக்கள் கலந்து கொண்டனர்.

இந்த விருந்தின்போது உலகக்கோப்பை வென்ற இந்திய அணியினரை ஜனாதிபதி பாராட்டி மகிழ்ந்தார்.