Published:Updated:

`ஜூனுக்குள் முடித்துவிடணும்!' - மா.செ-க்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்ட்

அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு,  `சட்டமன்றம் கூடும் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தேதி அறிவித்ததும் அதுகுறித்து முடிவெடுப்போம்’ என்று ஸ்டாலின் கூறியதன் பின்னணியில் மெகா பிளான் இருக்கிறது என தி.மு.க தரப்பில் கூறப்படுகிறது. 

`ஜூனுக்குள் முடித்துவிடணும்!' - மா.செ-க்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்ட்

மக்களவை தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஓரளவு நிம்மதியைக்கொடுத்துள்ளது. அப்படியிருந்தாலும், 13-9 என்ற கணக்கு பெரிய அளவில் உதவும் என அவர் நினைக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் சறுக்கிவிடலாம் என்ற பயமும் அவருக்குள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மத்தியில் பா.ஜ.க இருப்பதால், இரண்டாண்டுகளை நடத்திக்கொண்டு செல்வதில் சிக்கல் இருக்காது என்பதும் அவரது கணிப்பு. தங்கள் தரப்பு எம்.எல்.ஏ-க்களை தக்கவைப்பதற்கான நடவடிக்கைகளில் கவனம்செலுத்திவருகிறார். அதேபோல, உளவுத் துறையிடம் தி.மு.க-வின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும், ஆட்சியைக் கலைக்க அவர்கள் எண்ண திட்டம் தீட்டி வருகிறார்கள் என்பது குறித்தும் கேட்டுவருகிறார்.

`ஜூனுக்குள் முடித்துவிடணும்!' - மா.செ-க்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்ட்

இப்படியாக,  360 டிகிரியில் ஆட்சிக்கு ஆபத்து எதுவும் வந்துவிடாமல் அடைகாத்துக்கொண்டிருக்கிறார். இப்படி அவர் பயந்துகொண்டிருக்கும் நிலையில், தி.மு.க-வின் திட்டமோ வேறுமாதிரியாக இருக்கிறது என்கிறார்கள். இது தொடர்பாக தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தபோது, ``ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளன்று, அ.தி.மு.க ஆட்சியைக் கலைப்போம் என ஸ்டாலின் கூறியிருந்தாலும், தற்போது நிலைமை வேறு மாதிரித்தான் இருக்கிறது. தி.மு.க-வில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் பலர் ஆட்சி கவிழ்ப்புக்கு ஆதரவாக இல்லை. அதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களின் இந்த நடவடிக்கை, எடப்பாடிக்கு ப்ளஸ்ஸாக பார்க்கப்படுகிறது.

`ஜூனுக்குள் முடித்துவிடணும்!' - மா.செ-க்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்ட்

இன்னும் இரண்டாண்டுகளை இப்படியே கழித்துவிட்டு, மீண்டும் தேர்தலை சந்திப்பதே உசிதமாக இருக்கும் என நினைக்கிறார்கள். காரணம், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் செலவு செய்ததிலிருந்து அவர்களால் இன்னும் மீளவில்லை. அந்த நேரத்தில் எப்படியும் தி.மு.க தான் ஆட்சி அமைக்கும் எனக் கருதி பணத்தை வாரி  இறைத்துவிட்டார்கள். அதுமட்டுமின்றி, இடைத்தேர்தலிலும் எம்.எல்.ஏ-க்கள் சிலர் பணத்தை செலவுசெய்துள்ளனர்.

`ஜூனுக்குள் முடித்துவிடணும்!' - மா.செ-க்களுக்கு ஸ்டாலின் கொடுத்த அசைன்மென்ட்

இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்து மீண்டும் தேர்தல் வந்தால், அதை எதிர்கொள்ள தங்களால் முடியாது என அவர்கள் கருதுகிறார்கள். தங்களுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்பதுகூட உறுதியில்லாத நிலையில், எப்படி செலவுசெய்வது எனத் தயங்குகிறார்கள். `இந்தத் தடவ செலவு செஞ்சீங்கன்னா 5 வருடம் நம்மதான்’ என்று ஸ்டாலின் உறுதியளிக்கிறார்.  இதற்கிடையில், அ,தி.மு.க எம்.எல்.ஏக்களைத் தங்கள் பக்கம் இழுக்கவும் முயற்சிகள் நடந்துவருகிறது. இதற்காக, மாவட்டச் செயலாளர்களைக் களமிறக்கியுள்ளது தி.மு.க. ஜூன் மாதம் கூடும் சட்டப்பேரவை கூட்டத் தொடருக்குள் இந்த ப்ராஸஸை முடித்துவிட வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு தரப்பட்டிருக்கும் அசைன்மென்ட். அப்படி வெற்றிகரமாக முடித்துவிட்டால், அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரலாம் என்ற முடிவிலிருக்கிறது தி.மு.க” என்கிறார்கள். 

அடுத்த கட்டுரைக்கு