Published:Updated:

`நீ எந்த ஊரு.. எந்த சாதி?’ - கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் சர்ச்சை!

`நீ எந்த ஊரு.. எந்த சாதி?’ - கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் சர்ச்சை!
`நீ எந்த ஊரு.. எந்த சாதி?’ - கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் சர்ச்சை!

`நீ எந்த ஊரு.. எந்த சாதி?’ - கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் சர்ச்சை!

புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று மக்களவைத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அங்கு தி.மு.க வேட்பாளர் தனுஷ்குமார் என்பவரிடம் தோல்வியைத் தழுவினார். இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  `எனக்காக வாக்குசேகரித்த எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பி.எஸ், சரத்குமார், பிரேமலதா உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு நன்றி. பியூஷ் கோயல் நேரடியாக வந்து என் தொகுதிக்கு பிரசாரம் செய்தார். தென்காசி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கும் நன்றி. வெற்றிவாய்ப்பை இழந்த வேட்பாளர்கள் மனம் தளர்ந்துவிடக்கூடாது என பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன்.

அவர்கள் மனம் தளர்ந்துவிட வேண்டாம். தென்காசியில் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தேன். உயர் வகுப்பினர், முன்னேறிய சமூகத்தினர் எனக்கு வாக்களித்துள்ளனர். இதன்மூலம் தென்காசியில் ஒரு சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிராமணர்கள், முதலியார்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட முன்னேறிய சமூக மக்கள் தேர்தல் நேரத்தில் வரவேற்பு மட்டுமல்ல வாக்குகளையும் அளித்துள்ளனர். இது வரும் நாளில் சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும். 30 ஆண்டுகளாக எந்தச் சமூக மக்களுக்காக பாடுபட்டேனோ, அதன்படி சமூக மக்களை ஒன்றிணைத்துள்ளேன். புதிய தமிழகம் கட்சி சார்பாக ஓராண்டில் அனைத்துக் கிராமங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறேன். ஒரு புதிய சகாப்தத்தை 2021-ல் புதிய தமிழகம் படைக்கும். தமிழகத்தில் 2 ஆண்டுக்காலம் எடப்பாடி பழனிசாமியை நிம்மதியாக ஆட்சி செய்யவிட வேண்டும். அவர்களைச் செயல்பட சுதந்திரம் கொடுக்க வேண்டும்” என்றார்.

`நீ எந்த ஊரு.. எந்த சாதி?’ - கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் சர்ச்சை!

அப்போது செய்தியாளர் ஒருவர், `தென்காசி மக்கள் புதிய தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ன காரணம்?’ என்று கேட்டார். அதற்கு கிருஷ்ணசாமி, `தோல்வியாக நீங்கள் பார்ப்பதை, நான் வெற்றியாகப் பார்க்கிறேன். பிரிந்துகிடந்த சமுதாய மக்களை ஒருங்கிணைக்கும் பணியை தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் செய்துள்ளேன். இது சமூக மாற்றம். அனைத்துச் சமுதாய மக்கள் இருக்கும் இடத்தில் எங்களால் வாக்கு கேட்க முடிந்தது என்றால், அது சமூகப் புரட்சிதான். ஜல்லிக்கட்டு தொடங்கி கஜா புயல் வரையிலும் மோடி எதிராக செயல்படுகிறார் என ஒரு மாயைதான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோல்விக்குக் காரணம். தமிழக மக்கள் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் உணர்ச்சிக்கு இரையாகியிருக்கிறார்கள்.

மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்டியமைக்கப்பட்ட பிம்பம்தான் தோல்விக்குக் காரணம். மோடி செய்த நல்லதை மக்கள் புரிந்துகொள்ளவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கொடுத்தாரே, அதற்கு ஏன் மக்கள் நன்றி செலுத்தவில்லை?” என்றார்.

தொடர்ந்து, ``பா.ஜ.க-வின் திட்டங்களை ஊடகங்கள்தான் திரித்து மக்களிடம்கொண்டு சேர்க்கிறது” என்று கூறி,  ஒருமையில், `நீ எந்த ஊரு, எந்த சாதி... உன் கேள்விக்குப் பதில் சொல்லமுடியாது போயா’ என்றார். இதனால் செய்தியாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், `ஏய் உட்காரு..' என்று கூற வாக்குவாதம் ஏற்பட்டது.  `எந்த சாதி என கேட்பதில் எந்தத் தப்பும் இல்லை. சாதி என்னனு சொல்லப்பா..’ என்று பேச வாக்குவாதம் நீடித்தது. பின்னர் செய்தியாளர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். 

அடுத்த கட்டுரைக்கு