பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

ஐ.ஜெயராஜ், இராயப்பன்பட்டி.

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு கிடைக்கப்போவது விடுதலையா? தண்டனையா?

தீர்ப்பு வந்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறதா உமக்கு? முடிந்த அளவு அதனுடைய தீர்ப்பை தள்ளிப் போகச் செய்வதற்கான வேலைகள்தான் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இப்போது நடந்துள்ள குடும்பப் பிரிவும் அதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கும். அவர் செல்லும் நாளில் இவர் செல்ல மாட்டார். இவர் ஆஜராகும் அன்று அவர் வர மாட்டார். எனவே, ஜவ்வு மிட்டாய்க்கு பெங்களூரு ஃபேமஸ் ஆகப்போகிறது!

 ஜி.அர்ஜுனன், திருப்பூர் 7.

கழுகார் பதில்கள்

தி.மு.க.வில் அடுத்த இளைஞர் அணிச் செயலாளர் யார்?

ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக இருந்து மறைந்த அன்பில் பொய்யாமொழியின் மகனாக இருக்கலாம். இவரும் உதயநிதியும் ஒன்றாகவே இருக்கிறார்கள். ஸ்டாலினை இவரும் 'அப்பா’ என்றுதான் அன்பின் மிகுதியால் அழைப்பாராம்!

'அரசியலைவிட சினிமா மீதுதான் எனக்கு அதிக ஆர்வம்’ என்று உதயநிதி சொல்லி, தனது நண்பருக்கு பதவி தரக் கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது!

 அ.குணசேகரன், புவனகிரி.

கழுகார் பதில்கள்

ராவணன் - திவாகரன் ஒப்பீடு செய்க!

திவாகரன் - 30 ஆண்டுகளாகச் செய்து வந்த காரியத்தை, மூன்றே ஆண்டுகளில் செய்து முடித்தவர் ராவணன். வெளிப்பகையை விட உட்பகைதான் உடனடியாகக் கொல்லும் என்பதற்கு இரண்டு பேருமே உதாரணங்கள்!

 டி.ஜெய்சிங், கோயமுத்தூர்.

கழுகார் பதில்கள்

அடுத்த கட்டத் தலைவர்களின் குரல் அதிகம் கேட்பது எந்தக் கட்சியில்?

கம்யூனிஸ்ட் கட்சியில்தான்! எந்தச் சேனலைத் திருப்பினாலும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் யாராவது ஒருவர்தான் கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். மற்ற கட்சியில் இந்தச் சுதந்திரம் இல்லை!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி

கழுகார் பதில்கள்

'அரசின் சார்பாக வரும் அனைத்து அறிவிப்புகளும் முதல்வர் ஜெயலலிதா செய்வதாகவே உத்தரவு வருகிறதே. அமைச்சர்கள் யாரும் இல்லையா?’ என்று கேட்கிறாரே கருணாநிதி?

நிதி அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகனையே அழைக்காமல் பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியவர்தானே கருணாநிதி? பொதுவாகவே கருணாநிதியும் ஜெயலலிதாவும் முக்கிய அறிவிப்புகள் அனைத்தையும் தாங்களே சொல்ல வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். இதில் விநோதமான ஒரு தகவல் என்னவென்றால்...

சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அமைச்​சர்கள் பதில் அளித்துப் பேசினார்கள். அந்தப் பேச்சை வெளியிட்ட 'நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் அமைச்சர்களின் புகைப்​படத்துக்குப் பதிலாக ஜெயலலிதா படத்தையே தொடர்ந்து வெளியிடுகிறார்கள். அமைச்​சர்கள் பாவம்தானே!

 ர.ஷண்முகப்ரியா, திருப்பூர்-5

கழுகார் பதில்கள்

அரசு எடுக்கும் முடிவுகளை நீதிமன்றம் நிராகரித்தால், அப்புறம் தேர்தல் எதற்கு? சட்டமன்றம் எதற்கு? முதல்வர் என்ற பதவி​தான் எதற்கு? நீதிமன்றமும் நீதிபதிகளுமே நாட்டை ஆண்டுவிட்டுப் போகலாமே?

நம்முடைய அரசியல் சட்ட அமைப்பில் அனைத்தையும் கண் காணிக்கும், கருத்துச் சொல்லும், வழிநடத்தும் அதிகாரம் நீதித்துறைக்குத்தான் உள்ளது. உச்ச நீதி​மன்​றம்தான் அனைத்துக்கும் உச்சம். இப்படி ஓர் உச்ச நீதிமன்றம்

இல்லாமல் போயிருந்தால், பல லட் சம் கோடி 2ஜி ஊழலே வெளிச்​சத்துக்கு வந்திருக்காதே. 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் செய்த காரியத்தை நீதிமன்றம் கேட்க முடியாது’ என்று வாதிட்டால்... இந்தக் குற்றச்சாட்டுக்கள் எப்படி வெளிச்சத்துக்கு வரும்?

மக்களால் தேர்ந்து எடுக்கப்படுபவர்கள், தேவையான சட்டங்களை இயற்றட்டும். நிர்வாகத்துறை அதை செயல்படுத்தட்டும். ஏதாவது சிக்கல் வந்தால், அதை நீதித்துறை தீர்க்கட்டும்... என்ற படிநிலை கொண்டதுதான் நம் அரசியலமைப்புச் சட்டமே. அரசு எடுக்கும் முடிவு நியாயமானதாக, பாரபட்சம் இல்லாததாக, அரசியல் நோக்கமற்றதாக இருந்தால்... நீதிமன்றம் ஏன் அதை நிராகரிக்கப்போகிறது?

 எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கழுகார் பதில்கள்

எங்கே துல்லியமாகச் சொல்லுங்கள் பார்க்கலாம்... தமிழகத்தில் எத்தனை மந்திரிகள்? பதவி இழந்தவர்கள் எத்தனை பேர்? புதிதாக மந்திரி ஆனவர்கள் எத்தனை பேர்? சொல்ல முடியுமா?

மொத்த மந்திரிகள் 33 பேர். பதவி இழந்தவர்கள் 10 பேர். புதிதாக அமைச்சர் ஆனவர்கள் 10 பேர். பதவியை இழந்து மீண்டும் அமைச்சர் ஆனவர் ஒருவர்.

கழுகார் பதில்கள்

இதை எண்ணிக்கொண்டுஇருப்பது​தானே, இப்போது நமதுவேலையே!

 பா.ஜெயபிரகாஷ், சர்க்கார்பதி.

கழுகார் பதில்கள்

அண்ணா ஹஜாரேவின் மருமகன் விநாயக் தேஷ்முக், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறாராமே?

காந்தியின் மகனே காந்திபேச்சைக் கேட்கவில்லை என்பதுதான்யதார்த்தம்!

 அ.குணசேகரன், புவனகிரி

கழுகார் பதில்கள்

அடுத்த கைது யார்?

நிறையப் பேசுவார்! ரொம்ப ஆடுவார்!

படம்: சு.குமரேசன்

கழுகார் பதில்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு