Published:Updated:

``தி.மு.க எம்.பி-களே... அலர்ட்!" - மோடி வியூகம் சொல்லும் வானதி சீனிவாசன்

``தி.மு.க எம்.பி-களே... அலர்ட்!" - மோடி வியூகம் சொல்லும் வானதி சீனிவாசன்
News
``தி.மு.க எம்.பி-களே... அலர்ட்!" - மோடி வியூகம் சொல்லும் வானதி சீனிவாசன்

``தேர்தல் நேரத்தில் வெளியிட்ட அறிவிப்புகளை எல்லாம் எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை மக்களுக்கு ஸ்டாலின் விளக்க வேண்டும்" எனத் தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பி.ஜே.பி., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றாலும், தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட  வெற்றிபெற முடியவில்லை. தமிழகத்தில் தி.மு.க கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து, ``தமிழக மக்கள் தவறுசெய்துவிட்டனர். தி.மு.க வெற்றிபெற்றுள்ளதால் எந்த நன்மையும் நடக்கப்போவதில்லை" என்று பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ``தேர்தல் நேரத்தில் வெளியிட்ட அறிவிப்புகளை எல்லாம் எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை மக்களுக்கு ஸ்டாலின் விளக்க வேண்டும்" எனத் தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

``தி.மு.க எம்.பி-களே... அலர்ட்!" - மோடி வியூகம் சொல்லும் வானதி சீனிவாசன்

``காவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க சட்டம் இயற்றக் கோரி வலியுறுத்தப்படும்; நீட் தேர்வை உடனடியாக ரத்துசெய்ய வலியுறுத்தப்படும்; விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து செய்யப்படும்; கல்விக்கடன் முழுவதும் தள்ளுபடி செய்திட வலியுறுத்தப்படும்; மீத்தேன் திட்டத்தை உடனடியாகக் கைவிடக்கோரி வலியுறுத்தப்படும்" என்பன உட்பட பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தது. ம.தி.மு.க. பொருளாளர் கணேசமூர்த்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தி.மு.க. மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எழுத்தாளர்கள்  சு.வெங்கடேசன், ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் என நாடாளுமன்றத்துக்குச் செல்லும் தி.மு.க கூட்டணி எம்.பி-க்கள் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகளின் கருத்து விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதுகுறித்து தமிழக பி.ஜே.பி பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், ``தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால்தான் அவர் சொல்வதைச் செய்ய முடியும். இருந்தாலும் மக்கள், தி.மு.க-வுக்கு அதிகளவு வாக்களித்துள்ளனர். எனவே, தேர்தல் நேரத்தில் வெளியிட்ட அறிவிப்புகளை எல்லாம் எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்பதை மக்களுக்கு ஸ்டாலின் விளக்க வேண்டும். மத்திய அரசால், தமிழகத்தின் நலன் ஒருபோதும் பாதிக்காது. பி.ஜே.பி ஆளும் மாநிலம், பி.ஜே.பி ஆட்சியில் இல்லாத மாநிலம் என்ற பாரபட்சம் பார்க்காமல்தான் கடந்த ஐந்தாண்டுகள் பிரதமர் மோடி ஆட்சி செய்தார். தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் எங்கள்மீது தரக்குறைவான விமர்சனங்களை வைத்துள்ளார். ஆனால், முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாதபோது அவரது இல்லத்துக்கு வந்து நலம் விசாரித்தது, கருணாநிதி உயிரிழந்தபோது நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியது என்று மரியாதையான அரசியலைத்தான் மோடி செய்து வருகிறார்.

``தி.மு.க எம்.பி-களே... அலர்ட்!" - மோடி வியூகம் சொல்லும் வானதி சீனிவாசன்

இவ்வளவு பெரிய மாநிலத்தைத் தகுந்த வழிக்கு எடுத்துச் செல்ல மோடி உதவுவார். யாருக்கு வாக்களித்தவராக இருந்தாலும், தமிழகத்தின் நலனைப் பூரணமாக முன்னிறுத்தி மோடி செயல்படுவார். தி.மு.க கோரிக்கை கொடுத்துத்தான் தமிழகத்தின் நலன் நிறைவேற்றப்படும் என்ற நிலை இருக்காது. மோடி, தி.மு.க-வுக்கு வேலை இல்லாமல் செய்துவிடுவார். தி.மு.க-வின் அரசியல் நாடகத்தை அரங்கேற்ற விடமாட்டோம். தமிழகத்துக்கு எந்தத் திட்டம் அவசியமோ, எந்தத் திட்டத்தால் நாட்டுக்கு முன்னேற்றம் ஏற்படுமோ அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துச்சொல்லி, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நிறைவேற்றுவோம். தி.மு.க எம்.பி-க்கள் தங்களது சம்பளத்தை வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தால் போதும். வெற்று அரசியலுக்காகக் கோஷங்கள் எழுப்பாமல், மக்களைத் திசை திருப்பாமல் இருப்பதே, தி.மு.க எம்.பி-க்கள் மக்களுக்குச் செய்யும் உதவியாக இருக்கும்" என்று முடித்தார்.

``தி.மு.க எம்.பி-களே... அலர்ட்!" - மோடி வியூகம் சொல்லும் வானதி சீனிவாசன்
``தி.மு.க எம்.பி-களே... அலர்ட்!" - மோடி வியூகம் சொல்லும் வானதி சீனிவாசன்

தி.மு.க செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ``தமிழகத்தில் தற்போது இருப்பதைப்போல, வலுவான எதிர்க்கட்சி இதற்கு முன்பு இருந்ததில்லை. சுதந்திரம் பெற்று காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில், கம்னியூனிஸ்ட்கள் அதிக இடம்பெற்று எதிர்க்கட்சியாக இருந்தனர். அப்போது, காங்கிரஸ் அரசாங்கத்துக்கு கம்யூனிஸ்ட்கள் சிம்மசொப்பனமாக இருந்தனர். தற்போது அவர்களைவிட, அதிக இடங்களைப் பெற்று மேலும் வலுவான எதிர்க்கட்சியாக தி.மு.க இருக்கிறது. அ.தி.மு.க-வுக்கு அதிக பலம் இருந்தாலும், மானியம், பட்ஜெட் போன்றவற்றுக்கு எங்களின் ஆதரவைப் பெறுவதும் அவசியம். எங்களுடைய அதிர்வு, அவர்களைவிட அதிகமாக இருக்கும். நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதற்கு எதிராகச் செயல்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். அந்த அறிவிப்புகளை நிறைவேற்றக் கூடிய சூழ்நிலைக்கு அவர்களை நாங்கள் தள்ளுவோம். ஆட்சியாளர்களுக்கு அபாயக் குரலாக இருப்போம். நாங்கள் மக்கள் நல அரசியலை முன்னெடுத்துச் செல்கிறோம். நாங்கள் நினைத்திருந்தால், இந்த ஆட்சியைக் கலைத்திருக்க முடியும். ஆனால், ஜனநாயக வழியில் நேர்மையாக ஆட்சியமைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். மக்கள் எங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். மக்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை அரசாங்கத்தைவிட, எங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது" என்றார்.

பி.ஜே.பி. - தி.மு.க இரண்டு கட்சிகளுக்கும் மக்கள் நலன்காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.