Published:Updated:

பா.ஜ.க-வில் திரிணாமுல் எம்.எல்.ஏ-க்கள்; மோடி பதவியேற்பு விழாவில் மம்தா - என்ன நடக்கிறது மேற்கு வங்கத்தில்?

பிரேம் குமார் எஸ்.கே.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மோடிக்கும் ராகுலுக்கும் இருந்த மோதலைக் காட்டிலும் மோடிக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு நேரடி போட்டி இருந்தது. மம்தா பானர்ஜி இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வை கடுமையாகச் சாடினார். மோடி தலைமையிலான பா.ஜ.க அரசை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் மம்தாவுக்கு எதிராக அமைந்தது. மேற்கு வங்கத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றி இருந்தாலும் பா.ஜ.க-வும் சமமான சவால் அளித்து முன்னேறி வந்துள்ளது, மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 22 தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் 18 தொகுதியில் பா.ஜ.க-வும் வெற்றி பெற்றிருக்கிறது. 

பா.ஜ.க-வில் திரிணாமுல் எம்.எல்.ஏ-க்கள்; மோடி பதவியேற்பு விழாவில் மம்தா - என்ன நடக்கிறது மேற்கு வங்கத்தில்?

இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான ஐந்தே நாள்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து 2 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 56 கவுன்சிலர்கள் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். டெல்லியில் நடந்த விழாவில் இந்த இணைப்பு நடைபெற்றது. இவர்களுடன் இடதுசாரி எம்.எல்.ஏ ஒருவரும் பா.ஜ.க-வில் இணைந்துள்ளார். இது பா.ஜ.க- திரிணாமுல் காங்கிரஸ் இடையே நடக்கும் அரசியல் யுத்தத்தில் மம்தாவுக்கு மேலும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

பா.ஜ.க-வில் திரிணாமுல் எம்.எல்.ஏ-க்கள்; மோடி பதவியேற்பு விழாவில் மம்தா - என்ன நடக்கிறது மேற்கு வங்கத்தில்?

முன்னதாக மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மேற்கு வங்கத்தின் ஹூக்கிளியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இங்கு தாமரை மலரும். தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து 40 எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க வுக்கு வருவார்கள் எனத் தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலடியாக பேசிய மம்தா, அதில் ஒருவரைக் காட்டுங்கள் என்றார். 

இந்த நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் பேசிய பா.ஜ.க-வைச் சேர்ந்த முகுல் ராய், ``திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பலர் பா.ஜ.க பக்கம் வருகிறார்கள். வரும் வாரங்களில் இன்னும் சிலர் வரவிருக்கிறார்கள்” என்றார். 

பா.ஜ.க-வில் திரிணாமுல் எம்.எல்.ஏ-க்கள்; மோடி பதவியேற்பு விழாவில் மம்தா - என்ன நடக்கிறது மேற்கு வங்கத்தில்?

அதேபோன்று பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரும் மேற்கு வங்க தேர்தல் பொறுப்பாளராகவும் செயல்பட்ட கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், ``தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது போன்று மேற்கு வங்கத்திலிருந்து 7 கட்டங்களாக பலர் பா.ஜ.க பக்கம் வருவார்கள். இது முதல்கட்டம்தான். மம்தா 2021 வரை ஆள வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. ஆனால், அவரது செயல்பாட்டினால் அவரது கட்சியின் உறுப்பினர்கள் மாற்றுக் கட்சியினை நோக்கிச் சென்றால் முன்னதாகவே தேர்தல் வரலாம். ஆனால், அதற்கு எங்களைக் குற்றம் சொல்லக் கூடாது. அவரது செயல்பாடுதான் அதற்கு காரணமாக இருக்கும்” என்றார். மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வுக்கு பெரும் ஆதரவு மம்தாவை திணறச் செய்திருக்கிறது. 

முன்னதாக மம்தா பானர்ஜி, ``பா.ஜ.க-வின் மோடி மற்றும் அமித் ஷா எங்கள் அரசுக்கு கடும் நெருக்கடி அளித்துப் பணி செய்ய விடாமல் தடுத்தனர். மேலும், மேற்கு வங்கத்தில் அவசரக் கால நிலை இருப்பது போன்று மாயை உருவாக்கினார்கள். இவை அனைத்தையும் அவர்கள் இங்கு வெற்றி பெறுவதற்காக மட்டுமே செய்தார்கள்” என குற்றம்சாட்டி இருந்தார்.  

பா.ஜ.க-வில் திரிணாமுல் எம்.எல்.ஏ-க்கள்; மோடி பதவியேற்பு விழாவில் மம்தா - என்ன நடக்கிறது மேற்கு வங்கத்தில்?

இந்நிலையில் டெல்லியில் இரண்டாவது முறையாகப் பிரதமராக பதவியேற்க இருக்கும் மோடி உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த அழைப்பை உலக நாடுகளின் தலைவர்களும் கூட்டணிக் கட்சியின் தலைவர்களும் உடனடியாக ஏற்றுக்கொண்டனர். எதிர்க்கட்சியினரின் நிலை குறித்துதான் அனைவரது கவனமும் இருந்தது. 
இதற்கிடையே, பா.ஜ.க-வை அதிகம் விமர்சித்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டவர்கள் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பா.ஜ.க-வில் திரிணாமுல் எம்.எல்.ஏ-க்கள்; மோடி பதவியேற்பு விழாவில் மம்தா - என்ன நடக்கிறது மேற்கு வங்கத்தில்?

இதுதொடர்பாக பேசியுள்ள மம்தா, ``நான் மற்ற மாநில முதல்வர்களிடமும் பேசினேன். இது பதவியேற்பு விழாதான். அரசியலமைப்பு ரீதியான சில கடமைகள் இருக்கிறது. நாங்கள் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முயல்வோம்” என்றார். 
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் பா.ஜ.க-வில் இணைந்த அதே நாளில் மம்தாவும் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்திருக்கிறார். இந்த விவகாரங்கள் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பையும் புதிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திருக்கிறது. நாளை மாலை இந்தப் பதவியேற்பு நடைபெற இருக்கிறது.  

Vikatan