Published:Updated:

204 கிரிமினல் வழக்குகள் கொண்ட அந்த எம்.பி, பி.ஜே.பி-யா, காங்கிரஸா? #VikatanInfographics

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துவிட்டன. தேர்தல் முடிவுகளும் கடந்த வாரம் வெளியாகிவிட்டன. நம் தொகுதியின் எம்.பி யார் என்பது நமக்குத் தெரிந்துவிட்டது. ஆனால், நாம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தவர்களில் எத்தனை பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன, எத்தனை பேர் நன்கு படித்தவர்கள், கோடீஸ்வர எம்.பி-க்கள் யார், யார்? பதினேழாவது மக்களவையில் இடம்பெற்றுள்ள எம்.பி-க்களைப் பற்றிய இதுபோன்ற கேள்விகளுக்கான விடையை அலசுவதுதான் இந்தக் கட்டுரை.

204 கிரிமினல் வழக்குகள் கொண்ட அந்த எம்.பி, பி.ஜே.பி-யா, காங்கிரஸா? #VikatanInfographics

நாடாளுமன்றத்துக்கு நாம் அனுப்பி வைத்துள்ள உறுப்பினர்களில், கிட்டத்தட்ட பாதியளவு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது தன்னார்வ தொண்டு நிறுவனமான ADR (Association for Democratic Reforms). ஆம், நாம் தேர்தெடுத்தவர்களில், 43 சதவிகித எம்.பி-க்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களே. தேர்ந்தெடுக்கப்பட்ட 542 எம்.பி-க்களில், 539 எம்.பி-க்களின் வேட்புமனுக்களை மட்டுமே ஆராய்ந்து இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது ADR. ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 539 எம்.பி-க்களின் வேட்புமனுவில், 233 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 159 எம்.பி-க்கள் மீது தீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளன. கிரிமினல் வழக்குகள் கொண்ட 233 எம்.பி-க்களில், 116 பேர் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள். அடுத்ததாக இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. 29 காங்கிரஸ் எம்.பி-க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

204 கிரிமினல் வழக்குகள் கொண்ட அந்த எம்.பி, பி.ஜே.பி-யா, காங்கிரஸா? #VikatanInfographics

நாடாளுமன்ற உறுப்பினர்களின் மீதுள்ள வழக்குகளில், 29 சதவிகித வழக்குகள் கொலை, கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்களாகவே பதியப்பட்டுள்ளன. 11 எம்.பி-க்கள் மீது நேரடியான கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில் 5 வழக்குகள் பி.ஜே.பி எம்.பி-க்கள் மீதும், 2 வழக்குகள் பகுஜன் சமாஜ் எம்.பி-க்கள் மீதும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் மீது தலா ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது அந்த ரிப்போர்ட்.

போபால் தொகுதியில், பி.ஜே.பி சார்பில் போட்டியிட்ட பிரக்யா சிங் தாகூர் மீது பாயங்ரவாத குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்திலுள்ள மாலேகான் என்ற இடத்தில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதாக பிரக்யா சிங்குக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு இன்னமும் முழுமையாக முடியவில்லை.

204 கிரிமினல் வழக்குகள் கொண்ட அந்த எம்.பி, பி.ஜே.பி-யா, காங்கிரஸா? #VikatanInfographics

எம்.பி-க்களிலேயே அதிக கிரிமினல் வழக்குகள் கொண்டவர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டீன் குரியக்கோஸ். இவர் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் போட்டியிட்டு 1.71 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கொலை, கொள்ளை, அச்சுறுத்தல் என்று இவர் மீது மட்டும் 204 கிரிமினல் வழக்குகள் உள்ளன.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 539 எம்.பி-க்களில் 475 பேர் கோடீஸ்வரர்கள். மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் மகன் நகுல் நாத் 660 கோடி ரூபாய் சொத்துடன் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்கிறார். கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்தகுமார் 417 கோடியுடன் இரண்டாமிடம் பிடிக்கிறார்.

17-வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி-க்களில் 392 (73%) பேர் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். இதில் 24 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும், எம்.பி-க்களின் படிப்பு, சொத்து, வழக்குகள் பற்றிய விவரங்களைக் கீழே உள்ள இன்ஃபோகிராபிக்ஸில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

204 கிரிமினல் வழக்குகள் கொண்ட அந்த எம்.பி, பி.ஜே.பி-யா, காங்கிரஸா? #VikatanInfographics
Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு