Published:Updated:

எப்படி கைவிட்டுப்போனது சேலம்!- கூட்டணிக் கட்சிகள் மீது அதிருப்தியில் எடப்பாடி

எப்படி கைவிட்டுப்போனது சேலம்!- கூட்டணிக் கட்சிகள் மீது அதிருப்தியில் எடப்பாடி
எப்படி கைவிட்டுப்போனது சேலம்!- கூட்டணிக் கட்சிகள் மீது அதிருப்தியில் எடப்பாடி

`எப்படித் தோற்றோம்; யார் காரணம்; கூட்டணிக்கட்சியினர் வேலைபார்த்தார்களா.. என்று பல்வேறு கேள்விகளுடன் ரிப்போர்ட் ஒன்றை கேட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மேலும், கூட்டணிக்கட்சிகள் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்கிறார்கள்.

எப்படி கைவிட்டுப்போனது சேலம்!- கூட்டணிக் கட்சிகள் மீது அதிருப்தியில் எடப்பாடி

தமிழகத்தில் அ.தி.மு.க அரசின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியும். இருந்தாலும், `இரட்டை இலை’ சின்னத்தை முன்னிறுத்தி அவர் தேர்தலைச் சந்தித்தார். தன்னுடன் ஒத்துப்போகும் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலில் போட்டியிட்டார்.  குறைந்தபட்சம் 15 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றுவிடலாம் என்றும் அவர் கணித்திருந்தார். ஆனால், காலம் அவருக்கு வேறொரு பதிலைக் கொடுத்தது. அந்த 15-ல் அவர் அதிக கவனம் செலுத்தியது தன்னுடைய சொந்தத் தொகுதியான சேலம் தொகுதியைத்தான். 

எப்படி கைவிட்டுப்போனது சேலம்!- கூட்டணிக் கட்சிகள் மீது அதிருப்தியில் எடப்பாடி

அதை கௌரவப் பிரச்னையாகப் பார்த்தார். எப்படியாவது அதில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.  இதற்கு பா.ம.க-வின் வாக்குவங்கி பலமாக இருக்கும் என்று அவர் நம்பினார். தேர்தல் சமயத்தில் பேசிய பிரேமலதா, ``தி.மு.க-வில் சேலம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் எஸ்.ஆர்.பார்த்திபன் எங்கள் கட்சியிலிருந்து சென்றவர். அதனால் அவர் மீது கட்சியினருக்கு அதிருப்தி இருக்கிறது. இதை முன்வைத்து அவர்கள் தேர்தல் களத்தில் தி.மு.க-வுக்கு எதிராக நிச்சயம் வேலை செய்வார்கள். சேலம் தொகுதி நமக்குத்தான்” என்று உறுதியாக கூறியிருந்தார்.  அதேபோல பா.ம.க-வைச் சேர்ந்தவர்களிடமும் எடப்பாடி பழனிசாமி, ``சேலத்தில் அ.தி.மு.க வெற்றிபெற வேண்டும். இதற்காக உங்க ஆள்களை முழுமூச்சுடன் வேலை செய்ய சொல்லுங்க’ என்று கூற அவர்களும், `சேலத்தைப் பற்றி கவலைப்படவேண்டாம்’ என்று கூறியிருந்தனர்.

எப்படி கைவிட்டுப்போனது சேலம்!- கூட்டணிக் கட்சிகள் மீது அதிருப்தியில் எடப்பாடி

ஆனால், அவர்களின் வாக்குறுதிகளையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டது இந்தத் தேர்தல். குறிப்பாக முதல்வரின் சமுதாய வாக்குகள்கூட அவர் தொகுதியில் அவருக்குக் கிடைக்கவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் பாலங்கள் போட்டும்  நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சிலுவம்பாளையம் பஞ்சாயத்திலேயே அதிமுக  தோற்றுள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தியில் இருக்கிறார் என்கிறார்கள். இது தொடர்பாக அ,தி.மு.க வட்டாரத்தில், ``இடைத்தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்கு முக்கியத்துவம்  கொடுத்தாரோ, அந்த அளவுக்கு சேலம் மக்களவைத் தொகுதிக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். இந்தத் தோல்வி அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ம.க-வின் வாக்குகளும், தே.மு.தி.க-வின் செயல்பாடுகளும் பயனற்றுப்போக என்ன காரணம் என ஆராயச் சொல்லியிருக்கிறார். பணம் சரியாகச் சென்று சேர்ந்ததா அல்லது இல்லையா என்பது குறித்தும். தோல்வி குறித்தும் ரிப்போர்ட் ஒன்றையும் கேட்டுள்ளார்” என்கிறார்கள்.