Published:Updated:

``அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு!” - மோடிக்கு அருண் ஜெட்லி எழுதிய கடிதம்

``அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு!” - மோடிக்கு அருண் ஜெட்லி எழுதிய கடிதம்
``அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு!” - மோடிக்கு அருண் ஜெட்லி எழுதிய கடிதம்

உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு எடுத்துக்கொள்ளப்போவதாக அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இதை, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

``அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு!” - மோடிக்கு அருண் ஜெட்லி எழுதிய கடிதம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நாளை மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கிறது. இந்த நிலையில் மோடி அரசின் சென்ற ஆட்சியில்  நிதித்துறை அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு கோரி மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், “இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபாரமாக வெற்றி பெற்று மீண்டும் பொறுப்பேற்றிருக்கிறது. வாழ்த்துகள். நீங்கள் கேதார்நாத் புறப்பட்ட சமயம் உங்களிடம் சொன்னதுபோல நான் அரசியலிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுத்துக்கொள்கிறேன். இந்த ஓய்வுக்காலத்தை என் உடல்நலனில் செலவிடப்போகிறேன். கடந்த முறை ஆட்சியில் எனது உடல்நிலை கவலைக்கிடமாக ஆனபோது என் மருத்துவர்கள்தான் என்னை மீட்டுக் கொண்டு வந்தார்கள். இந்த ஓய்வுக்காலத்தில் அவர்கள் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள். அதனால் அமையவிருக்கும் அரசின் எந்த வேலைகளிலும் என்னை ஈடுபடுத்த வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார். 

சென்ற அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி அமலாக்கம் என முக்கியப் பொருளாதார முடிவுகளில் அருண் ஜெட்லியின் பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு