Published:Updated:

`நீங்கள் பல சாதனைகள் புரிய வேண்டும்!' - மாநில முதல்வரை வாழ்த்திய ஸ்டெர்லைட் ஓனர்

`நீங்கள் பல சாதனைகள் புரிய வேண்டும்!' - மாநில முதல்வரை வாழ்த்திய ஸ்டெர்லைட் ஓனர்
`நீங்கள் பல சாதனைகள் புரிய வேண்டும்!' - மாநில முதல்வரை வாழ்த்திய ஸ்டெர்லைட் ஓனர்

நாடாளுமன்றத் தேர்தல் சூடு அடங்குவதற்குள் பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அப்படி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் வெற்றி பெற்று நவீன் படநாயக் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

`நீங்கள் பல சாதனைகள் புரிய வேண்டும்!' - மாநில முதல்வரை வாழ்த்திய ஸ்டெர்லைட் ஓனர்

ஒடிஷாவில் 5வது முறையாக முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் தூத்துக்குடியிலுள்ள வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் நிறுவன சேர்மன் அனில் அகர்வால் நவீன் பட்நாயக்கிற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ``5 வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ள நவீன் பட்நாயக்கிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் புதிய தொடக்கத்தில் நீங்கள் பல மகத்தான சாதனைகள் புரிய, புதிய உயரத்தை, இலக்குகளை அடைய வாழத்துகள்'' எனப் பதிவிட்டுள்ளார். 

`நீங்கள் பல சாதனைகள் புரிய வேண்டும்!' - மாநில முதல்வரை வாழ்த்திய ஸ்டெர்லைட் ஓனர்

வேதாந்தா குழுமத்திலிருந்து நவீன் பட்நாயக்கிற்கு வாழ்த்து வந்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள மோடி அரசுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Vikatan