Published:Updated:

சீனியர் அமைச்சர்களுக்கு கல்தா... `அ.தி.மு.க முதல் அமித் ஷா வரை' மோடி கையில் பட்டியல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சீனியர் அமைச்சர்களுக்கு கல்தா... `அ.தி.மு.க முதல் அமித் ஷா வரை' மோடி கையில் பட்டியல்!
சீனியர் அமைச்சர்களுக்கு கல்தா... `அ.தி.மு.க முதல் அமித் ஷா வரை' மோடி கையில் பட்டியல்!

சீனியர் அமைச்சர்களுக்கு கல்தா... `அ.தி.மு.க முதல் அமித் ஷா வரை' மோடி கையில் பட்டியல்!

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானபோதே, மோடியின் அமைச்சரவையை அலங்கரிக்கப்போகும் அமைச்சர்கள் யார் யார் என்ற கேள்வியும் எழத் தொடங்கிவிட்டது. முன்னாள் அமைச்சர்கள் சிலரின் மேல்,  மோடியும் அமித்ஷாவும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது குதிரைக்கொம்புதான் என்கிறார்கள், பி.ஜே.பியினர். புதிய அமைச்சரவையில் இடம்பெற உள்ளவர்களின் உத்தேசப் பட்டியல் இதுதான். 

சீனியர் அமைச்சர்களுக்கு கல்தா... `அ.தி.மு.க முதல் அமித் ஷா வரை' மோடி கையில் பட்டியல்!

கிரிகெட்டிலிருந்து ஓய்வுபெற்ற கவுதம் கம்பீர், முதல்முறையாகத் தேர்தலில் நின்று வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு விளையாட்டுத் துறை கிடைக்க வாய்ப்புள்ளது. அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை வீழ்த்திய ஸ்மிருதி இரானி, நாடு முழுக்க பரபரப்பைக் கிளப்பினார். அவருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது. அ.தி.மு.க, சிவசேனா உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருக்கு எத்தனை அமைச்சர் பதவிகள், யார் யாருக்கு என்னென்ன துறைகள் என்பதுவரை மோடி  மற்றும் அமித்ஷா இருவர் மட்டுமே தேர்வுசெய்ய உள்ளனர். வேறு யாருடைய தலையீடும் பெரிதாக இருக்காது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளதால், கூட்டணியைச் சேர்ந்தவர்களும் சற்று பரபரப்பாகவே உள்ளனர். 

சீனியர் அமைச்சர்களுக்கு கல்தா... `அ.தி.மு.க முதல் அமித் ஷா வரை' மோடி கையில் பட்டியல்!

இதுதவிர, கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள், புதிதாக வென்றவர்கள் என மோடி மற்றும் அமித்ஷாவின் குட் புக்கில் இருப்பவர்கள் பலருக்கும் இந்த அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் நிறை குறைகளை மோடி மற்றும் அமித்ஷா  இருவர் மட்டுமே சேர்ந்து அலசி, புதியவர்களைத் தேர்வுசெய்துள்ளதால், பலரும் கலக்கத்தில் உள்ளனர். அமைச்சர் பதவிக்கு வாய்ப்புள்ள புதிய படையின் உத்தேச லிஸ்ட் இதுதான். 


இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை   - கௌதம் கம்பீர்

வெளியுறவுத் துறை  - ஸ்மிருதி இரானி

நிதித் துறை - ஜெயந்த் சின்ஹா

பாதுகாப்புத் துறை - ராஜீவ் பிரதாப் ரூடி

உள்துறை  - அமித் ஷா

தொழில் மற்றும் வர்த்தகத் துறை - வருண் காந்தி

ரயில்வே துறை  - பியூஷ் கோயல்

விவசாயத் துறை - ராஜ்நாத் சிங்

மனிதவள மேம்பாட்டுத் துறை  - நிர்மலா சீதாராமன்

சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை - நிதின் கட்கரி

தொழில் துறை  - அரவிந்த் சவாந்த் (சிவசேனா)

நாடாளுமன்ற விவகாரத் துறை  - ஷாநவாஸ் ஹுசைன்

சிறுபான்மையினர் நலத்துறை - முக்தர் அப்பாஸ் நக்வி

விமான போக்குவரத்துத் துறை  - பவன் வர்மா

தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை - பாபுல் சுப்ரியோ

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை - கிரண் ரிஜிஜு

குடும்ப நலத்துறை  - ஆனந்த்குமார் ஹெக்டே

கிராமப்புற மேம்பாட்டுத் துறை - சிவராஜ் சிங் சவுகான்

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை - மீனாட்சி லேகி

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்  - கோபால் ஷெட்டி

சட்டம் மற்றும் நீதித்துறை - ரவிசங்கர் பிரசாத்

நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை - சிராக் பாஸ்வான்

சுற்றுலாத் துறை - அனுராக் தாகுர்

மேக் இன் இந்தியா  - தர்மேந்திர பிரதான்

சுகாதாரத்துறை - ஜே.பி. நட்டா

நிலக்கரி மற்றும் கனிம வளத்துறை - கிரிராஜ் சிங்

ஸ்கில் இந்தியா -  ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்

சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் பருவ நிலை மாற்றம் துறை - சதானந்த கவுடா

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை - ஹரிப்ரியா சுரேஷ்

தொழிலாளர் நலத்துறை - அனுப்ரியா பட்டேல்

பஞ்சாயத்து ராஜ் - துஷ்யந்த் சிங்.

ஜவுளித் துறை  - சரோஜ் பாண்டே

நுகர்வோர் நலத்துறை - ஹர்கிரத் கௌர் பாதல்

தூய்மை கங்கை - ரிதா பகுஜானா ஜோஷி

ரசாயனத் துறை - ஹர்ஷ்வர்தன்

வேலைவாய்ப்பு உருவாக்கத் துறை - ராம் மாதவ்

பா.ஜ.க-வின் புதிய தலைவர் - புபேந்திர யாதவ்/ ஜே.பி.நட்டா

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு