Published:Updated:

ரவீந்திரநாத்துக்கு வொர்க் அவுட் ஆனது மே-30 சென்டிமென்ட்! #VikatanExclusive

ரவீந்திரநாத்துக்கு வொர்க் அவுட் ஆனது மே-30 சென்டிமென்ட்! #VikatanExclusive
ரவீந்திரநாத்துக்கு வொர்க் அவுட் ஆனது மே-30 சென்டிமென்ட்! #VikatanExclusive

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானபோதே, மோடியின் அமைச்சரவையை அலங்கரிக்கப்போகும் அமைச்சர்கள் யார் யார் என்ற கேள்வியும் எழத் தொடங்கிவிட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே.

ரவீந்திரநாத்துக்கு வொர்க் அவுட் ஆனது மே-30 சென்டிமென்ட்! #VikatanExclusive

இந்நிலையில் அவருக்கு நிதித்துறை இணை அமைச்சர் அல்லது பியுஷ் கோயலுக்குக் கிடைக்கும் துறையின் இணை அமைச்சராகப் பதவி கிடைப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. அவருக்கு இன்றைய தினம் அமைச்சர் பதவி கிடைக்கும்பட்சத்தில், அது ரவீந்திரநாத் குமாருக்கு முக்கியமானதொரு நாளாக இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர் அவரது நெருங்கிய வட்டாரங்கள். சென்டிமென்டாகவே ரவீந்திரநாத்துக்கு இன்றைய தினம் (மே - 30). ராசியானது. ஏனென்றால் அவர் 2018-ல் தேனி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளராகப் பொறுப்பேற்ற நாளும் இதே நாள்தான் (மே -30). எனவே, இன்றைய தினம் அவருக்கு மிக முக்கியமானதொரு நாளாக அமையும் எனச் சிலிர்க்கிறார்கள் ரவீந்திரநாத் குமாரின் நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

Vikatan