Published:Updated:

சிவகங்கை எம்.பி-யின் முதல் சாதனை - ட்விட்டரில் கார்த்தி சிதம்பரத்தை வம்பிழுத்த தமிழிசை!

கார்த்தி சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன்  ட்வீட் செய்துள்ளார்.

சிவகங்கை எம்.பி-யின் முதல் சாதனை - ட்விட்டரில் கார்த்தி சிதம்பரத்தை வம்பிழுத்த தமிழிசை!

கடந்த 2006-ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடுசெய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவரது நிறுவனங்களுக்கு லஞ்சப் பணம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

சிவகங்கை எம்.பி-யின் முதல் சாதனை - ட்விட்டரில் கார்த்தி சிதம்பரத்தை வம்பிழுத்த தமிழிசை!

இதுதொடர்பாக ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர்மீது சி.பி.ஐ-யும், அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றன. இந்த நிலையில், சிவகங்கை பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி-யாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். அதன் காரணமாக, அவர் மீதான  வழக்கு டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் இருந்து எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை '' சிவகங்கை எம்.பி முதல் சாதனை? உங்கள் சாதனைகள் தொடரட்டும்... திகாரில் முடியட்டும் என வாழ்த்துவோமாக '' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு