Published:Updated:

மோடி பதவியேற்புக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் - மதுரை நந்தினி கைது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மோடி பதவியேற்புக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் - மதுரை நந்தினி கைது!
மோடி பதவியேற்புக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் - மதுரை நந்தினி கைது!

மோடி பதவியேற்புக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் - மதுரை நந்தினி கைது!

பிரதமர் பதவி ஏற்கும் நிகழ்ச்சியை எதிர்த்து நேற்று மாலை மதுரை காந்தி மியூசியம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த சமூக ஆர்வலர்  மதுரை நந்தினியும் அவர் தந்தையும் கைது செய்யப்பட்டனர்.

மோடி பதவியேற்புக்கு எதிராக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் - மதுரை நந்தினி கைது!

அரசின் மது விற்பனை மற்றும் பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காக தனியாக போராட்டம் நடத்தி வரும் மதுரை நந்தினி, வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று சமீபகாலமாக போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தேர்தல் முடிவு வந்த பின்பு, இ.வி.எம் மூலம் வெற்றி பெற்றுள்ள மோடி பிரதமர் பதவி ஏற்கக் கூடாது. அத்தேர்தலை ரத்து செய்துவிட்டு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தி மியூசியம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார். நாடு முழுவதும் தேர்தலில் பல முறைகேடுகள் வெளிப்படையாக நடைபெற்றுள்ளதால் ஒப்புகைச் சீட்டுகளை இ.வி.எம் வாக்குகளோடு ஒப்பிட்டு சரிபார்த்து நிரூபித்துவிட்டு மோடி பிரதமராக பதவியேற்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருந்தார்.

 
பிரதமர் பதவியேற்கும் நாளில் உண்ணாவிரதம் என்று அறிவித்த நிலையில், அதற்கு காவல்துறை அனுமதிக்காததால், நேற்று மாலை காந்தி மியூசியம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தபோது தல்லாகுளம் காவல்துறையினர் நந்தினியையும், அவர் தந்தை ஆனந்தனையும் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு