Published:Updated:

கான்ட்ராக்டர் நேசமணி முதல் கார்ல் மார்க்ஸ்வரை - தட்டித் தூக்கும் தமிழ் ட்விப்ஸ்

கான்ட்ராக்டர் நேசமணி முதல் கார்ல் மார்க்ஸ்வரை - தட்டித் தூக்கும் தமிழ் ட்விப்ஸ்
News
கான்ட்ராக்டர் நேசமணி முதல் கார்ல் மார்க்ஸ்வரை - தட்டித் தூக்கும் தமிழ் ட்விப்ஸ்

கான்ட்ராக்டர் நேசமணி முதல் கார்ல் மார்க்ஸ்வரை - தட்டித் தூக்கும் தமிழ் ட்விப்ஸ்

'#Pray_for_Neasamani' அகில இந்திய அளவில் டிரெண்ட் அடித்துக்கொண்டிருக்கிறது. `சுத்தியலால் தாக்கப்பட்ட நேசமணி, அப்போலோவில் அட்மிட் ஆகியிருக்கிறார். அவர் 'காலையில் இட்லி சாப்பிட்டார், சட்னி தொட்டுக்கொண்டார்’ எனத் தமிழ் ட்வீப்ஸ் தட்டித் தூக்கிக்கொண்டிருக்கிறார்கள். நடக்கும் களேபரங்கள் நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்கும் விழாவையே பின்னுக்குத் தள்ளியது. ஆனா பாருங்க... இதெல்லாம் பெரிய ஆச்சர்யமே இல்ல. ஏன்னா, தமிழ் ட்வீப்ஸ் அன்றாடம் செய்யும் அலப்பறைகள் அப்படிப்பட்டது!

நீங்க ட்விட்டரில் இருந்தாலும் சரி, இல்லன்னாலும் சரி, அங்கே கொஞ்ச நேரம் உலவிப் பார்க்கணும். ஜாலி - கேலி, வம்பு - வழக்கு, சண்டை - சமாதானம், ரசனை - ரகளை, கலாய்க்கிறது - கழுவி ஊத்துறதுன்னு செமயா பொழுதுபோகும். அதிலும் ஒருசில பேர் இருக்காங்க பாஸ். காலைல போற கடனுல ஆரம்பிச்சு, ராத்திரி காணுற கனவு வரைக்கும் அப்டேட்ஸ் போடுவானுங்க. இவனுங்க பொழப்புக்கு நடுவுல ட்விட்டர யூஸ் பண்றானுங்களா, இல்ல ட்விட்டர் யூஸ் பண்றதையே பொழப்பா வச்சுருக்கிறானுங்களான்னு மெரண்டு போவீங்க.

கான்ட்ராக்டர் நேசமணி முதல் கார்ல் மார்க்ஸ்வரை - தட்டித் தூக்கும் தமிழ் ட்விப்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஊருக்குள்ளே வெட்டுக்குத்து, கலவரம், கடையடைப்புன்னு, எது நடந்தாலும் இவிங்க மட்டும் ஜாலியாவே இருப்பாய்ங்க. ஊரே தீப்புடிச்சு எரிஞ்சாலும் 'டீ சூடா இருக்குல்ல, கோயிந்தா'னு கூலா இருப்பாய்ங்க. எப்படித்தான் முடியுதோ?

ஊருலகத்துல இருக்கிற அத்தனை ஹோட்டலும் இவனுங்களுக்கு அத்துப்படி. செஃப் தாமுவுக்கே எப்படி வெங்காயம் வெட்டணும்னு லெசன் எடுப்பானுங்க. நளபாகம் பீமபாகம் தாண்டி, அத்தனை பாகமும் இவிங்களுக்குத் தண்ணிபட்ட பாடு. 

பாப்பம்மா இட்லிக்கடைல ஆரம்பிச்சு, பார்க் ஷெரட்டன் வரைக்கும் மோப்பம் பிடிச்சு வச்சிருப்பானுங்க. அவனவன் கொலைப்பசில உட்கார்ந்துட்டு இருக்கும்போது, 'சிக்கன் பிரியாணி ஃபார் லஞ்ச், குடல்குழம்பு ஃபார் டின்னர்'னு போட்டோ போட்டு வெறுப்பேத்துவானுங்க. அதிலும் சில பில்லியனர்கள், ஹோட்டல் பில்லையும் சாப்பிட்ட தட்டையும் போட்டோ பிடிச்சு போட்டு, கடுப்பேத்துவானுங்க. இவனுங்க பசிக்கு சாப்பிடறதுக்காக ஹோட்டலுக்கு போறானுங்களா, இல்ல போட்டோவுக்கு பல்லைக்காட்ட ஹோட்டலுக்குப் போறானுங்களான்னு இஸ்ரோகிட்டே சொல்லி இன்னிக்கே கண்டுபிடிக்கணும். இல்லன்னா, நாசாகிட்டே சொல்லி நாளைக்காவது கண்டுபிடிச்சே ஆகணும். 

கான்ட்ராக்டர் நேசமணி முதல் கார்ல் மார்க்ஸ்வரை - தட்டித் தூக்கும் தமிழ் ட்விப்ஸ்

நீங்க எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊருல எந்த ஹோட்டல் ஃபேமஸ், அங்கே எந்த டிஷ் சூப்பர்னு, இவிங்ககிட்டேயே கேட்டுக்கலாம். 'பாய்ஸ்' பட செந்தில் மாதிரி, பக்காவா பர்ஃபெக்டா லிஸ்ட் போட்டு வச்சிருப்பானுங்க. 'அந்த கார்டு வேணாம்ணே, இந்த கார்ட போடு'னு வடிவேலு சொல்லுற மாதிரி, 'அந்தக் கடை வேணாம்ணே, இந்தக் கடைக்கு போ'னு வழிகாட்டுவானுங்க. கடையோட சொந்தக்காரனுக்கே அவன் ஹோட்டல்ல அத்தனை டிஷ் இருக்குதுனு, இவனுங்க சொல்லித்தான் தெரியும். 'என்னத்த கடை நடத்துறியோ'னு போறபோக்குல பொடனியில அடிச்சுட்டு போவானுங்க. அப்படியே, #அறிவோம்கடை ஹேஷ்டேக் போட்டு, இலவச விளம்பரமும் கொடுப்பானுங்க. நல்ல மனசுக்காரங்க!

ஹோட்டல் சாப்பாட்டை மட்டுமல்ல, வீட்டுச் சாப்பாட்டையும் விட்டுவைக்க மாட்டானுங்க. ஒருத்தன் கேசரிக்கு தேங்காய் சட்னி தொட்டுக்கிட்டேன்னு, ட்வீட் போட்டா, அடுத்தவன் முட்டை போண்டாவுக்கு முந்திரிக்கடலை கடிச்சிக்கிட்டேன்னு ட்வீட்டி, வாமிட் வரவப்பான் டேமிட்!

இவிங்களையெல்லாம் பார்க்கும்போதுதான் 'கலாய் என்பது ஒரு கலை'னு உங்களுக்குப் புரியும். அதுவும், சிலரைக் கலாய்க்கிறது, கதறவிடுறதுன்னா, மிகப்பெரிய சந்தோசமாக்கும்.

சபரிமலை கோயிலுக்குள்ளே நம்ம மாதரசிகள், மங்கையர்க்கரசிகளை உள்ளே விடமாட்டேங்குறாங்கனு உங்களுக்குத் தெரியும். அதையும் மீறி சில புரட்சிப்பூக்கள் உள்ளேபோய் கெத்து காட்டுனதும் உங்களுக்குத் தெரியும். அப்போ ஒரு சார் சார் (ஆமா ரொம்ப மரியாதையானவர், அதுக்குத்தான் இன்னொரு சார்)   'இதுக்கெல்லாம் ஆண்டவன் பழிவாங்குவான்'னு சாபம்விட, உடனே இந்தோனேசியாவிலே சுனாமி சுழட்டியடிக்க , 'பாத்தீங்களா பவர'ன்னு ஆஜரானாரு அவரு. அதுக்கு நம்மாளு ஒருவன், மேட்டுக்குடி படத்துல நக்மாவுக்குப் பதிலா கவுண்டருக்கு சூடுபோடுற சீன் போட்டோவை போட்டு 'அங்க காட்டுறதுக்குப் பதிலா இங்க காட்டிட்டாம்பா'னு கமெண்ட் போட்டு அலறவிட்டான். இப்படி, இவிங்க உடைச்ச ஃபர்னிச்சரை வைச்சு ஒரு ஃபாரஸ்டே உருவாக்கலாம்.

கான்ட்ராக்டர் நேசமணி முதல் கார்ல் மார்க்ஸ்வரை - தட்டித் தூக்கும் தமிழ் ட்விப்ஸ்

பாரதியார் வாரிசுகளும் ஷேக்ஸ்பியர் வகையறாக்களும் இங்கே அதிகம் இருப்பாங்க. அவிங்க எழுதுற பல கவிதைங்க ஆசமா இருந்தாலும், சில கவிதைங்க நாசமா இருக்கும். 'தூறலே... தூரிகையே... நிலவே... நிழலே...'னு, கவிதைய கசக்கிப் பிழிவானுங்க. அவனவனுக்கு மழை வந்தா பொழப்பு போகும். ஆனா, இவிங்களுக்கு மட்டும்தான் போயம் வரும். கவுதம் மேனன், செல்வராகவன், யுவன், ரஹ்மான் எல்லாம் இவிங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரங்க. கேட்டா , 'வாழ்க்கை ஒரு வாழைப்பழ காமெடி பாஸ்'னு தத்துவமா பொழிவானுங்க.

80'ஸ் கிட்ஸ், 90'ஸ் கிட்ஸ் அட்ராசிட்டிஸ் தனி ரகம். இவிங்க அவிங்களை 'தடியன்ஸ்'னு சொல்லி கலாய்க்க, அவிங்க இவிங்களை 'பொடியன்ஸ்'னு சொல்லி கழுவி ஊத்த, நடுவாலே 20'ஸ் கிட்ஸ் லவ்வரோட 'டிக் டாக்'கிட்டு இருப்பானுங்க. அப்புறம் என்ன? ரெண்டு குரூப்பும் புகைவிடும். (எட்டுப்பட்டி ராசா மணிவண்ணன் இமேஜ்.jpg)

வெறியான மதுரையன்ஸ், திமிரான தேனியன்ஸ், ராவான ராம்நாட்டான்ஸ்னு இவிங்க ஊர்ப்பாசமும் புல்லரிக்க வைக்கும். புரட்சிப்புயல் 'கிரேக்கத்திலே... ஏதென்ஸிலே...'னு கதிகலங்க வைக்கிற மாதிரி, இவிங்க 'மதுரை மேலூரிலே... தேனி கம்பத்திலே...'னு தெறிக்க விடுவானுங்க. அந்தச் சமயத்திலே, ரொம்ப உக்கிரமா வேற இருப்பானுங்க. ஊர்ப்பாசத்தோட, சாதிப்பாசத்தையும் கலந்தடிக்கும் சமூக விரோதிகளும் இருக்கத்தான் செய்றாங்க. நம்மதான் அன்னப்பறவை மாதிரி கெட்டதை விட்டுட்டு, நல்லதை மட்டும் எடுத்துக்கணும்.

இன்னும் சிலபேரு ’கலகலப்பு’ இளவரசு மாதிரி விதவிதமான வேஷத்துல சுத்துவானுங்க. அதாவது, அப்பப்போ ஹேண்டில் நேமை மாத்திப்போட்டு குழப்பி அடிப்பானுங்க. இவங்க யூஸர் நேமும் விஜய் ஆண்டனி பட டைட்டில் மாதிரி டெரரா இருக்கும். மண்ட கசாயம், தேல்பத்திரிக்சிங், திமிருக்கே புடிச்சவன், திருப்பி அடிப்பவன்... இப்படி பேருலயே டெரர் காட்டுவானுங்க. இதெல்லாம் எதுக்குக்னுதானே யோசிக்கிறீங்க? அரசியல் கருத்துகளைத் தெறிக்கவிடும்போது, ஆபத்து வந்துரக்கூடாது இல்லையா, பாதுகாப்பு முக்கியம் பாஸ்!

கான்ட்ராக்டர் நேசமணி முதல் கார்ல் மார்க்ஸ்வரை - தட்டித் தூக்கும் தமிழ் ட்விப்ஸ்

இவிங்க கிளப்பிவிடுற வதந்தி எல்லாம் ஸ்பெஷல் அயிட்டம். 'திருமுருகன் காந்தியை கொன்னுட்டாங்க'னு ஒருத்தன் கிளப்பிவிட, பரபரனு பத்திக்கிச்சு. ஆனா அவரு அடுத்த நாளு ரிலீஸாகி பெரியார் சிலைக்கு மாலைபோட போயிட்டாரு. கிளப்பிவிட்டவன்கிட்ட 'ஏன்டா இப்படி'னு கேட்டா, 'கொல்லுற மாதிரி கனவு கண்டேன்'னுட்டு கிளம்பிக்கிட்டே இருந்தான். 

இங்க எந்த டாபிக் வேணாலும் ஓயும். ஆனா, தல, தளபதி டாபிக் மட்டும் எப்பவும் ஓயாது. ’அமெரிக்கா - ரஷ்யா’ பஞ்சாயத்தைவிட, `தல - தளபதி’ பஞ்சாயத்து பயங்கரமா இருக்கும். 'இதெல்லாம் வேணாமே'னு தல-தளபதியே சொன்னாலும், 'ஓனர்னா ஓரமா போடா'னுதான் டீல் பண்ணுவானுங்க. அதெல்லாம் வாயிலேயே வயலின் வாசிக்கும் வகையறா என்பதால், அப்டிக்கா போவோம்  

ஒரு பக்கம் 'வடையில் சிறந்தது எது? மசால்வடையா... மெதுவடையா... கீரைவடையா...'னு போல்ஸ் போட்டு சாவடிப்பானுங்க. இன்னொரு பக்கம் 'ஃபுட் கோல்ஸ், லவ் கோல்ஸ், மேரேஜ் கோல்ஸ்'னு, கோல்ஸ் போட்டு வெறுப்பேத்துவானுங்க. 'இதென்ன பிரமாதம்?' ரேஞ்சுக்கு இருக்கும் அவையெல்லாம்.

எவ்ளோவுக்கு எவ்ளோ சிரிக்க வெக்கிறாங்களோ, அவ்ளோவுக்கு அவ்ளோ சிந்திக்கவும் வைப்பாங்க. கலாயோடு சேர்த்து கருத்தையும் தெறிக்க விடுவாங்க.

எவரோ ஆரம்பிச்சு வச்ச 'அட ஆமால்ல' வகை ட்வீட், வாவ் ரகம். சினிமாக்காரங்களுக்கே தெரியாத சிலீர் சீக்ரெட்ஸை அள்ளிப்போட்டு கொண்டுவந்து கொட்டுவாங்க. 'தில்லுமுல்லு' படத்துல பாலசந்தர் தெரியும் சீனில் இருந்து, டைட்டானிக் படத்தின் ரீ ரிலீஸில் நட்சத்திரம் மறையும் சீக்ரெட்ஸ் வரைக்கும் கொண்டுவந்து கொட்டி மெரட்டுவாங்க.  

கான்ட்ராக்டர் நேசமணி முதல் கார்ல் மார்க்ஸ்வரை - தட்டித் தூக்கும் தமிழ் ட்விப்ஸ்

தயாரிப்பாளர்கள் தலையில் துண்டுபோட, இவிங்க எழுதுற விமர்சனமும் ஒரு காரணம்னு, ஆய்வறிக்கை சொல்லுது. கிரவுண்ட்ல இருந்து ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்கிற மாதிரி, இவனுங்க தியேட்டர்ல இருந்தே ரன்னிங் ரிவியூ பண்ணுவானுக. படம் முடியுறதுக்குள்ளே மொத்தமா படத்தோட ரிசல்ட்டையே .. `காசு போட்டு படம் எடுத்திருக்கோம்டா'னு படக்குழு கத்தினாலும் கதறினாலும், கண்டுக்கவே மாட்டானுங்க. 'காசு கொடுத்து படம் பாத்திருக்கேன் மேன்'னு உரிமையா உருட்டுவானுங்க.

'பரியேறும் பெருமாள' பாராட்டித் தீர்த்ததுல இருந்து, சீம ராஜாவை சிதைச்சு சிதறடிச்சது வரைக்கும், பயங்கர பர்ஃபாமன்ஸ். '96' படத்தைப் பார்த்துட்டு வந்து, படாதபாடு படுத்தினானுங்க. எந்தப் பக்கம் திரும்பினாலும் 'காதலே காதலே தனிப்பெருந்துணையே'தான். 'ஏன்டா நாங்கள்லாம் தேவையில்லாம பொறந்துட்டமா'னு சிங்கிள்ஸ் கலாய்ச்சதும், 'போதும்டா முடியலடா மூடுங்கடா'னு சிங்கிள்ஸ் கண்ணீர்விட்டதும் , இவிங்க காதுலயும் விழல, கண்ணிலயும் படல. கல் நெஞ்சக்காரங்க! சர்காருக்கு அடிச்ச அடியை, ஏ.ஆர்.முருகதாஸ் ஏழு ஜென்மம் எடுத்தாலும் மறக்க மாட்டாரு. அப்படியோர் அடி அது!

கான்ட்ராக்டர் நேசமணி முதல் கார்ல் மார்க்ஸ்வரை - தட்டித் தூக்கும் தமிழ் ட்விப்ஸ்

மார்க்ஸ், புரட்சி, போராட்டம்னு புரட்டியெடுக்கும் கோஷ்டி ஒண்ணு இருக்கு. 'நியோலிபரலிச பொருளாதார கருத்தியல்களை எதிர்த்து மார்க்சிய பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் உற்பத்தி முறையின் கூட்டுரிமைக்காக ஜனநாயக வழியில் தோள் சேர்வோம் தோழர்'னு ட்வீட் போட்டு மயக்கம் வர வைப்பாய்ங்க. அதுக்கு நம்மாளு ஒருவன் 'படிக்கும்போதே பல்லு கூசுதுடா டேய்...'னு, நம்ம மனசுல இருக்கிறத அப்டியே சொல்லுவான் மவராசன்.

பெரியார், பெண்ணியம், முற்போக்கு, திராவிடம்னு போட்டுப் பொளக்கும் இன்னொருவகை கோஷ்டியும் இருக்கு. இவிங்கலாம் 'அதுக்கும் மேலே' அதகள பார்ட்டிகள். 'படேலுக்கு 180 மீட்டர்ல நீங்க சிலை வச்சா, பெரியாருக்கு 200 மீட்டர்ல நாங்க சிலை வைப்போம்டா'னு அவிங்களாவே அறிவிச்சுப்பாங்க. 'பாஸ்... அது அரசு அறிவிக்கணும்'னு சொன்னா, 'உனக்கெல்லாம் கடைசிவரைக்கும் எடப்பாடிதான்டா'னு சாபம் விடுவாங்க. 'சாபமா இருந்தாலும் ஒரு இரக்கம் வேணாமாடா?'னு அமைதியாவ வேண்டியிருக்கும்.

கான்ட்ராக்டர் நேசமணி முதல் கார்ல் மார்க்ஸ்வரை - தட்டித் தூக்கும் தமிழ் ட்விப்ஸ்

எப்போ எவன அட்மிட் பண்ணுவானுங்க, எப்போ எவன டிஸ்சார்ஜ் பண்ணுவானுங்கனு கண்டே புடிக்க முடியாது. முதல் நாள் பாராட்டின பவா செல்லத்துரையை, மூணாவது நாளே துவைச்சுக் காயப்போடுவானுங்க. `இதுதான் ட்விட்டர் டிசைன்’னு விளக்கம் வேற கொடுப்பானுங்க. பாவமய்யா பவா! இன்னொரு பக்கம்,  'பாட்டுப்பாடவா...’ பாட்டை ஜெயக்குமாருக்கும், ‘செல்ஃபி புள்ள...’ பாட்டை சிவக்குமாருக்கும் டெடிகேட் பண்ணி, அலற விடுவானுங்க. இவிங்களுக்கு வடிவேலுவும், கவுண்டமணியும்தான் வெப்பன் சப்ளையர்ஸ். ஜெயக்குமார், ராஜா, தமிழிசை போன்றோர் ரெகுலர் டார்கெட்ஸ். இது சரியா தப்பா’னு பஞ்சாயத்து பண்ண ஆலமரத்தடியைத் தேட வேணாம். அது வேற டிப்பார்ட்மென்ட்!

சமூகப் பிரச்னைக்கெல்லாம் இவிங்ககிட்டே ஒரு பேட்டர்ன் இருக்கு. அதாவது, இவிங்களே வழக்குப் பதிவு பண்ணி, இவிங்களே வாதாடி , இவிங்களே தீர்ப்பு எழுதிக்குவானுங்க.   அதுவும், பாகிஸ்தான் பார்டரை இந்தியப்படை தாண்டினப்போ, `மிலிட்டரி டிரஸ் இருக்கான்னு', ஜவுளிக்கடைக்காரரை மெரட்டிட்டு இருந்தானுங்க.

இவற்றுக்கெல்லாம் சேர்த்துவெச்சு, ஒரு 'டூலா' வேற போடுவானுங்க. ம்ம்... சமாளிக்கணும்!