Published:Updated:

`யார் இந்த ஜெய்சங்கர்; கேபினட் அமைச்சரானது எப்படி? - தமிழர் கடந்து வந்த பாதை

`யார் இந்த ஜெய்சங்கர்; கேபினட் அமைச்சரானது எப்படி? - தமிழர் கடந்து வந்த பாதை
`யார் இந்த ஜெய்சங்கர்; கேபினட் அமைச்சரானது எப்படி? - தமிழர் கடந்து வந்த பாதை

பிரதமர் மோடி நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மோடியுடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். கடந்த ஆட்சியில் மத்திய அமைச்சர்களாக இருந்த சிலர் உடல்நலம் காரணமாக இந்த முறை அமைச்சரவையில் பங்குகொள்ளவில்லை. இதில் அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் முக்கியமானவர்கள். மற்றும் சில அமைச்சர்களும் கழற்றிவிடப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சில புதியவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள். 

`யார் இந்த ஜெய்சங்கர்; கேபினட் அமைச்சரானது எப்படி? - தமிழர் கடந்து வந்த பாதை

தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான பா.ஜ.க கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் தேனியில் வெற்றிபெற்ற ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு நிச்சயம் அமைச்சர் பதவி கிடைக்கும் எனக் கூறப்பட்டது. ஆனால், திடீர் ட்விஸ்டாக அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் நேற்று மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். ஒருவர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன். இவருக்குப் பெரிய அறிமுகம் தேவை இல்லை. மனோகர் பாரிகர் கோவா முதல்வராகப் பதவியேற்க சென்ற பின்னர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி வழங்கினார் மோடி. அதற்கு முன்னதாகத் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

`யார் இந்த ஜெய்சங்கர்; கேபினட் அமைச்சரானது எப்படி? - தமிழர் கடந்து வந்த பாதை

நேற்றையை பதவியேற்பு விழாவில் உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்தது ஜெய்சங்கருக்கு வழங்கப்பட்ட அமைச்சர் பதவிதான். காரணம் ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக இவர் உலகின் அனைத்து நாடுகளிலும் அறியப்பட்டவர். 1955-ம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் தந்தை சுப்பிரமணியம் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாகப் பணியாற்றியவர். ஜெய்சங்கரின் மனைவி பெயர் கியாகோ ஜெய்சங்கர். இவர்களுக்குத் துருவா ஜெய்சங்கர், அர்ஜுன் ஜெய்சங்கர், மேத்தா ஜெய்சங்கர் என 3 குழந்தைகள். ஜெய்சங்கரின் கல்விக் காலம் முழுவதும் டெல்லியில்தான். ஸ்டீபன் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர் பொலிட்டிகல் சயின்ஸ் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றார். டெல்லி ஜே.என்.யு-வில் பிஹெச்.டி பெற்ற இவர் 1977-ம் ஆண்டு ஐ.எஃப்.எஸ் அதிகாரியாகத் தேர்வாகி பணியாற்றத் தொடங்கினார். பின்னர், பல்வேறு நாடுகளில் உள்ள தூதரகங்களில் பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.
 

`யார் இந்த ஜெய்சங்கர்; கேபினட் அமைச்சரானது எப்படி? - தமிழர் கடந்து வந்த பாதை

அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளராக 1985 முதல் 1988 வரை பணிசெய்தார். அதன் பின்னர், இரண்டு ஆண்டுகள் இலங்கையில் பணியாற்றினார். அப்போது இந்திய அமைதிப்படைக்கு அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இது தவிர இந்தியாவின் வெளியுறவுத்துறை தொடர்பாக ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி இருக்கிறார். இந்தக் காலங்களில் இருநாடு உறவுகளில் அதிக கவனம் எடுத்துக்கொண்ட நபர் ஜெய்சங்கர். இவரது செயல்பாடு காரணமாக அவ்வப்போது இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் பட்டியலில் இவரது பெயர் அடிபடும். 

2007 முதல் 2009 வரை சிங்கப்பூருக்கான இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றியுள்ளார். அதைத் தொடர்ந்து ஜெய்சங்கர் சீனாவுக்கான இந்திய தூதர் ஆனார். தற்போதுவரை சீனாவுக்கான இந்தியத் தூதராக அதிக காலம் பணியாற்றிய நபர் ஜெய்சங்கர்தான். சுமார் நான்கரை ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்தார். இந்தியா, சீனா இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பல ஒப்பந்தங்களில் இவரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது. இந்தியா, சீனா எல்லைப் பிரச்னை வரும்போதெல்லாம் இவரது செயல்பாடு முக்கியத்துவம் பெறும். அதைச் சிறப்பாகவும் செய்திருக்கிறார். 

`யார் இந்த ஜெய்சங்கர்; கேபினட் அமைச்சரானது எப்படி? - தமிழர் கடந்து வந்த பாதை

சீனாவுக்கான இந்தியத் தூதராகச் செயல்பட்ட காலத்தில்தான் மோடிக்கும் இவருக்கும் நட்பு தொடங்குகிறது. அப்போது மோடி குஜராத் முதல்வராக இருந்தார். மோடி முதல்முறையாகச் சீனாவுக்குச் செல்லும்போதுதான் ஜெய்சங்கரின் நட்பு கிடைக்கிறது. இவர்கள் இருவருக்குமான உறவு அதன் பின்னரும் தொடர்ந்தது. 

அதன் பின்னர், ஜெய்சங்கர் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக 2013-ம் ஆண்டு முதல் செயல்பட்டார். 2014-ம் பிரதமர் மோடி பிரதமர் ஆகிறார். குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த கலவரம் காரணமாக மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்துவந்தது. அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் மோடியை உரையாற்றச் செய்யும் சவாலான பணியைச் செய்து முடித்தவர் இந்த ஜெய்சங்கர். அன்று மோடியின் மனதில் இடம்பிடித்தவர், இப்போது மோடி அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளார். மேலும், இந்திய - அமெரிக்க உறவு பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தினார். இதன்மூலம் உலக நாடுகளை இந்தியா பக்கம் திரும்ப வைத்தார். 

அதன் பின்னர், இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் பதவி வந்தது. 2015-ம் ஆண்டு பதவியேற்ற இவர் மூன்று ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றினார். குறிப்பாக டோக்லாம் விவகாரத்தில் மோடி தொடர்ச்சியாக 2 மாதங்களுக்கு மேல் ஜெய்சங்கருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

`யார் இந்த ஜெய்சங்கர்; கேபினட் அமைச்சரானது எப்படி? - தமிழர் கடந்து வந்த பாதை

இப்படி வெளியுறவுத்துறை தொடர்பான பல விஷயங்களைச் செய்த அனுபவமிக்க இவருக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. தற்போது மோடியின் இரண்டாவது இன்னிங்ஸில்  கேபினெட் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார். முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஒருவர் ஆளும் கட்சியில் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத நிலையில் மத்திய அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். இவரது தேர்வால் உலக நாடுகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெளியுறவுத்துறையில் இவரது அனுபவம் மற்றும் சிறப்பான செயல்பாடுதான் அதற்குக் காரணம். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங், ``ஜெய்சங்கர் அபார திறமைகொண்டவர். இந்தத் துறை அவரது தலைமையில் சிறப்பாகச் செயல்படும்” என்றார். 

மத்திய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்ட யாருக்கும் இன்னும் இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. எனினும் வெளியுறவுத் துறையில் உள்ள அனுபவம் காரணமாக இவருக்கு வெளியுறவுத் துறை இலாகாதான் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.   

Vikatan
அடுத்த கட்டுரைக்கு