Election bannerElection banner
Published:Updated:

`இனி இவர்கள் அரசியல் செய்யமுடியாது!’- தமீமுன் அன்சாரி சொல்லும் காரணம்

`இனி இவர்கள் அரசியல் செய்யமுடியாது!’- தமீமுன் அன்சாரி சொல்லும் காரணம்
`இனி இவர்கள் அரசியல் செய்யமுடியாது!’- தமீமுன் அன்சாரி சொல்லும் காரணம்

`இனி இவர்கள் அரசியல் செய்யமுடியாது!’- தமீமுன் அன்சாரி சொல்லும் காரணம்

தமிழக ஆட்சியை தக்கவைத்துக்கொண்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அரசியலில் எதுவேண்டுமானாலும் மாறலாம். ஜூன் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விரைவில் முடிவெடுப்போம் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அரசியல் நிலவரம் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரியை தொடர்புகொண்டு பேசினோம்.

`இனி இவர்கள் அரசியல் செய்யமுடியாது!’- தமீமுன் அன்சாரி சொல்லும் காரணம்

மக்களவைத் தேர்தலை எப்படிப் பார்க்கிறீர்கள். இந்தத் தேர்தல் எதை உணர்த்துகிறது?

``இந்தி பேசும் மாநிலங்களில் அங்குள்ள மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பு என்பது, ஒட்டுமொத்த இந்தியாவும் ஏற்கக் கூடிய தீர்ப்பாக மாறியிருக்கிறது என்பது ஒருபுறம் வேதனையளித்தாலும், மக்களுடையே தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற ஜனநாயகப் பண்போடு இந்த தேர்தல் முடிவுகளை நாங்கள் உற்று நோக்குகின்றோம். இந்தத் தேர்தல் முடிவுகளின் மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, ஊடகங்கள், மனித உரிமை தளங்களைச் சேர்ந்தவர்கள், சாமானிய மக்கள் என பலரும் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளனர். வாக்குப்பதிவு எந்திரங்கள் நம்பகத்துக்கு இடமானதா? அல்லது நம்பகத்துக்கு அப்பாற்பட்டதா என யோசித்துக்கொண்டிருக்காமல், கடந்த காலங்களைப்போல வாக்குச்சீட்டு முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தை பலரும் வலியுறுத்துகிறார்கள்.

`இனி இவர்கள் அரசியல் செய்யமுடியாது!’- தமீமுன் அன்சாரி சொல்லும் காரணம்

வாக்குச்சீட்டு முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நடந்துமுடிந்த மக்களவைத்தேர்தலில் எது நடக்கக் கூடாது என எல்லோரும் நினைத்தார்களோ, அதுதான் நடந்துள்ளது. பா.ஜ.க இரண்டாவது முறை ஆட்சி அமைத்துள்ளதால், சமூகநீதிக்கொள்கைகள், மாநில உரிமைகள், ஜனநாயகப்பண்புகள், இந்தியாவின் பாரம்பர்யமான ஆதாரக்கோட்பாடுகள் அழிக்கப்பட்டுவிடும். இந்தி பேசும் மாநிலங்களில் சிறுபான்மை மக்கள் ஓட ஓட விரட்டியடிக்கப்படுகிறார்கள். தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். விளிம்பு நிலை மக்களுக்கும் இதேநிலைதான். தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தான் தான், பிரதமர் என்பதை கருதி, செயல்பட வேண்டும். நாட்டில் அமைதியைப் பராமரிக்க வேண்டும்.''

இந்தியாவின் தீர்ப்பிலிருந்து தமிழகம் மட்டும் தனித்து நிற்கிறதே என்ன காரணம்?

``தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, தந்தை பெரியார் வழியிலே மக்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது. இந்தத் தேர்தலில் யாருக்கு ஆச்சர்யக்குறியைப் போட வேண்டுமோ அவர்களுக்கு ஆச்சர்யக்குறியை போட்டியிருக்கிறார்கள். யாருக்கு கேள்விக்குறியைப் போடவேண்டுமோ அவர்களுக்கு கேள்விக்குறியைப் போட்டிருக்கிறார்கள். யாருக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமோ அவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலை தமிழக மக்கள் அணுகிய விதம் என்பது ஒட்டுமொத்த இந்தியாவிலே தமிழகம்தான் விழிப்புணர்வுள்ள மாநிலம் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அரசியல் செய்பவர்கள், திராவிட இயக்கத்தையும், தமிழ் தேசியத்தை பகைத்துக்கொண்டு, தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை அடமானம் வைத்துக்கொண்டு அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை தமிழக வாக்காளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.''

`இனி இவர்கள் அரசியல் செய்யமுடியாது!’- தமீமுன் அன்சாரி சொல்லும் காரணம்

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து உங்கள் முடிவு?

``தமிழகத்தில் மாநில அளவிலான அரசியல் சூழல் எதைநோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. மனிதநேய ஜனநாயகக் கட்சி அரசியல் நிகழ்வுகளை கவனித்து வருகிறது. தமிழகத்தில் நடந்துவரும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து வருகிறது. தமிழக நிகழ்வுகள் குறித்து கட்சியின் நிர்வாகக் குழு கூடிய உரிய நேரத்தில், உரியமுடிவை எடுக்கும்.''

கடந்த 5 ஆண்டுகளில் அ.தி.மு.க எம்.பி-க்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது?

``தமிழக நலனில் யாரெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ மக்களும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் தமிழகத்திலிருந்து வெற்றிபெற்றுச் சென்றவர்கள் தமிழகத்தில் தங்கள் உரிமைக்குரலை சரியாகப் பயன்படுத்தவில்லை என மக்கள் சந்தேகித்துள்ளனர்.''

`இனி இவர்கள் அரசியல் செய்யமுடியாது!’- தமீமுன் அன்சாரி சொல்லும் காரணம்

அதன் விளைவாகத்தான், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு 37 இடங்களை வாரி வழங்கியிருக்கிறார்கள். இதை அரசியல் செய்பவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். மக்கள் உணர்த்திய தீர்ப்பை ஏனோ, தானோ என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. முழுவதுமாக நாட்டின் அரசியலை உள்வாங்கி, தமிழக மக்களின் நலன் சார்ந்து செயல்பட வேண்டும். இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதைச் செய்வார்கள் என நம்புவோம்.''

நீங்கள் ஆதரித்த தி.மு.க-விலே சிறுபான்மையினருக்கான தொகுதி ஒதுக்கீடு குறைவாக உள்ளதே?

``இந்தத் தேர்தலில் தமிழகத்தில் சிறுபான்மை மக்களுக்குப் போதிய இடங்களை வழங்கவில்லை என்ற வேதனை பரவலாக இருந்துகொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் அவர்கள் எத்தகைய முடிவை எடுத்திருந்தாலும், அவர்கள் இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு சிறுபான்மை மக்களுக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப, தொகுதிகளில் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். சிறுபான்மை மக்கள் அரசியல் அதிகாரத்துக்கு வர வேண்டும் என்றால், பெரும்பான்மை மக்களின் ஆதரவில்தான் வர வேண்டும். சமூக நல்லிணத்தின் அடிப்படையில் எல்லோரும் ஒருதாய் மக்களாய் வாழ வேண்டும் என்ற உணர்வுகளை வலியுறுத்தி எதிர்கால அரசியல் களத்தை சீரமைக்க வேண்டும்.'' என்றார்.

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு