Published:Updated:

உத்தரப்பிரதேசம் டு உள்துறை அமைச்சகம்!- அமித் ஷா வளர்ந்த கதை

உத்தரப்பிரதேசம் டு உள்துறை அமைச்சகம்!- அமித் ஷா வளர்ந்த கதை

உத்தரப்பிரதேசம் டு உள்துறை அமைச்சகம்!- அமித் ஷா வளர்ந்த கதை

உத்தரப்பிரதேசம் டு உள்துறை அமைச்சகம்!- அமித் ஷா வளர்ந்த கதை

உத்தரப்பிரதேசம் டு உள்துறை அமைச்சகம்!- அமித் ஷா வளர்ந்த கதை

Published:Updated:
உத்தரப்பிரதேசம் டு உள்துறை அமைச்சகம்!- அமித் ஷா வளர்ந்த கதை

கொடுக்கப்பட்ட அசைன்மென்டைக் கச்சிதமாக முடிப்பவர். திறமையானவர், வியூகம் வகுப்பதில் வல்லவர். சர்ச்சைகளுக்குச் சொந்தக்காரர். இப்படி பா.ஜ.கவினரால் கொண்டாடப்படும் அமித் ஷாவுக்கு உள்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் டு உள்துறை அமைச்சகம்!- அமித் ஷா வளர்ந்த கதை

1991ல் குஜராத்தில் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் அத்வானிக்காக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் இன்று ஏறக்குறைய 5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். எப்படி சாத்தியமாக்கினார். பார்ப்பதற்கு நடிகர் சந்தானபாரதியின் உருவத்தை ஒத்தியிருக்கும் அவர், மும்பையில் 1964-ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். பயோ வேதியியலில் இளநிலைப்பட்டம் பெற்றவர். ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராகவும், பா.ஜ.கவின் இளைஞரணிப் பிரிவான ஏபிவிபி என்ற அகில பாரத வித்யார்த்தி பரிசத் அமைப்பின் தலைவராக இருந்தார். அகமதாபாத் மாவட்டக் கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் பணி ஆற்றியுள்ளார். 1982 -ம் ஆண்டுதான் அவர்களுக்கான சந்திப்பு நிகழ்ந்தது. இன்று இந்தியா முழுவதும் கால்பதிக்க மூலையாக திட்டம் தீட்டிய கூட்டணிக்கான விதை ஆர்.எஸ்.எஸ் பயிலகத்தில்தான் தூவப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உத்தரப்பிரதேசம் டு உள்துறை அமைச்சகம்!- அமித் ஷா வளர்ந்த கதை

மோடியை அப்போதுதான் சந்திக்கிறார் அமித் ஷா. 1985-ல் பா.ஜ.கவுக்குள் நுழைகிறார் அமித் ஷா. இளைஞரணியில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது கிராமப் புறத்தில் பா.ஜ.கவை வேர்விட்டு வளர, அமித் ஷாவின் பங்கு முக்கியமானது. 1991-ம் ஆண்டு குஜராத்தில் காந்திநகர் மக்களைவைத் தொகுதியில் அத்வானிக்காக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அத்வானியின் நம்பிக்கை பெற்றார். 2002-ம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட அமித் ஷா வெற்றி பெற்று, மோடி தலைமையிலான அமைச்சரவையில் மாநில உள்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அப்போது 2005-ம் ஆண்டு நிகழ்ந்த சொராப்தீன் சேக் கொலைவழக்கில் அமித் ஷா மீது குற்றம்சாட்டப்பட்டது. 2010 ஜூலை மாதம் 25-ம் தேதி சொராபுதீன் வழக்கில் கைது செய்யப்பட்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார்.

உத்தரப்பிரதேசம் டு உள்துறை அமைச்சகம்!- அமித் ஷா வளர்ந்த கதை

சிறையில் அடைக்கப்பட்டதும் அமித் ஷா காலி என்று எண்ணியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜாமீனில் வெளிவந்து மீண்டும் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தினார். காவல்துறை மோதல் வழக்கில் சிக்கிய அமித் ஷா குஜராத்தை விட்டு வெளியேறவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது. இதைப் பயன்படுத்திக்கொண்டு உத்தரப்பிரதேசத்தில் பிரசாரக் குழுத்தலைவராக அமித் ஷாவை நியமித்தார் மோடி. அங்கு பிராமணர்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதே அவருக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். அங்கே தங்கியிருந்து முழு மூச்சாக உழைத்தார். கிராமங்கள் தோறும் பா.ஜ.கவின் கொள்கைகளைப் பரப்பினார். உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.கவை வளர்த்ததில் அவருக்கான பங்கு முக்கியமானது. தனக்கான அசைன்மென்டைக் கச்சிதமாகச் செய்துமுடித்தார். உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் போட்டியிட மோடிக்கு ஆலோசனை வழங்கியவர் அமித் ஷாதான்.

உத்தரப்பிரதேசம் டு உள்துறை அமைச்சகம்!- அமித் ஷா வளர்ந்த கதை

பக்காவாகத் திட்டம் தீட்டி, அதைச் செய்து முடித்து அங்கு மோடியை வெற்றி பெறவும் செய்தவர். 2013-ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நிகழ்ந்த முசாபர்நகர் கலவரத்தில் பழிவாங்க வேண்டும் என்று பா.ஜ.க தொண்டர்களைத் தூண்டிவிட்டார் என்று அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. 2014-ம் ஆண்டு மக்களவைத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 71 தொகுதிகளை பா.ஜ.க வெற்றி பெற அமித் ஷாவின் வியூகமும், உழைப்பும், சாதுர்யமும்தான் காரணம் என அக்கட்சியினரால் சிலாகிக்கப்படுகிறது. பா.ஜ.க தலைவராக அமித் ஷா நியமிக்கப்படுவதற்கு முன்பிருந்த தலைவர்கள் யாரும் இந்தியா முழுவதும் கால்பதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் முழுக் கவனம் செலுத்தவில்லை. ஆனால், அமித் ஷா இந்தியா முழுவதிலும் பா.ஜ.கவைக் கால்பதிக்க வைத்துவிடவேண்டும் என்று குறியாக இருந்து செயல்பட்டார். அவரது வியூகம் தென்னிந்தியாவைத் தவிர்த்து மற்ற இடங்களில் பலித்துள்ளது எனலாம். அமித் ஷா - மோடி கூட்டணி பலம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது என்பதற்கு நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல்தான் உதாரணம். இப்போது உள்துறை அமைச்சராகியிருக்கிறார் அமித் ஷா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism