Published:Updated:

அஸ்வினுக்கு ரூ.1 கோடி: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, ஏப்.4,2011

அஸ்வினுக்கு ரூ.1 கோடி: கருணாநிதி அறிவிப்பு

உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.3 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ##~~##

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மாபெரும் வெற்றி பெற்ற கேப்டன் டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினருக்கு தமிழக அரசின் சார்பில் 3 கோடி ரூபாய் வழங்கப்படும்.

அந்த அணியிலே தமிழகத்தின் சார்பில் இடம் பெற்றிருந்த கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு 1 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

இதற்கான ஒப்புதல் தேர்தல் ஆணையத்திடம் பெறப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.