Published:Updated:

`2 பேரின் வெற்றியை பலி கொடுத்தவருக்கு கேபினட் பதவியா?!' - ரவீந்திரநாத்துக்கு எடப்பாடி வைத்த கடைசிநேர செக்

கேபினட்டில் இணைந்துவிட்டால் அடுத்து வரக் கூடிய தேர்தலில் அ.தி.மு.க என்ற கட்சியே அதல பாதாளத்துக்குப் போய்விடும். இந்தச் சூழலைப் புரிந்து கொண்டதால்தான் கேபினட்டில் இணையாமல் கட்சிக்குள் நிலவும் குழப்பத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

`2 பேரின் வெற்றியை பலி கொடுத்தவருக்கு கேபினட் பதவியா?!' - ரவீந்திரநாத்துக்கு எடப்பாடி வைத்த கடைசிநேர செக்
`2 பேரின் வெற்றியை பலி கொடுத்தவருக்கு கேபினட் பதவியா?!' - ரவீந்திரநாத்துக்கு எடப்பாடி வைத்த கடைசிநேர செக்

த்திய அமைச்சரவையில் பன்னீர்செல்வம் மகனுக்குப் பதவி கிடைக்காததில் அதீத உற்சாகத்தில் உள்ளனர் தலைமைக் கழக நிர்வாகிகள். `ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வெற்றியைப் பலிகொடுத்துத்தான் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். பதவியைக் கொடுக்காமல் அ.தி.மு.க-வைக் குழப்பத்தில் வைத்திருக்கவே பா.ஜ.க தலைமை விரும்புகிறது' என நிலவரத்தை விவரிக்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

`2 பேரின் வெற்றியை பலி கொடுத்தவருக்கு கேபினட் பதவியா?!' - ரவீந்திரநாத்துக்கு எடப்பாடி வைத்த கடைசிநேர செக்

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. `அமைச்சரவைப் பட்டியலில் எப்படியாவது ரவீந்திரநாத் வந்துவிடுவார்' என ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்கு முன்பே டெல்லியிலிருந்து கிரீன் சிக்னல் வராததை அறிந்து சோர்வின் எல்லைக்கே சென்றுவிட்டார் பன்னீர்செல்வம். `தமிழ்நாட்டிலிருந்து ஒரே ஒரு அ.தி.மு.க எம்.பி-யாக ரவீந்திரநாத் வெற்றி பெற்றுள்ளதால் மோடி அமைச்சரவையில் நிச்சயமாக இணைவார்' என டெல்லிக்கு நடையாய் நடந்தார் ஓ.பி.எஸ். அனைத்தும் கானல் நீராகிப் போனதில் அ.தி.மு.க-வில் உள்ள சீனியர்கள் சிலர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். 

டெல்லியில் நடந்தது என்ன? 

`2 பேரின் வெற்றியை பலி கொடுத்தவருக்கு கேபினட் பதவியா?!' - ரவீந்திரநாத்துக்கு எடப்பாடி வைத்த கடைசிநேர செக்

``மாநிலங்களவையில் அ.தி.மு.க சார்பாக 10 எம்.பி-கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வைத்திலிங்கம் சொல்வதைத்தான் கேட்பார்கள். ஆகவே, கேபினட் பதவி வந்து சேரும் என எதிர்பார்த்தார் வைத்தி. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, `ரவிக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறையின் இணை அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொடுத்துவிட வேண்டும்' என்ற முனைப்பில் புன்சிரிப்போடு டெல்லி சென்றார் ஓ.பி.எஸ். அவருக்கு செக் வைக்கும் விதமாக வைத்தியை முன்னிறுத்தினார் எடப்பாடி பழனிசாமி. கட்சியில் ஜூனியர் என்பதையும் தாண்டி, ரவீந்திரநாத் மீது சில கறைகள் இருப்பதால், அவரை அமைச்சர் பதவியில் அமர வைப்பதை தலைமைக் கழக நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. தேனி எம்.பி தொகுதியோடு சேர்த்து ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்தது. இதற்காக வாக்காளர்களுக்கு தலா 2,000 ரூபாயைக் கொடுப்பதற்குத் தலைமையிலிருந்து நிதி அனுப்பப்பட்டது. இந்தப் பணத்தை அப்படியே ரவீந்திரநாத்தின் வெற்றிக்காகச் செலவு செய்துவிட்டனர். கழக வேட்பாளர்களின் வெற்றியைப் பலி கொடுத்துவிட்டுத்தான் ரவீந்திரநாத் வெற்றி பெற்றிருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருக்கிறார். இருப்பினும், பன்னீர்செல்வத்துக்கென்று உள்ள டெல்லி செல்வாக்கு காரணமாக, பா.ஜ.க தலைவர்களிடம் கட்சியின் நிலவரத்தை எதார்த்தமாகக் கூறி  புரிய வைத்தார்" என விவரித்த தலைமைக் கழக நிர்வாகிகள் சிலர், 

`2 பேரின் வெற்றியை பலி கொடுத்தவருக்கு கேபினட் பதவியா?!' - ரவீந்திரநாத்துக்கு எடப்பாடி வைத்த கடைசிநேர செக்

``மோடியின் புதிய அமைச்சரவையில், `அ.தி.மு.க சார்பாக 2 பேருக்குப் பதவி கொடுக்க வேண்டும்' என்பதை முதல்வரும் துணை முதல்வரும் வலியுறுத்தினர். இதற்குப் பதில் கொடுத்த பா.ஜ.க தலைமை, `ஒருவருக்குத்தான் பதவி கொடுக்க முடியும். அது யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்' எனக் கூறியுள்ளனர். `ரவீந்திரநாத்துக்கே அந்தப் பதவியைக் கொடுங்கள்' எனக் கூறியிருக்கிறார் ஓ.பி.எஸ். இதை ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி, `அதை எங்கள் கட்சியின் செயற்குழுவில் பேசி முடிவு செய்கிறோம். ஒருவருக்கு மட்டும் கொடுத்தால் கட்சிக்குள் தேவையற்ற குழப்பம் ஏற்படும்' என உறுதியாகக் கூறிவிட்டார். பா.ஜ.க நிர்வாகிகளும், `உங்களுக்குள் குழப்பம் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இருவரும் பேசி முடிவெடுத்துவிட்டு வாருங்கள்' எனக் கூறி அனுப்பிவிட்டனர். 

`2 பேரின் வெற்றியை பலி கொடுத்தவருக்கு கேபினட் பதவியா?!' - ரவீந்திரநாத்துக்கு எடப்பாடி வைத்த கடைசிநேர செக்

இந்தப் பதிலை பன்னீர்செல்வத்தால் ஏற்க முடியவில்லை. `சசிகலா குடும்பத்தில் வாரிசு அரசியல்' எனக் கூறி டி.டி.வி.தினகரனுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஓ.பி.எஸ், இப்போது மகனுக்காக மந்திரி பதவி கேட்பதைக் கட்சியின் நிர்வாகிகளால் ஜீரணிக்க முடியவில்லை. `டெல்லி கேபினட்டில் அமர்ந்துவிட வேண்டும்' என ஆசைப்பட்ட வைத்திலிங்கத்தின் எண்ணத்துக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டுவிட்டது. ரவீந்திரநாத்துக்கும் பதவி மறுக்கப்பட்டுவிட்டது. `மகனை மந்திரியாக்கிவிட்டு, அப்படியே தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமாகிவிட வேண்டும்' என்பதுதான் பன்னீர்செல்வத்தின் தொலைநோக்குப் பார்வையாக இருந்தது. காரணம், மாநில அரசியலில் அவருக்கான முக்கியத்துவம் இல்லாததுதான். பா.ஜ.க தலைமையின் மறுப்பால், கட்சியிலும் குடும்பத்திலும் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்து வருகிறார் ஓ.பி.எஸ்" என்கின்றனர் நிதானமாக. 

`2 பேரின் வெற்றியை பலி கொடுத்தவருக்கு கேபினட் பதவியா?!' - ரவீந்திரநாத்துக்கு எடப்பாடி வைத்த கடைசிநேர செக்

``நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வோடு கூட்டணி வைத்ததால்தான் 38 தொகுதிகளில் அ.தி.மு.க-வுக்குத் தோல்வி ஏற்பட்டது. 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றியைக் கொடுத்து ஆட்சியைத் தக்க வைக்க உதவியிருக்கிறார்கள் வாக்காளர்கள். மத்திய அரசின் மீதான மக்களின் கோபம் இன்னும் தணியவில்லை. இந்தநிலையில், கேபினட்டில் இணைந்துவிட்டால் அடுத்து வரக் கூடிய தேர்தலில் அ.தி.மு.க என்ற கட்சியே அதல பாதாளத்துக்குப் போய்விடும். இந்தச் சூழலைப் புரிந்துகொண்டதால்தான் கேபினட்டில் இணையாமல் கட்சிக்குள் நிலவும் குழப்பத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இப்படியொரு குழப்பம் நீடிப்பதைப் பா.ஜ.க நிர்வாகிகளில் சிலர் விரும்புகிறார்கள். அந்தவகையில் ரவீந்திரநாத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாமல் போனது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதாக மாறிவிட்டது" எனவும் சுட்டிக் காட்டுகின்றனர் கட்சியின் சீனியர்கள். 
 

Vikatan