Published:Updated:

"உங்கள் கறுப்புத் துண்டைக் கொடுங்கள்!" - வைகோவிடம் நெகிழ்ந்த மம்தா!

"உங்கள் கறுப்புத் துண்டைக் கொடுங்கள்!" - வைகோவிடம் நெகிழ்ந்த மம்தா!

"உங்கள் கறுப்புத் துண்டைக் கொடுங்கள்!" - வைகோவிடம் நெகிழ்ந்த மம்தா!

"உங்கள் கறுப்புத் துண்டைக் கொடுங்கள்!" - வைகோவிடம் நெகிழ்ந்த மம்தா!

"உங்கள் கறுப்புத் துண்டைக் கொடுங்கள்!" - வைகோவிடம் நெகிழ்ந்த மம்தா!

Published:Updated:
"உங்கள் கறுப்புத் துண்டைக் கொடுங்கள்!" - வைகோவிடம் நெகிழ்ந்த மம்தா!

அரசியல், போராட்டக் களம் என எதுவாக இருந்தாலும் தவிர்க்க முடியாத பெயர் வைகோ. நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகள் அரசியல் தலைவர்கள் பலருக்கும் மறக்க முடியாத ஒன்று. வைகோவைப் பற்றி ம.தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யாவிடம் பேசினோம். 

"உங்கள் கறுப்புத் துண்டைக் கொடுங்கள்!" - வைகோவிடம் நெகிழ்ந்த மம்தா!

``கூட்டணி வெற்றி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``மகத்தான வெற்றி. மக்களுடன் நாங்கள் நிற்கிறோம் என  மக்கள் நம்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. மக்களின் உணர்வுகளை நாங்கள் பிரதிபலிப்போம். எல்லா தொகுதிகளிலும் சென்று கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் தலைவர்களும், எங்கள் தலைவர் வைகோவும் பிரசாரம் செய்தார்கள். அதற்குப் பலன் கிடைத்திருக்கிறது.'' 

``ஒருவேளை எம்.பி-யாகச் செல்லும் பட்சத்தில் வைகோவின் செயல்பாடு எப்படி இருக்கும்?''

``ஏற்கெனவே அவர் பல பிரதமர்களைச் சந்தித்தவர். அனைத்து பிரதமர்களையும் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தவர். 108 அணி சேரா நாடுகள் தலைவியாக இருந்த அன்னை இந்திரா, 10 பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர் மன்மோகன் சிங். இதுமாதிரியான ஆளுமைகளுடன் பணியாற்றியிருக்கிறார். மோடி குஜராத் முதலமைச்சராக இருக்கும்போது அங்கு ஏற்பட்ட இனக்கலவரத்தில் சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக வாஜ்பாயின் விருப்பத்தின் பேரில் தலைவர் வைகோ குஜராத்துக்குப் பேசச் சென்றிருக்கிறார். குஜராத்தில் வைகோவின் ஆங்கில உரையை இந்தியில் மொழிபெயர்த்தவர் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி. மோடி, இடைமறித்து மக்களுக்குக் குஜராத் மொழியில் கூறினால்தான் புரியும் என அவரே மொழிபெயர்த்தார். வைகோ பெரும் செயலாற்றுவார் என்பது அனைவருக்கும் புரியும்.''

"உங்கள் கறுப்புத் துண்டைக் கொடுங்கள்!" - வைகோவிடம் நெகிழ்ந்த மம்தா!


``வைகோ ராசியில்லாதவர் எனப் பலரும் சொல்லுகின்ற கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``திராவிட இயக்கம் பகுத்தறிவு இயக்கம். பகுத்தறிவு இயக்கத்தில் இது மாதிரியான நம்பிக்கைகளுக்கெல்லாம் இடமில்லை. தலைவர் வைகோவைப் பொறுத்தவரை கடந்தகால நாடாளுமன்றத் தேர்தல்களில் அவருடன் கூட்டணி வைத்து பல தொகுதிகளில் கூட்டணியுடன் வெற்றியும் பெற்றிருக்கிறோம். மத்திய அமைச்சரவையிலும் பங்கேற்றிருக்கிறோம். அண்ணாவின் கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என வைகோ நாடாளுமன்றத்தில் இருக்கும்போது முயற்சி செய்தவரை இப்படிச் சுருக்கிப் பார்ப்பது பற்றி யோசிக்கத் தேவையில்லை. தலைவர் வைகோவை கொள்கை ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் இதுபோன்ற விஷம பிரசாரங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.''

"உங்கள் கறுப்புத் துண்டைக் கொடுங்கள்!" - வைகோவிடம் நெகிழ்ந்த மம்தா!

``இதுமாதிரியான விமர்சனங்களை வைகோ எப்படி எடுத்துக்கொள்வார்?''

``அலட்சியப்படுத்த வேண்டியது என்று கடந்து சென்றுவிடுவார். நாங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது, `அரசியலில் எதிரி நம்மை பலம் கொண்டு தாக்குகிறான் எனில் நாம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம்' என்று தந்தை பெரியார் சொல்வார். `நாம் சரியான பாதையில் செல்கிறோம். நம்மை எதிர்கொள்ள முடியாமல் பொய் பிரசாரங்களைச் செய்கிறார்கள்' என்பார்.''

"உங்கள் கறுப்புத் துண்டைக் கொடுங்கள்!" - வைகோவிடம் நெகிழ்ந்த மம்தா!

``வைகோவைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்...''

``வங்கத்துக்கு எதிராக நெருக்கடி வரும்போது நாடாளுமன்றத்தில் மம்தா பானர்ஜி விவாதத்துக்குத் தயாராக வந்தார். அன்று நாடாளுமன்றத்துக்கு வந்த மம்தா பானர்ஜி எங்கள் தலைவரின் அருகில் வந்து அவருடைய கறுப்புத் துண்டைக் கேட்கிறார் பானர்ஜி. ஏன் என்று வைகோ கேட்க... `இன்று பெரிய விவாதத்துக்கு உரையாற்றப்போகிறேன். உங்கள் கறுப்புத் துண்டைக் கையில் வைத்துக் கொண்டால் உணர்ச்சிகரமாக, ஆவேசமாக உங்களைப்போல கருத்துகளை எதிர்கொள்ள முடியும்' என்று வாங்கிச் சென்று பேசியுள்ளார்.

2007 ஜூன் மாதம் விழுப்புரத்தில் மண்டல மாநாடு என்னுடைய தலைமையில் நடக்கும்போது `இவ்வளவு சாதாரண ஒருவனுக்கு உயரிய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறீர்கள். இந்தக் களத்தில் ஏதாவது ஒரு தருணத்தில் நான் இறக்க நேர்ந்தால், மீண்டும் பிறக்க விரும்புகிறேன். பிறக்கும்போது உங்கள் குடும்பத்தில் ஒருவனாகவே பிறக்க ஆசை. ஆனால், வாரிசு அரசியலை விரும்பாதவர் நீங்கள். உங்கள் வெற்றிகளையும் வீரத்தழும்புகளையும் ஆரத்தழுவிக் கொண்டு இனத்தின் அடையாளமாக இருக்கின்ற கறுப்பு துண்டாகப் பிறக்க விரும்புகிறேன்' என்று கூறியிருக்கிறேன்'' என்றார் உற்சாகத்துடன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism