Published:Updated:

“ஆட்டத்தை ஆரம்பித்த தி.மு.க!” - எம்.எல்.ஏ-க்களை கண்காணிக்கும் எடப்பாடி

“ஆட்டத்தை ஆரம்பித்த தி.மு.க!” - எம்.எல்.ஏ-க்களை கண்காணிக்கும் எடப்பாடி
“ஆட்டத்தை ஆரம்பித்த தி.மு.க!” - எம்.எல்.ஏ-க்களை கண்காணிக்கும் எடப்பாடி

“ஆட்டத்தை ஆரம்பித்த தி.மு.க!” - எம்.எல்.ஏ-க்களை கண்காணிக்கும் எடப்பாடி

நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்பாக இருந்தபோது, தமிழகத்தில் மற்றொரு பரபரப்பும் சேர்ந்தே இருந்தது. எடப்பாடி ஆட்சி நீடிக்குமா என்ற கேள்விக்கு 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தமிழக வாக்காளர்கள் முடிவு செய்ய காத்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான நேரத்தில், இடைத்தேர்தல் முடிவுகள் குறித்தும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, 9 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றதால் ஆட்சி தக்க வைக்கப்பட்டது.

அடுத்த இரண்டாண்டுகள் இனி அ.தி.மு.க ஆட்சிதான் என்ற உற்சாகம் அ.தி.மு.க தொண்டர்களிடம் இருந்தது. ஆனால், எடப்பாடிக்கு  இந்த வெற்றி கொண்டாட்டத்துக்குரியது இல்லை என்ற உண்மை தெரிந்திருந்தது. "இந்த வெற்றியை நாம் சாகசமாகக் கொண்டாட முடியாது. நாம் இன்னும் பார்டரில்தான் இருக்கிறோம். அந்த நிஜத்தை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்" என தனது நெருங்கிய வட்டாரத்திடம் கலக்கத்துடன் கூறியுள்ளார் எடப்பாடி. 

“ஆட்டத்தை ஆரம்பித்த தி.மு.க!” - எம்.எல்.ஏ-க்களை கண்காணிக்கும் எடப்பாடி

ஏற்கெனவே அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக 113 எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் உள்ளனர். இந்நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து 122 எம்.எல்.ஏ-க்களுடன் அ.தி.மு.க ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், கருணாஸ், தமிமுன் அன்சாரி மற்றும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் என அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் 5 பேர் இருக்கிறார்கள். இந்த 5 பேரும் எப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினாலும் ஆட்சியைக் கவிழ்ப்பதில் குறியாக இருக்கிறார்கள். இதற்கிடையில் தி.மு.க எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் இருக்கிறது. இதற்காக தி.மு.க 'மாஸ்டர் பிளான்' ஒன்றை வகுத்துள்ளது. 

“ஆட்டத்தை ஆரம்பித்த தி.மு.க!” - எம்.எல்.ஏ-க்களை கண்காணிக்கும் எடப்பாடி


 

அ.தி.மு.க கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப் பூசல்களில் பல அ.தி.மு.க பிரமுகர்கள் அதிருப்தியில் உள்ளனர். அதில் 122 எம்.எல்.ஏ-க்களில் சிலரும் அடக்கம் என்பதுதான் முக்கியமான விஷயம். வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருந்தாலும் தங்களால் பெரிதாக எதுவும் செயலாற்ற முடியவில்லை என்ற அதிருப்தி அவர்களுக்கு இருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தும்கூட இடைத்தேர்தலில் பெரிய அளவில் வெற்றி கிடைக்காததன் காரணம் என்ன என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு விழுந்த 'மரண அடி' வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொளிக்கும் என்ற அச்சமும் அவர்களிடத்தில் உள்ளது. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்று அ.ம.மு.க-வில் இணைந்தாலும் அது எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்ற அச்சமும் அவர்களுக்கு உள்ளது. இந்தக் காரணங்கள் இயல்பாகவே தி.மு.க-வின் பக்கம் அவர்களின் கவனம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

“ஆட்டத்தை ஆரம்பித்த தி.மு.க!” - எம்.எல்.ஏ-க்களை கண்காணிக்கும் எடப்பாடி

அதை தி.மு.க-வும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிடுகிறார்கள். அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்று வருவதாக தி.மு.க-விலிருந்து தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. எத்தனை எம்.எல்.ஏ-க்கள், எந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-க்கள் போன்ற விஷயத்தில் கவனமாக இருக்கிறார்கள் தி.மு.க-வினர். அவர்களை அணி மாற வைத்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய வைத்தாலே எடப்பாடி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுவிடும். மறுபுறம் தி.மு.க இப்படி ஒரு மூவ் செய்யலாம் என்று எடப்பாடியும் எண்ணியிருக்கிறார். எனவே, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை உளவுத்துறையின் கீழ் தீவிர கண்காணிப்பு செய்ய சொல்லியுள்ளார். சந்தேகத்துக்கு இடமான எம்.எல்.ஏ-க்களின் போன்கள் டேப் செய்யவும் எடப்பாடி தரப்பு உத்தரவிட்டுள்ளது.  

“ `வெயிட் அண்ட் சி' எனத் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதன் பின்னணி என்ன என்பது மெல்ல மெல்ல இப்போதுதான் வெளிவர ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்திலிருந்து 37 எம்.பி-க்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி தனது செல்வாக்கை நிரூபித்துள்ள தி.மு.க-வின் இந்த மாஸ்டர் பிளான் எந்த அளவுக்குக் கைகொடுக்கும் என்பது பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்” என்கிறார்கள் தி.மு.க உடன்பிறப்புகள். 

Vikatan
அடுத்த கட்டுரைக்கு