Election bannerElection banner
Published:Updated:

39 தொகுதிகள்... 39 பிரச்னைகள், என்ன செய்ய வேண்டும் உங்கள் எம்.பி? #VikatanInteractive

39 தொகுதிகள்... 39 பிரச்னைகள், என்ன செய்ய வேண்டும் உங்கள் எம்.பி? #VikatanInteractive
39 தொகுதிகள்... 39 பிரச்னைகள், என்ன செய்ய வேண்டும் உங்கள் எம்.பி? #VikatanInteractive

கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை, தகர்த்து வரும் நீட் தேர்வு, டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டம், தெற்கில் நியூட்ரினோ திட்டம், கொங்கு மண்டலத்தில் கெயில் எரிவாயு திட்டம், விளை நிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டம், எட்டு வழிச் சாலை என்று மக்கள் எதிர்க்கும் திட்டங்கள் ஏராளம்.

வேலூரைத் தவிர மற்ற 38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து, எம்.பி-க்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். தேனியில் அ.தி.மு.க-வும் மற்ற தொகுதிகளில் தி.மு.க கூட்டணியும் வெற்றிபெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை, தகர்த்து வரும் நீட் தேர்வு, டெல்டாவைப் பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், தெற்கில் நியூட்ரினோ திட்டம், கொங்கு மண்டலத்தில் கெயில் எரிவாயு திட்டம், விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம் அமைக்கும் திட்டம், எட்டு வழிச்சாலை என மக்கள் எதிர்க்கும் திட்டங்கள் ஏராளம். இந்நிலையில், ம.தி.மு.க பொருளாளர் கணேசமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், எழுத்தாளர்கள் சு.வெங்கடேசன், கனிமொழி என நாடாளுமன்றத்துக்குச் செல்லும் தமிழக எம்.பி-க்கள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா எனத் தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைவர்கள் இல்லாத நிலையில், மாநில உரிமையை மீட்டெடுப்பதற்கான குரல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு எம்.பி-க்கும் ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் தொகுதி நிதி வழங்கப்படும். அந்த நிதியை எம்.பி, தங்கள் தொகுதியின் மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு எம்.பி-யின் செயல்பாடு என்பது மக்களுக்கு மிகவும் முக்கியம். தேர்தல் நேரத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில், எம்.பி-க்களின் செயல்பாடு தொடர்பாக, என்ன செய்தார் எம்.பி என்று ஊடகங்களில் செய்தி வெளியாவது வழக்கம். 

இந்நிலையில் தொகுதியில் உள்ள பிரச்னைகள், கோரிக்கைகள் தொடர்பாக 'என்ன செய்ய வேண்டும் எம்.பி' என்ற தலைப்பில், தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள 38 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி மக்களின் கோரிக்கைகளை இந்தக் கட்டுரையில் இணைத்துள்ளோம். இந்தக் கோரிக்கைகளைச் சம்பந்தப்பட்ட எம்.பி-யின் கவனத்துக்கும் எடுத்துச் செல்ல உள்ளோம். 

39 தொகுதிகள்... 39 பிரச்னைகள், என்ன செய்ய வேண்டும் உங்கள் எம்.பி? #VikatanInteractive
39 தொகுதிகள்... 39 பிரச்னைகள், என்ன செய்ய வேண்டும் உங்கள் எம்.பி? #VikatanInteractive
Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு