Published:Updated:

`நமது அம்மா'வில் தொடங்கிய எதிர்ப்பு... பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க உறவு முறிவா..?

`நமது அம்மா'வில் தொடங்கிய எதிர்ப்பு... பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க உறவு முறிவா..?
`நமது அம்மா'வில் தொடங்கிய எதிர்ப்பு... பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க உறவு முறிவா..?

கடந்த சில மாதங்களாக பி.ஜே.பி எது, அ.தி.மு.க எது என்று பிரித்துப் பார்க்க முடியாமல் செய்திகள் வந்து கொண்டிருந்தன.

டந்த சில மாதங்களாக பி.ஜே.பி எது, அ.தி.மு.க எது என்று பிரித்துப் பார்க்க முடியாமல் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான 'நமது அம்மா'வில் செய்திகள் வெளிவந்துகொண்டிருந்தன. அதே நாளிதழில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பி.ஜே.பி-யை மறைமுகமாகத் தாக்கி, குத்தீட்டி என்ற பெயரில் கட்டுரை எழுதப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க தலைமையின் மன ஓட்டமே, நமது அம்மா இதழில் வெளியாகும் என்பதால், தற்போது பி.ஜே.பி மீதான விமர்சனத்தையும் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது என்றும், மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க இடம்பெறாத நிலையில் இந்த விமர்சனம் இன்னும் கூடும் என்று சொல்லப்படுகிறது.

`நமது அம்மா'வில் தொடங்கிய எதிர்ப்பு... பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க உறவு முறிவா..?

`நமது அம்மா' நாளிதழில் ஜூன் 2-ம் தேதியன்று, 'நாடும் மொழியும் நமக்கிரு கண்கள்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரையில் ''தமிழகத்தில் 1965-ல் ஏற்பட்ட மொழிப்போர்தான், காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் புதைசேற்றில் தள்ளியது. இன்று வரை அந்தக் கட்சியால் மீண்டெழ முடியவில்லை. அதன் பிறகு, தேசத்தை ஆளவந்த அத்தனை அரசுகளும் கடந்த காலத்தை மனதில்கொண்டு அவசியமற்ற மொழித்திணிப்பைச் செய்யவில்லை. தேசியக்  கல்வித் திட்டங்கள் வாயிலாக மொழித் திணிப்புகள், சில தருணங்களில் முன்வைக்கப்பட்டபோது அவற்றுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பால் அத்தகைய முயற்சிகள் கைவிடப்பட்டன. ஆகவே, இனம், மொழி உள்ளிட்ட உணர்ச்சிகளாலும் சுயமரியாதையாலும் இனமானத்தாலும் கட்டி எழுப்பப்பட்ட விவகாரங்களில் நிதானத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிப்பது ஒன்றே வேற்றுமையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்பதை ஆட்சியில் இருப்போர் புரிந்துகொள்வது உத்தமம்'' என்று மும்மொழிக் கொள்கையைக் கையில் எடுத்திருக்கும் மத்திய பி.ஜே.பி அரசைக் குத்திக்காட்டி எழுதப்பட்டுள்ளது. 

`நமது அம்மா'வில் தொடங்கிய எதிர்ப்பு... பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க உறவு முறிவா..?

இதேபோல், மே 29-ம் தேதி வெளியான 'நமது அம்மா'வில் 'உச்ச நட்சத்திரம் உரைப்பது சத்தியம்' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த கட்டுரையில், 'தேர்தல் முடிவுகள் குறித்து சூப்பர் ஸ்டார் தெரிவித்துள்ள கருத்தில், தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான பி.ஜே.பி கூட்டணி வெற்றிபெறாமல் போனதற்கு நீட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட பிரசாரமே காரணம் என்று கூறியிருக்கிறார். அவர் உண்மையைக் கூறியிருக்கிறார். நீட் தேர்வுக்குத் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க, நீதிமன்றம் மறுத்துவிட்டதும், விளைநிலங்களைப் பாதிக்கும் திட்டங்களைக் கைவிடக் கூறிய கோரிக்கைக்குச் செவிமடுப்பதிலும், இத்திட்டம் பற்றி எடுத்துரைப்பதிலும் பி.ஜே.பி அரசு முழுமைபெறத் தவறியது. பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தியபோதிலும் எதிர்க்கட்சிகள் உருவாக்கிய எதிர்ப்புப் பிரசாரத்தின் விளைவுதான், தமிழகத்தில் மக்களின் ஆதரவு, அ.தி.மு.க கூட்டணிக்குக் கைகூடாமல் போனதற்குக் காரணம். 'எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிப்பதில் பின் தங்கிவிட்டோம்' என்ற காலாவின் கருத்தை உள்வாங்கிக் கொள்வோம் என்று, நீட், ஹைட்ரோ கார்பன் திட்டங்களில் ஆர்வம் காட்டும் பி.ஜே.பி-யின் செயல்பாட்டைக் குத்திக்காட்டி  எழுதப்பட்டிருந்தது.

சித்ரகுப்தன், குத்தீட்டி என்ற பெயரில் எழுதிவரும் நமது அம்மா நாளிதழின் ஆசிரியரான மருது அழகுராஜ், சசிகலாவால் நமது எம்.ஜி.ஆரில் பணியமர்த்தப்பட்டவர். பின்பு, எடப்பாடியின் ஆதரவாளராக மாறி, நமது அம்மா நாளிதழைத் தொடங்கினார். தன்னுடைய எழுத்துகளால் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் கவர்ந்தவர் என்பதால், கட்சியிலுள்ள அமைச்சர்கள் அனைவரும் அவருக்கு அஞ்சுவார்கள். இந்த நிலையில் அவர் 'நமது அம்மா'வில் தொடர்ந்து இப்படி இடித்துக் கூறத்தொடங்கியிருப்பதைப் பார்த்து பி.ஜே.பி நிர்வாகிகள் முணுமுணுத்து வருகிறார்கள். "இது யாருக்குப் பிரச்னையை உண்டாக்கும் என்பது தெரியவில்லை" என்கிறார்கள் அ.தி.மு.க-வில் உள்ள சிலர்.  

Vikatan
அடுத்த கட்டுரைக்கு