Published:Updated:

விற்பனைப் பிரதிநிதி, ஊடக வேலை, கட்சிப் பேச்சாளர், நிதியமைச்சர்... நிர்மலா சீதாராமன் புரொஃபைல்!

விற்பனைப் பிரதிநிதி, ஊடக வேலை, கட்சிப் பேச்சாளர், நிதியமைச்சர்... நிர்மலா சீதாராமன் புரொஃபைல்!
விற்பனைப் பிரதிநிதி, ஊடக வேலை, கட்சிப் பேச்சாளர், நிதியமைச்சர்... நிர்மலா சீதாராமன் புரொஃபைல்!

சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகப் பதவி வகித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார். இன்று, இந்தியாவின் முழுநேர முதல் பெண் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று பெருமை பெற்றிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன். 

சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகப் பதவி வகித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம் செட்டியார். இன்று, தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று பெருமை பெற்றிருக்கிறார் நிர்மலா சீதாராமன்

1947 ஆகஸ்ட் 15-ல் நாடு சுதந்திரம் பெற்றது. அதுவரை இருந்துவந்த வைஸ்ராய் பதவி ஒழிக்கப்பட்டு, கவர்னர் ஜெனரல் பதவி ஏற்படுத்தப்பட்டது. ஜனாதிபதி பதவிக்கு நிகரான இந்தப் பதவியில் மவுன்ட்பேட்டன் பிரபு நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜவஹர்லால் நேரு தலைமையில் மத்திய அமைச்சரவை டெல்லியில் அமைக்கப்பட்டது. பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக வல்லபபாய் படேலும் பொறுப்பேற்றனர். சுதந்திரத்துக்குப் பின் அமைந்த அமைச்சரவையின் முதல் நிதி மந்திரியாக ஆர்.கே.சண்முகம் செட்டியார் நியமிக்கப்பட்டார். பொருளாதாரத்தில் சிறந்த மேதையாகத் திகழ்ந்த இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இதன் மூலம் சுதந்திர இந்தியாவின் முதல் நிதி மந்திரி பதவியை வகித்தவர் தமிழர் என்ற பெருமையை நமக்குப் பெற்றுத் தந்தார். 

ஆர்.கே.சண்முகம் செட்டியாரைத் தொடர்ந்து ஜான் மத்தாய் (1949 - 1951), சிந்தமன்ராவ் தேஷ்முக் (1951 - 1957 ), டி.டி.கிருஷ்ணமாச்சாரி (1957 - 1958), ஜவஹர்லால் நேரு (1958 - 1959), மொரார்ஜி தேசாய் (1959 - 1964) என 20 பேர் மத்திய நிதி அமைச்சர் பொறுப்பை வகித்துள்ளனர். 

விற்பனைப் பிரதிநிதி, ஊடக வேலை, கட்சிப் பேச்சாளர், நிதியமைச்சர்... நிர்மலா சீதாராமன் புரொஃபைல்!

மேலே சொன்ன பட்டியலில், ஆர்.கே.சண்முகம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரி, சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், ப.சிதம்பரம் ஆகிய ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் சி.சுப்பிரமணியம், இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் எனப் பெயரெடுத்தவர். ஆர்.வெங்கட்ராமன், நாட்டின் ஜனாதிபதி பதவி வகித்த முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். அமைச்சர் ப.சிதம்பரம், நான்கு முறை நிதி அமைச்சராகப் பணியாற்றியவர். 

இந்த வரிசையின் தொடர்ச்சியாக, நாட்டின் 31-வது நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நிர்மலா சீதாராமன். அவரை பற்றிய சில தகவல்கள்...

* மதுரையில் பிறந்தவர். நிர்மலாவின் அப்பா நாராயணன் முசிறியைச் சேர்ந்தவர்; அம்மாவின் சொந்த ஊர் திருவெண்காடு. அப்பா நாராயணன் ரயில்வேயில் பணிபுரிந்ததால், தமிழகத்தின் பல ஊர்களில் நிர்மலாவின் பால்யம் அமைந்தது. திருச்சியில் உள்ள சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் எக்கனாமிக்ஸ் இளங்கலை படிப்பை முடித்த நிர்மலா, பொருளாதாரத்தில் முதுகலை மற்றும் எம்.பில் படிப்பை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முடித்தார். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் நிர்மலாவின் குடும்பம் வசிப்பது தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில்.

* டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிர்மலாவுக்கு அறிமுகமானார் பரக்காலா பிரபாகர், ஆந்திராவைச் சேர்ந்தவர். 1986-ல் இவர்களுடைய திருமணம் முடிந்தது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கம்யூனிகேஷன்ஸ் அட்வைஸராக இருந்தவர் பிரபாகர். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

விற்பனைப் பிரதிநிதி, ஊடக வேலை, கட்சிப் பேச்சாளர், நிதியமைச்சர்... நிர்மலா சீதாராமன் புரொஃபைல்!

* ஆரம்பகாலத்தில் லண்டனில் வீட்டு அலங்காரப் பொருள்கள் நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதியாக வாழ்க்கையைத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன். பின்னர், இங்கிலாந்தின் அக்ரிகல்சரல் இன்ஜினீயர்ஸ் அசோசியேஷனின் பொருளாதார நிபுணருக்கு உதவியாளராகப் பணியாற்றினார். சிறிது காலம் பிபிசி ஊடகத்தில் உலக சேவைப் பிரிவில் வேலைபார்த்த அனுபவமும் அவருக்கு உண்டு. தேசிய பெண்கள் நல ஆணையத்திலும் உறுப்பினராகப் பணியாற்றினார்.

* 2008-ல் பி.ஜே.பியில் சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஒரு பேச்சாளராகத் தன் பயணத்தை ஆரம்பித்தார். 2014-ல் ஆந்திராவிலிருந்து ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனார். 2016-ல் கர்நாடகாவிலிருந்து ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* 2017-ம் ஆண்டு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பதவியேற்றார் நிர்மலா சீதாராமன். இதன் மூலம், இந்திரா காந்திக்குப் பிறகு அந்தப் பொறுப்பை வகித்த இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்றார்.

*2019-ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார் நிர்மலா சீதாராமன். 1970-71-ல் பிரதமர் பொறுப்புடன் கூடுதலாக நிதி அமைச்சராகப் பணியாற்றிய இந்திரா காந்திக்குப் பின், நாட்டின் இரண்டாவது பெண் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று பெருமை அடைந்துள்ளார் நிர்மலா.

* உலகமே கவனம் வைத்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்தின் பொறுப்பு, 59 வயதாகும் நிர்மலா சீதாராமன் கைகளில். செயல்கள் தொடங்கட்டும்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு