Published:Updated:

`கெளரவமாக வாழ ஆசைப்படுறோம்!’ - திருமண பதிவுச் சான்றிதழ் கேட்டு மனு அளித்த திருநங்கைகள்

`கெளரவமாக வாழ ஆசைப்படுறோம்!’ - திருமண பதிவுச் சான்றிதழ் கேட்டு மனு அளித்த திருநங்கைகள்
`கெளரவமாக வாழ ஆசைப்படுறோம்!’ - திருமண பதிவுச் சான்றிதழ் கேட்டு மனு அளித்த திருநங்கைகள்

`கெளரவமாக வாழ ஆசைப்படுறோம்!’ - திருமண பதிவுச் சான்றிதழ் கேட்டு மனு அளித்த திருநங்கைகள்

‘ஆண் - திருநங்கை திருமணத்தைப் பதிவுசெய்வதற்கு வழிவகை இல்லை’ எனச் சார்பதிவாளர் கையை விரிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடியைச் சேர்ந்த அருண்குமார் என்ற ஆணும், ஸ்ரீஜா என்ற திருநங்கையும் அவர்களது திருமணத்திற்கு, திருமண பதிவுச் சான்றிதழைப் போராடிப் பெற்றார்கள். தமிழகத்தில் அப்படியொரு சம்பவத்தை முதல் முதலாக நிகழ்த்திக் காட்டியவர்கள், இந்த அருண்குமார் - ஸ்ரீஜா தம்பதியர்தான். ‘இதைப்போல நானும் ஒரு ஆண் நபரைத்  திருமணம் செய்திருக்கிறேன். எங்களையும் அரசு அங்கீகரித்து திருமண பதிவுச் சான்றிதழை அரசு கொடுக்க வேண்டும்’ என     10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஈரோடு கலெக்டரிடம் மனு அளிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோடு ஆலமரத்தெரு பகுதியைச் சேர்ந்த திருநங்கை சிம்ரன் தலைமையில், ஈரோடு கலெக்டரிடம் மனு அளிக்க வந்த திருநங்கைகள், ‘மனத்தளவில் பெண் தன்மையை உணர்ந்த நாங்கள், உடலளவிலும் அறுவைசிகிச்சை செய்துகொண்டு பெண்ணாக வாழ்ந்து வருகிறோம். எங்களை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்துகொள்ளும் ஆண்கள், ஒருகட்டத்தில் எங்களை நடுத்தெருவில் நிர்க்கதியாய் விட்டுவிடுகின்றனர். எங்களுடைய திருமணம் சமூகத்தில் அங்கீகரிக்கப்படாததாக இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களாகிய நாங்கள் எங்கேயும் முறையிட முடியாத நிலை இருக்கிறது. சமீபத்தில், தூத்துக்குடியில் ஆண் - திருநங்கை தம்பதியினரின் திருமணத்தை அங்கீகரித்து திருமண பதிவுச் சான்றிதழை வழுக்கியிருக்கின்றனர். அதைப்போலவே, நாங்களும் ஆண்களைத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திவருகிறோம். எங்களுடைய எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, ஈரோட்டிலும் ஆண் - திருநங்கை திருமணத்திற்கு திருமண பதிவுச் சான்றிதழை வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.

`கெளரவமாக வாழ ஆசைப்படுறோம்!’ - திருமண பதிவுச் சான்றிதழ் கேட்டு மனு அளித்த திருநங்கைகள்

இதுகுறித்து திருநங்கை சிம்ரனிடம் பேசினோம். “ஈரோட்டைச் சேர்ந்த தினேஷ் பாலாஜி என்பவர், என்னைக் காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு பத்ரகாளியம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். ‘குழந்தை இல்லாட்டியும் பரவாயில்லை, ஆப்பரேஷன் செஞ்சு ஒரு முழுமையான பெண்ணா வா. சமுதாயத்துல நாம ஒண்ணா சேர்ந்து வாழலாம்’னு சொன்னார். அவருக்காக நான் ஆப்பரேஷன் பண்ணி, ஒரு முழுமையான திருநங்கையா மாறுனேன். ஆனா, ஒருகட்டத்துல அவர் என்னை விட்டு பிரிஞ்சிட்டார். அதுல மனசளவுல நான் ஒடைஞ்சு போனாலும், மன தைரியத்தை விடலை. சில வருடங்களுக்குப் பிறகு, என் கணவர் இப்போ என்கூட வந்து வாழ்ந்துக்கிட்டு இருக்கார். ஆனா, மன தைரியம் இல்லாத பாதிக்கப்பட்ட திருநங்கைகள் சிலர், யார்கிட்ட போய் முறையிடுறதுனு தெரியாம தற்கொலை செஞ்சுக்குறாங்க. சமீபத்தில்கூட ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான மதுமிதா என்ற திருநங்கை, இந்த மாதிரியான விவகாரத்தால் தூக்கிட்டு தற்கொலை செஞ்சுக்கிட்டா. இந்த மாதிரியான திருமண சிக்கல்களால், வெளியே தெரியாமல் பல திருநங்கைகள் இறந்துபோறாங்க.

திருநங்கைகள்னா பாலியல் தொழில் செய்வாங்க, பிச்சை எடுப்பாங்கன்னு எல்லாரும் பொதுவா நினைக்குறாங்க. நாங்களும் குடும்பப் பொண்ணா வாழ ஆசைப்படுறோம். கல்வி, வேலைனு அரசு எங்களுக்கு எவ்வளவோ சலுகைகளைக் கொடுக்குது. அதேமாதிரி, எங்களோட திருமணத்தையும் முறையா அங்கீகரிச்சா, நாங்களும் சமூகத்தில் கெளரவமா வாழ்வோம். அதேபோல, திருமணம் என்ற பெயரில் ஆண்கள் திருநங்கைகளை ஏமாற்றுவதையும் தடுக்க முடியும்” என்றார். 


  

Vikatan
அடுத்த கட்டுரைக்கு